279. சொருபப் பிரகாச

ராகம் : தன்யாசிஅங்கதாளம் (5½)
3 + 1½ + 1
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரசசுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயிறிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகையதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையையொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரிமருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர்குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவனருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவுபெருமாளே.

Learn The Song




Know the ragam Dhanyasi (Janyam of 8th mela Thodi)
Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S



Paraphrase

சொருபப் பிரகாச விசுவருப (sorupap piragAsa visuvarupa) : Oh Lord with the radiant form, with the entire universe contained within Your great form! ஒளிமயமான ரூபத்தை கொண்டவனே (அசைவன அசையாதன யாவற்றையும் உள்ளடக்கிய) விசுவரூபனே!

பிரமாக நிச சுக (piramAga nija suga) : You are the Brahman. source of real happiness for all; பிரமாகம் (piramaagam) : 'I am Brahman'; பிரமம் நான்(அத்துவித பாவம்);

விப்பிர தேச ரச சுப (vibbira thEja rasa suba) : You are radiant with Brahmic glow, and You are sweet and the most auspicious. விப்பிர (vibbira) : Sanskrit word vipra, meaning wise, seer, Brahman; தேச (thesa) : sanskrit word tejas, meaning glow or radiance; ரச சுப — இன்பமும் மங்கலமுமானவனே;

மாயா துலியப் பிரகாச (mAyA thuliyap pirakAsa) : Your pure incandescence never gets extinguished. அழியாத சுத்த ஒளி வடிவானவரே! மாயா — மாயாத, அந்தமற்ற

மத சொலியற்ற (madha soliyatra ) : You are beyond the religious debates and controversies. மத சொலியற்ற (madha soliyatra) : மதங்களின் (சோலி) தொந்தரவுகளை கடந்த

ரசா சவித தொகை விக்ரம (rasA savidha thogai vikrama) : Your valour is pleasurable! இன்பம் கூடிய வகையதான பராக்ரமத்தை உடையவனே; ரசா சவித — இன்பத்துடன் கூடிய; தொகை — பல வகையான

மாதர் வயிறிடை ஊறு கருவிற் பிறவாதபடி (mAadhar vayiR idai URu karuviR piRavAdhapadi) : In order that I do not enter the womb of any woman, பெண்களுடைய வயிற்றிலே ஊறுவதான கருவில் பிறக்காதபடி

உருவிற் பிரமோத அடிகளை எத்திடு இராக வகை அதின் மீறி ( uruviR piramOdha adigaLai eththidu rAgavagai adhinmeeRi) : I should become purer by excelling in singing about Your feet, the most delightful part of Your great form. உன்னுடைய திருவடிகளை போற்றுகின்ற பாடல்களின் வகைகளில் நான் மேம்பட வேண்டும்! பிரமோதம் (piramOtham) : joy, delight, pleasure, உவகை; அடிகளை எத்திடு இராக வகை (adigaLai eththidu rAgavagai) : திருவடிகளை போற்றிடும் கீத வகைகள்; மீறி(meeRi) : மேம்பட்டவனாய்;

கருணைப் பிரகாச உனது அருள் உற்றிட (karuNaip piragAsa unadhu aruL utrida) : I gain Your grace, oh compassionate and dazzling one, உன்னுடைய கருணை ஒளி திகழும் திருவருளைப் பெற்று,

ஆசில் சிவ கதி பெற்று இடரானவையை ஒழிவேனோ (Asil sivagathipetr idarAnavaiyai ozhivEnO) : will I attain the unblemished liberation of my soul and get rid of all sufferings? குற்றமில்லாத சிவகதியை அடியேன் அடைந்து துன்பங்கள் யாவையும் விட்டு ஒழிக்கமாட்டேனோ? ஆசு (Asu) : flaw, ஆசில் (Asil) : flawless;

குரு குக்குட வார கொடி (kuru kukkuda vAra kodi) : (You hold in Your hand) the staff with the bright rooster, குரு (kuru) : lustrous, effulgent, நிறம் நிறைந்த;

செரு உக்கிர ஆதப அயில் (seru uggira Adhapa ayil) : and the spear that is fierce and bright with the radiance of the sun in the battle field, செரு(seru) : battle;

பிடி கைத்தல ஆதி அரி மருகோனே ( pidi kaithala Adhi ari marugOnE) : You hold them in Your hand, Oh Lord! You are the nephew of Vishnu,

குமரப் பிரதாப குக (kumarap pirathApa guha) : Oh KumarA! You are famous, Oh GuhA!

சிவசுப்பிர மா மணிய (siva subbira mA maNiya) : You are spotlessly pure and effulgent! சுப்பிர (subbira) : மிக்க தூய்மையான; மா மணிய() : பேரொளியனே;

குணமுட்டர் அவா அசுரர் குலகாலா (guNamuttar avA asurar kulakAlA) : You are the God of Death for all ravenous demons lacking in character! குணக்கேடர்களும் ஆசை மிக்கவர்களுமான அசுரர்களுடைய குலத்துக்கு யமனாக நிற்பவனே; முட்டர் — குறைவுடையவர்;

திரு ஒற்றி உறா மருவு நகரொற்றியுர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா (thiru otri uRA maruvu nagar otriyur vAri thirai arukutridum Adhi sivan aruL bAlA ) : You are the son of Lord Shiva who is seated near the sea waves at ThiruvotRiyur, where Lakshmi, Goddess of Wealth, happily resides! திருமகள் பொருந்தியிருக்கும் நகரான திருவொற்றியூரிலே கடல் அலைகளுக்கு அருகிலே இருக்கின்றவனே! ஆதி சிவன் அருளிய மகனே! திரு ஒற்றி உறா மருவு — லக்ஷ்மி சேர்ந்து பொருந்தியிருக்கும்;

திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் (thigazhutridu yOgathava migu mukkiya mAdhavargaL) : Devout sages who are notable for their deep yOgAs and intense penance:

இதயத்திடமே மருவு பெருமாளே. (idhayath thidamE maruvu perumALE.) : You reside dearly in their hearts, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே