292. குதிபாய்ந்து



ராகம் : கல்யாணி அங்கதாளம் (15) 2½ + 1½ + 1½ + 2
+ 1½ + 1½ + 1½ + 3
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்துசுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கைவிதகீத
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்றுதருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின்மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்தகுமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்தபெருமாளே.

Learn The Song




Raga Kalyani (65th Mela)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 R2 S


Paraphrase

We give undue prominence to our body, though it is merely a hut, fitted with sensory organs. Our bodies and minds are activated by karma and this leads us into all kinds of evil habits. Realizing this, Saint Arunagirinathar prays to be united with the all-pervasive Eternal Consciousness that blooms in our minds (உதிதாம்பரம்), so that he/we can get the steady grip of the Lord's lotus feet that is like a raft and anchors us in a turbulent ocean.

குதி பாய்ந்து இரத்தம் வடி தொளைத் ( kuthipAynthu iraththam vadi thoLaith ) : Blood gushes and drains through holes (blood vessels);

தொக்கு இந்த்ரியக் குரம்பை (thokku inthriyak kurambai) : in this body, covered with skin and fitted with five sensory organs, தொக்கு — தோலோடு கூடியதும்; குரம்பை (kurambai) : small hut, refers to body;

வினை கூர்தூர் குணபாண்டம் உற்று (vinaikUrthUr guNapANdam utRu) : which is the receptacle for all evil vices, குணபாண்டம் (guNapANdam) : the body that is a receptacle for habits/character — தூர் (thoor) : filled, நிரம்பியுள்ள;

அகிலமெனக் கைக் கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே (akilamenak kaik koNdu iLaiththu ayarnthu suzhalAthE) : I do not want to think that it (body) is everything, grow weaker and roam around aimlessly.

உதிதாம்பரத்தை உயிர் கெட பொற் கிண்கிணிச் சதங்கை வித கீத உபய அம்புயப் புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே (uthithAmparaththai uyir keda poR kiNki Niccathangkai vithakeetha upaya ampuyap puNaiyaiyini patRum karuththai enRu tharuvAyE ) : To destroy the ego of my soul that is the cause for duality, I want the thought of the Supreme to dawn in my mind and for that, I want to hold on to the raft that is Your two hallowed lotus feet. When will You give me that strong thought to hold on to Thy feet, in which the anklets kiNkiNi and chatangai make a variety of musical sounds? ; ஆத்ம தத்துவம் நீங்க, உள்ளத்தில் உதிக்கின்ற பரம்பொருளை, அழகிய கிண்கிணி, சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும் இரு தாமரைகளை ஒத்த தேவரீரது திருவடிகளாகிய தெப்பத்தை, இனியாவது பற்றிக் கொண்டு வாழும் உள்ளத்தை எனக்கு நீ எப்போது அருள் புரிவீர்? , உதித அம்பரத்தை (uthitha amparaththai) : the self awareness that arises in the inner cosmos of the mind; ஆகாயம் போன்ற மனதில் உதிக்கின்றதாகிய மெய் பொருளை; உயிர் கெட (uyir keda) : to rid oneself of the notion of duality that makes souls distinct from Brahman; ஆன்மத்துவம் நீங்க; உபய அம்புய புணையை — இரண்டு தாமரை போன்ற தெப்பத்தை ;

ஆன்மத்துவம் அல்லது ‘உயிர்த்துவம்’ என்பது Animism என்று அறியப்படும் கிரேக்க சிந்தனை. இது இந்து ஞானமரபில் ’சாங்கியம்(Sankya)’ அதாவது ’ஆதி இயற்கை வாதம்’ என்று அறியப்பட்டுள்ளது. பிற மத கோட்பாடுகள் ஆன்மா வேறு பிரம்மம் வேறு என்று நம்புகின்றன. முத்தி நிலையில் கூட இந்த வேறுபாடு இருக்கும் என அவை வற்புறுத்துகின்றன. ஆனால் அருணகிரிநாதர் ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே என்று வற்புறுத்தி பிரபஞ்ச பொருட்களை பிரம்மத்தினின்று பிரித்து பார்க்கும் நோக்கை விலக்க வேண்டும் என்கிறார்.

‘Animism’ is a belief system, where every form of matter, animate or inanimate is supposed to have a spiritual essence, but these spirits are distinct. They‘re not part of ONE Spirit – the One God. Arunagirinathar believes the Atman exists in all matter and even if they seem different, it is part of One Param Atman which itself is a manifestation of the indescribable, infinite, immutable and eternal Brahman.

கதை சார்ங்க கட்கம் வளை அடற் சக்ரம் தரித்த (kathaisArnga katkam vaLai adaRchakran - thariththa) : He holds in His hands five weapons, namely, gathai (mace), bow (sArangam), sword, conch shell (pAnchajanyam), and a powerful wheel (sudharsana chakram);

கொண்டல் மருகோனே (koNdal marugOnE) : He has the complexion of dark cloud; He is Lord Vishnu, and You are His nephew!

கருணாஞ்சனக் கமலவிழி (karuNAnjanak kamalavizhi) : Her lotus-like eyes are smeared with kohl and compassion; கருணையும் மையும் கொண்ட தாமரை அனைய கண்கள்;

பொற் பைம் புனக் கரும்பின் மணவாளா (poRpaimpu nak karumbin maNavALA ) : She is sweet like sugarcane, living in the beautiful and fertile millet field; You are the consort of that VaLLi!

மதன அந்தகர்க்கு மகவெனப் பத்மம் தனிற் பிறந்த குமரேசா (mathana anthakarkku makavenap pathmanthaniRpi Rantha kumarEsA) : You were born as the child of Lord SivA, who was the God of Death to Manmathan, and You materialised on a lotus, Oh Kumaresa!

மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே.(mathurAnthakaththu vadathiruccitRampalaththu amarntha perumALE.) : You are seated at Your abode in Vada (North) ThiruchchitRambalam, a part of MathurAnthagam, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே