295. கலைமேவு ஞான


ராகம்: மோகனம் தாளம்: சதுச்ர ஜம்பை
2½ + 1½ + 3 (7)
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத்தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே.

Learn The Song




Know The Raga Mohanam (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S D2 P G3 R2 S

Paraphrase

மூவாசைக்கு அடிமையாகாமலும் வீணான சமய வாதப்பிரதிவாதங்களில் சிக்கித் தவிக்காமலும் இருந்து, இறைவனைக் குறித்த சிவஞானத்தை பெற்று வாழ முருகன் அருள் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி (kalaimEvu nyAnap pirakAsa kadalAdi) : It is a great and bright Ocean of Knowledge containing all the arts within itself; and I want to take a dip in that ocean. கலைகள் எல்லாம் தன்னுள் அடங்கியுள்ள ஞான ஒளியான கடல் முருகப்பெருமான்; அக்கடலில் திளைத்து ஆடி,

ஆசைக் கடலேறி (Asaik kadal Eri) : I also want to swim across the ocean of three desires, namely, the desire for earth, woman and wealth.ஆசைகள் மற்றும் காமங்கள் என்னும் பெருங்கடலை அவன் கருணையால் நீந்திக் கடந்து;
முருகக் கடலில் மூழ்கி, ஆனந்தமாக ஆடி, ஆசைக் கடலில் மூழ்காமல் தப்ப ஞான பிரகாசமான அவனது அருள் தோணியில் ஏற வேண்டும்.

பலமாய வாதிற் பிறழாதே (balamAya vAdhil piRazhAdhE) : I do not want to be caught in the din of loud arguments over religion.

பதிஞான வாழ்வைத் தருவாயே (pathi nyAna vAzhvaith tharuvAyE) : I request You to grant me a life dedicated to the Knowledge of SivA.

மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் குமரேசா (malaimEvu mAyak kuRa mAdhin mana mEvu vAlak kumarEsA) : Oh young KumarEsa, You have occupied the heart of VaLLi, the wonderful damsel of the KuravAs who live in the Mount (VaLLimalai). வள்ளிமலையில் வாழும் வியப்பூட்டும் அழகை உடைய குறப்பெண்ணான வள்ளியின் மனத்தில் நிலையாக வீற்றிருக்கும் என்றும் இளையவனான குமரேசா! வால (vAla) : young;

சிலை வேட (silai vEda) : You took the disguise of a hunter with a bow to woo VaLLi! (Can also refer to the story of Poyyamozhi pulavar, where Murugan appears as a hunter;) (வள்ளிக்காக) வில்லையேந்திய வேடனே! அல்லது (பொய்யா மொழிப் புலவர் பொருட்டு) வில்லேந்திய வேடனாய் விளங்கியவரே ! சிலை (silai) : bow;

சேவற் கொடியோனே (sEvaR kodiyOnE) : You hold the staff of the Rooster in Your hand!

திரு வாணி கூடற் பெருமாளே. ( thiruvANi kUdaR perumALE.) : Your abode is Kudal (BavAni) where both Lakshmi and Saraswathi (representing Wealth and Education) have come together, Oh Great One! ‘திருவாணிகூடல்’ எனப்படும் பவானி தலத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே! திரு (thiru) : Lakshmi; வாணி (vANi) : Saraswathi;
வட இந்தியாவில் கங்கையுடன், யமுனை மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் (அலகாபாத்) எனப்படுகிறது. இது போல தென்னகத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள பவானி என்னும் ஊரில் காவிரியுடன் பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், "தென்திரிவேணி சங்கமம்' என அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே