270. பகரு முத்தமிழ்


ராகம் : சௌராஷ்டிரம்தாளம்: மிஸ்ரசாபு 1½ + 2 (3½)
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப்பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத்தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் பெருமாளே.

Learn The Song




Learn The Talam



Paraphrase

பகரு(ம்) முத்தமிழ் பொருளு(ம்) (pagaru muththamizh poruLum) : The meaning of famous works in the three branches of Tamil (namely, literature, music and drama), புகழப்படுகின்ற முத்தமிழ் நூல்களின் செம்பொருளையும் (செம்பொருள் = உண்மைப் பொருள், முதற்பொருளான கடவுள், அறம்);

மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும் (meyththavap payanum eppadip pala vAzhvum) : the benefit arising from true penance; variety and diversity in life; உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், பற்பல தன்மை கொண்ட பலதரப்பட்ட வாழ்வையும், (எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு — திருக்குறள். பலவித அனுபவங்களை வேண்டுவது பலவித அனுபவத்திலும் மெய்ப்பொருள் உணரும் தன்மை அடைவதற்காக.)

பழைய முத்தியில் பதமு(ம்) (pazhaiya muththiyiR padhamum) : the traditional goal of the state of blissful liberation; தொன்று தொட்டு வரும் முக்திச் செல்வ நிலையையும்;

நட்பு உற பரவு(ம்) கற்பக தரு வாழ்வும் (natpuRap paravu kaRpagath tharu vAzhvum) : the most sought-after life in the celestial land that has the wish-giving tree of kaRpagam; யாவரும் விரும்பிப் போற்றும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும்;

புகரில் புத்தி உற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெரு வாழ்வும் (pugaril budhdhi utru arasu petruRap poliyum arputhap peru vAzhvum) : unblemished intellect, leading to the bright royal path towards a wonderful and great life; குற்றமற்ற புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் அற்புதமான சிறந்த வாழ்வையும் , புகர் இல் (pugar il) : faultless, குற்றம் இல்லாத;

புலன் அகற்றிடப் பலவிதத்தினைப் புகழ் பலத்தினைத் தர வேணும் (pulan agatridap pala vidhaththinaip pugazh balaththinai thara vENum) : and the strength and wisdom to praise You in several ways to rid myself of the mischief played by my five senses; these are the things I need from You! ஐம்புலச் சேஷ்டைகள் நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும் அறிவுப் பலத்தையும் நாவன்மையையும் நீ தந்தருள வேண்டும்.
முருகவேளுடைய ஆறுதிருமுகங்கள், பன்னிருபுயங்கள், திருவடிகள், வேல், மயில், சேவல் ஆகிய பலவிதங்களைப் பற்றிப் புகழும் தன்மையை அருள் புரிவீர்.
.

தகரில்....பயில்வோனே : ஆட்டுமுகம் படைத்த தக்கன் காரணமாக, அறுபட்ட கரங்களை உடைய அக்கினி தேவன் கொண்டுபோய் விட, தருப்பைப் புல் அடர்ந்த சரவணப் பொய்கையில் இனிது உலாவியவரே!

தகரில் அற்ற கைத் தலம் விட (thagaril atra kaith thalam vida) : As his hands were severed in the war (that ensued Dhaksha's sacrifice), Agni, the God of Fire, could not bear the heat (of the six flames of Murugan) and let them slip into River Ganga, தகர் ( thagar) : goat, ஆட்டுமுகம் உடைய தக்கனைக் குறிக்கின்றது.; அற்ற கைத்தலம் (atra kaith thalam) : severed hands; விட (vida) : (பொறிகளின் சூடு தாங்காது கங்கையில்) விட்டுவிட

சிவபிரானை நிந்தித்து தக்கன் செய்த வேள்வியினால் வெகுண்ட வீரபத்திரர், அனுகூலமாக இருந்த தேவர்கள் யாவரையும் தண்டித்தனர். சூரியனுடைய பல்லை உதிர்த்தனர். சந்திரனைத் தேய்த்தனர். பிரமதேவனது சென்னியில் குட்டினர். சரசுவதியின் நாசியைக் கொய்தனர். தக்கனை சிரச்சேதம் செய்தனர். அக்கினிதேவனது கரத்தை வெட்டினார். பின்னே சிவபெருமானுடைய திருவருளால், தக்கன் ஆட்டுத் தலையையும், தேவர்கள் தத்தம் இழந்து உறுப்புகளையும் பெற்றனர். "அற்ற கைத்தலம்" என்றது இந்த வரலாற்றின்படி, அறுபட்டு மீண்டும் கரம் பெற்ற அக்கினி தேவனைக் குறிக்கின்றது. இதை விரிவாக வர்ணிக்கும் திருப்புகழ் 'அதிமதம்': கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் படிமோதிக்

கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் றபிராமி

பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் செவிபோயப்

பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்
படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்
பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே.

பிணைச் சரவணத்தினிற் பயில்வோனே (piNai saravaNath thiniR payilvOnE) : which mingled with the water in the connected pond of SaravaNa where You grew up! பிணைச் சரவணம்(piNai saravaNam) : the pond Saravana that was connected or linked with the river Ganga;

தனி வனத்தினிற் புன மறத்தியை தழுவு (thani vanaththiniR puna maRaththiyai thazhuvu) : At the lonely millet-field in the forest (of VaLLimalai), You hugged VaLLi, the damsel of the hunters,

பொற் புயத் திருமார்பா (poR buyath thiru mArbA) : with Your broad shoulders and hallowed chest!

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல் அயிற் சுடர்க் குமரேசா(sikara veRpinaip pagirum viththagath thiRal ayiR sudark kumarEsA) : Oh Lord KumarA, You hold in Your hand the sparkling Spear/vel, symbolising Knowledge and Strength, that pierced the peaks of Mount Krouncha!

செழு மலர்ப் பொழில் குரவமுற்ற (sezhu malarp pozhiR kurava mutra) : There is a rich grove full of flowers and KurA trees in this place,

பொற் திருவிடைக்கழிப் பெருமாளே.(pOR thiruvidaik kazhip perumALE.) : known as beautiful Thiruvidaikkazhi, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே