278. கார்ச்சார்
Learn The Song
Know Raga Simhendramadhyamam (57th mela)
Arohanam: S R2 G2 M2 P D1 N3 S Avarohanam: S N3 D1 P M2 G2 R2 SParaphrase
கார்ச் சார் குழலார் விழி ஆர் அயிலார் (kAr chAr kuzhalAr vizhiAr ayilAr) : Their hair is black and thick like the dark cloud; their eyes are like the sharp spear; கார்ச் சார் குழலார் (kAr chAr kuzhalAr) : hair like the dark cloud; மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள்; விழி ஆர் அயிலார் (vizhi Ar ayilAr) : eyes like the sharp 'vel', கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள்;
பால் மொழியார் இடை நூல் (pAl mozhiyAr idai nUl ) : their speech is sweet as milk; their waist line is slender like the thread;
எழுவார் சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே (ezhuvAr sAr iLa neer mulai mAthargaL mayalAlE) : their bosoms that are like the tender coconut and covered by well-fitting blouses; crazy about such harlots, வார்சார் : கச்சினை அணிந்த, வார் = முலைக்கச்சு;
காழ்க் காதலது ஆம் மனமே (kAzhk kAthalathu Am manamE) : oh my mind, you are very much infatuated! காழ் = திண்ணயதான, strong, deep;
மிக ஆர்க் காமுகனாய் உறு சாதக (miga Ark kAmukanAy uRu sAthaka) : I am born with such an obsessive passion;
மா பாதகனாம் அடியேனை (mA pAthakanAm adiyEnai) : I am the worst sinner;
நின் அருளாலே பார்ப்பாய் அலையோ (nin aruLAlE pArppAy alaiyO) : would You not look at me with Your gracious eyes?
அடியாரொடு சேர்ப்பாய் அலையோ (adiyArodu sErppAy alaiyO) : Would You not consider me as one among Your devotees?
உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா (unathu Ar aruL kUrppAy alaiyO umaiyAL tharu kumarEsA) : Would You not bestow upon me Your total compassion? Oh, Lord Kumara, the son of UmAdEvi! கூர்ப்பாய் அலையோ (kUrppAy alaiyO) : நிரம்பத் தர மாட்டாயோ;
பார்ப் பாவலர் ஓது சொ(ல்)லால் (pArp pAvalar Othu so(l)lAl) : The poets of the world heap words of praise on பாவலர் (paavalar) : poets;
முது நீர்ப் பாரினில் மீறிய கீரரை ஆர்ப்பாய் (muthu neerp pArinil meeRiya keerarai) : the outstanding poet Nakkeerar in this old world, surrounded by oceans, and You gladly protect him;
முருகன் நக்கீரரை பாராட்டினது இரு முறை.
1. கடைச்சங்கப்புலவர் தலைவரான நக்கீரரின் திருமுருகாற்றுப்படை கேட்டு முருகவேள் மகிழ்ந்தது. ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் என்னும் பொருளுடையது. கூத்தரும், பாணரும் தாம் ஒரு வள்ளலிடம் சென்று பெருஞ்செல்வத்தைப் பெற்று, மீண்டு வரும் வழியில் எதிர்படும் இரவலரிடம் மறைக்காமல் தாம் பெற்ற செல்வத்தைக் கூறி, அவ்வள்ளலிடம் செல்லும் வழியை விளக்கி, தாம் சென்ற அவ்வழியாற் போகச் செய்தல் ஆற்றுப்படை எனப்படுகிறது. அழியாச் செல்வமாகிய பேரின்பத்தைப் பெற விழையும் ஒருவனுக்கு முருகன் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் வழிகளை எடுத்துக் கூறி முருகனிடம் வழிப்படுத்துவது நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை.
2.இறையனார் அகப்பொருளின் உரையை நக்கீரர் சொல்லக் கேட்டு முருகவேள் மகிழ்ந்தது. இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது.
அப்போது பாண்டிநாடு 12 ஆண்டு மழையின்றி வறண்டுபோயிற்று. பாண்டியன் சங்கப்புலவர்களை அழைத்து, இப்போது உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டான். பின் நாடு செழித்தபின் பாண்டியன் புலவர்களை அழைத்துவரச் செய்தான். வந்தவர்களில் எழுத்து, சொல், யாப்பு இலக்கணத் துறையினர் மட்டும் இருந்தனர். பொருள் இலக்கணம் அறிந்தவர் இல்லையே! என்று அரசன் கவலைப்பட்டான்.
இந்தக் கவலையைப் போக்கச் சிவபெருமான் இந்த நூலின் 60 நூற்பாக்களை 3 செப்பேடுகளில் எழுதித் தன் இருக்கையில் வைத்தார். துப்புரவு செய்வோர் அதனை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அதற்கு உரை எழுதச் செய்து பெற்றான். பாண்டியன் வேண்டுகோளுக்கு இணங்கி இந்நூலுக்குப் பலர் உரை கண்டனர். அவற்றை உருத்திரசன்மன் என்பவனிடம் ஒவ்வொருவராகச் சொன்னார்கள். முருகக் கடவுள் ஒரு சாபத்தால் உப்பூரிக்குடி கிழாருக்கு ஊமை-மகனாகப் பிறந்திருந்தான். ஐந்து வயது உடையவனான அவன் பலரது உரையைக் கேட்டபோது அசைவற்றுக் கிடந்தான். கணக்காயனார் மகனார் நக்கீரனார் செய்த உரையைக் கேட்கும்போது மெய்சிலிர்த்து வியந்தான்.
உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே (ArppAy unathu Am aruLAl or sol aruLvAyE) : would You not show me similar grace, and preach a matchless word of ManthrA?
வார்ப் பேர் அருளே பொழி காரண (vArappEr aruLE pozhi kAraNa) : You are the primordial source showering immense grace on the entire world!
நேர்ப் பாவ ச காரணமா(ம் மத ஏற்பாடிகளே அழிவே உற அறை கோப வாக்கா (nErp pAva sa kAraNamA(m) matha ERpAdikaL azhivE uRa aRai kOba vAkkA ) : The root cause of sin were the samaNa priests, and You annihilated them with Your angry words (of thEvAram, when You came as ThirugnAna Sambandhar). சமண மதத்தை ஏற்பாடு செய்து நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத் துணைக் காரணமாகிய மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை திருஞானசம்பந்தராக வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை உடையவனே, பாவ சகாரணமாம் (pAva sa kAraNamAm) : பாவத்துக்குத் துணைக் காரணமாகிய;
சிவ மா மதமே மிக ஊக்க அதிப (siva mA mathamE mika Ukka athiba) : You are the enthusiastic leader whose efforts enhanced the cause of the great Saivism! சிறந்த சிவ மதமே பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே,
யோகமதே உறும் மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே (yOkamathE uRum mAththA siva pAla gukA adiyarkaL vAzhvE) : You are always in the state of yOgA, Oh Wise One, You are the Son of SivA. Oh GuhA, You are the treasure of Your devotees! யோக நிலையை அடியார்க்கு அருளும் பெருமைக்கு உரியவரே! யோக நிலையில் இருக்கும் பெரியவனே, மாத்தான் = பெரியவன், பெருமை உடையோன், மாத்து - பெருமை. யோக நிலையை அடியார்க்கு அருளும் பெருமைக்கு உரியவர் முருகப் பெருமான்.
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா (vEl kAda val vEdarkaL mA makaLArkku Arva nan mA magiNA) : You are the beloved and great consort of VaLLi, the damsel of the hunters who dwell in the forest holding spears in their hands. வேல் காட (vEl kAda) : வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும்; வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ (vEdarkaL mA makaLArkku Arva : வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியின் பால் அன்பு பூண்ட; நன் மா மகிணா (nan mA magiNA) : good and handsome husband, நல்ல அழகிய கணவனே;
திருவேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே (thiruvERkAdu uRai vEtha pureesurar tharu sEyE) : You are the child of VEdapureesar (Lord SivA) who resides in ThiruvERkAdu.திருவேற்காட்டில் அகத்திய முனிவர் இறைவனை வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக கருதப்படுகிறது. ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களும் வேல மரங்களாக நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி அனுக்கிரக நவக்கிரக அமைப்பில் எண்கோண வட்ட வடிவமாக நம்மைப் பார்ப்பதுபோல் காட்சி அளிப்பதால் இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.
வேட்டார் மகவான் மகளானவள் ஏடு ஆர் திரு மா மணவா (vEttAr makavAn makaLAnavaL Edu Ar thiru mA maNavA) : You are the glorious and handsome consort of DEvayAnai, the daughter of IndrA, famous for his many sacrificial oblations. திரு மா மணவா (thiru mA maNava) : சிறந்த அழகிய மணவாளனே ; ஏடு ஆர் (Edu Ar) : glorious, மேன்மை நிறைந்த; வேட்டார் (வேள் + ஆர்) (vEttar) : வேள்வி நிரம்பிய ; மகவான் (magavaan) : Indra;
பொ(ன்)னின் நாட்டார் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே.(po(n)nin nAttAr peru vAzhvu enavE varu perumALE.) : You are the treasure of DEvAs of the golden celestial world, Oh Great One!
Comments
Post a Comment