291. தீராப் பிணிதீர
ராகம் : சாருகேசி | தாளம்: ஸங்கீர்ணசாபு 3 + 1½ (4½) |
தீராப் பிணிதீர | |
சீவாத் | துமஞான |
ஊராட் சியதான | |
ஓர்வாக் | கருள்வாயே |
பாரோர்க் கிறைசேயே | |
பாலாக் | கிரிராசே |
பேராற் பெரியோனே | |
பேரூர்ப் | பெருமாளே. |
Learn The Song
Raga Charukesi (26th mela)
Arohanam:S R2 G3 M1 P D1 N2 S Avarohanam: S N2 D1 P M1 G3 R2 SParaphrase
தீராப் பிணிதீர ( theerAp piNitheera) : In order that the incurable maladies that affect the body, mind and soul are ended; எளிதில் தீராத முப்பிணிகளையும் தீர்க்க; முப்பிணி = உடற்ப்பிணி, உள்ளப்பிணி, உயிர்ப் பிணி. உடற்ப்பிணி – பசி. உள்ளப்பிணி – காமம், ஆசை. உயிர்ப் பிணி – பிறவி.
சீவ ஆத்தும ஞான (jeeva Aththuma gnAna) : In order that I tread the unique path of sivagyana or atmagyana இந்த ஜீவன் உயர்வான ஆத்ம ஞான பெறுமாறு
ஆத்ம ஞானம் = தன்னையுணர்தல்; தமக்குள்ளேயே எண்ணத்தை செலுத்தி, மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான எல்லா செயல்திறன்களையும் ஒருக்கி (withdraw) இச்செயல்திறன்களை தனது ஆன்மாவை நோக்கித் திருப்பி அமைதியுடன் இருந்தால் மனதின் அந்த நிலையே ஆத்மஞானமாகும். விஞ்ஞானம் என்பது அறிபவனையும் அறியப்படு பொருளையும் வெவ்வேறாகக் காட்டும் அறிவு நிலை. அறிவின் மேலான நிலையான மெய்ஞானம் அல்லது ஆத்மஞான நிலையில் அறிவு கொண்டு அறிபவனும் அறியப்படு பொருளும் வெவ்வேறானவையாக இல்லாமல், அறிபவன் வேறு, அறியப்படு பொருள் வேறு எனப் பிரித்து அறிய இயலாது. அந்த அறிவே மெய்யறிவு அல்லது ஆத்மஞானம் எனப்படும். எந்த அறிவு கொண்டு அனைத்தும் வேறுபாடு இல்லாததாக அறியப்படுகிறதோ, அந்த நிலையில் வேறுபாடு இல்லாத அனைத்தும், அறியும் அறிவாகிப் போகும். நீர் நீருடனும், நெருப்பு நெருப்புடனும் இணைவது போல், அறிவு அறிவுடன் இணைந்து விடும். இந்த நிலையில் அனைத்தும் அறிவு வடிவாகும். அனைத்தும் அறிவான நிலையில், "அறியப்படும் பொருள் எது?" எனச் சிந்தித்தால், அறியப்படு பொருளும் அறிவாகும். அனைத்தும் அறிவான நிலையில், அறிபவனும் அறிவாகிப் போவான்.
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே(Ur AtchiyadhAna Or vAk aruLvAyE ) : You should kindly preach the unique mantra by which I gain the true knowledge about soul in this life. உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக.
பாரோர்க்கு இறை சேயே (pArOrku iRai sEyE) : You are the Son of the Great Lord of the Universe (SivA)! உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே,
பாலாக் கிரிராசே (bAlAk giri rAsE) : You are the youthful; You are the king of all mountains! என்றும் பாலகனே! மலைகளுக்கு எல்லாம் அரசனே,
பேராற் பெரியோனே (pErAR periyOnE) : You are great by name and fame! உன் அருளால் மிக்க சிறந்தவன் என்று பெயர் பெற்றவனே,
பேரூர்ப் பெருமாளே. ( pErUr perumALE.) : You have Your abode at PErUr, Oh Great One!
Comments
Post a Comment