323. அகரமுதலென


ராகம் : கரஹரப்ரியாதாளம்: சதுச்ர துருவம்
கண்ட நடை (35)
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளுமாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமுமற்றதொரு காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே.

Learn The Song




Raga Kharaharapriya (22nd mela)

Arohanam: S R2 G2 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Learn The Talam



Paraphrase

அகர முதல் என உரை செய ஐம்பந்தொர் அக்ஷரமும் (agara mudhalena uraisey aimbandhor aksharamum) : All the fifty-one letters of the alphabets starting with "a" (51 letters being in Sanskrit. अ,‎ आ,‎ इ,‎ ई, उ,‎ ऊ,‎ ऋ,‎ ॠ, ऌ, ॡ, ए,‎ ऐ,‎ ओ,‎ औ,‎ अं,‎ अः, (16)
क,‎ ख,‎ ग,‎ घ,‎ ङ,‎ च,‎ छ,‎ ज,‎ झ,‎ ञ,‎ ट,‎ ठ,‎ ड,‎ ढ,‎ ण,‎ त,‎ थ,‎ द,‎ ध,‎ न,‎ प,‎ फ,‎ ब,‎ भ,‎ म,‎ य,‎ र,‎ ल,‎ व,‎ श,‎ ष,‎ स,‎ ह,‎ (33)
ळ, क्ष) (2);

96 தத்துவங்கள் கொண்ட மனிதன் உடலில் முக்கியமானவை மூச்சுக் காற்றை இயக்கும் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா எனப்படும் ஆறு ஆதாரத் தலங்கள். நம் உடலில் இருக்கும் 72000 நாடி நரம்புகளை இயக்குவது 51 நரம்பு தொகுதிகளானதும் யோக சாஸ்திரங்களில் தாமரை இதழ்கள் எனக் குறிப்பிடப்படுவதான இந்த ஆறு தலங்கள் தான். இந்த நரம்புத் தொகுதிகளில் எழும் அதிர்வு ஓசையே சிவனின் நமசிவய என்ற பீஜ மந்திரம் உள்ளது. ஆறு ஆதாரத் தலங்களிலும் உள்ள மொத்த இதழ்கள் ஐம்பது ஆகும். இதனுள் ஐம்பது எழுத்துக்கள் அடங்கும். நிராதாரத் தலமான சகஸ்ராரத்தில் ஓம் என்ற ஓர் எழுத்து உள்ளது. அதையும் சேர்த்து 51 எழுத்துக்களாக விரியும். பண்டைய காலத்தில் சமஸ்கிருதம் போல் தமிழுக்கு ஐம்பத்தியோறு எழுத்துக்கள் என்று கூறுவர்.

இறைவனின் சூட்சும வடிவங்களே மந்திரங்கள். இவை யாவும் சமஸ்கிருதத்தின் 51 எழுத்துகளில் அடக்கம் பெற்றுள்ளன. சிவபெருமான் கரத்தில் துலங்கும் டமரு எனும் உடுக்கையின் ஒலியிலிருந்து முதன்முதலாக நாதம் வெளிப்பட்ட போது, அந்த நாதம் 51 அக்ஷர வடிவங்களாக 51 இடங்களில் பிறந்தன. இங்ஙனம் உலகம் தோன்றிய காலத்தில் 51 ஆதிமந்திர பீஜாக்ஷரங்கள் தோன்றியுள்ள இடங்களே 51 சக்தி பீடங்கள் என்று பெயர் கொண்டன.

அகில கலைகளும் (akila kalaigaLum) : all the arts of this world;

அருணகிரியார் முருகனை 'கலைமேவு ஞானப் பிரகாசக் கடல்' என்று பிறிதொரு பாடலில் கூறுகிறார். கலை அறிவு வெறும் உலக சம்பந்தப்பட்டதாக இருந்தால், அது அவனுக்கு அறிவு வளர்ப்பதோடு இறுதியில் அறிவுக்கும் ஆதாரமான இறை உணர்வை கொடுப்பதாக அமைய வேண்டும். இல்லை என்றால் அது பாழ் அறிவே. "கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ?" ஈசான சர்வ வித்யானாம் ஈஸ்வர சர்வ பூதானாம்
ப்ரம்மாதிபதி பிரம்மணோதிபதிர்
பிரம்மா சிவோமே அஸ்து சதாசிவோம்
அனைத்து கலைகளுக்கும் ஆதாரமாக இருப்பவனும், அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும், வேதங்களை பாதுகாப்பவனும், பிரமனுக்கு அதிபதியாக உள்ளவனும், சாந்த வடிவினனாக உள்ளவனும் ஆகிய சதாசிவனுக்கு வணக்கம்; அந்த சிவமாக எனது ஜீவன் மாறுவதற்கு அவனது அருளினை வேண்டி நிற்கின்றேன் என்பதே இந்த மந்திரத்தின் திரண்ட கருத்து.

வெகு விதம் கொண்ட தத்துவமும் (vegu vidham koNda thaththuvamum) : the varieties of Thathvas (tenets - in all 96); and தத்துவம் ( thaththuvam ) : properties of things/materials, philosophy, justification, explanation;

அபரிமித சுருதியும் (aparimitha surudhiyum) : VEdAs (scriptures) that are immeasurably vast; வேதம் என்னும் சொல்லுக்கு உயர்ந்த அறிவு, ஞானம் என்பது பொருள்; ஐம்புலன்களாலோ, மற்றும் மனத்தினாலோ அறியப்படமுடியாத தத்துவங்களும் எல்லாவற்றிற்கும் மேலான நிலையும் பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளும் பரம்பொருளால் தியான நிலையில் இருந்த முனிவர்களுக்கு அருளப்பட்டதால் அந்த உயர்ந்த கருத்துக்கள் அடங்கிய நூலுக்கு வேதம் எனப் பெயர் வழங்கப்பட்டது.

அடங்கும் தனிப் பொருளை (adangun thanip poruLai) : The unique Entity that encompasses and imbibes them all in itself, தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள ஒப்பற்ற பரம்பொருளை,

எப்பொருளுமாய அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை (epporuLumAya aRivai aRibavar aRiyum inbam thanai) : This Entity that is present in all objects other than itself , and is perceived by those who can feel this omnipresent and an eternal Bliss of Knowledge, எப்பொருளும் ஆய (epporuLu Aya) : தன்னைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் தானே ஆகி விளங்கும் ; அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை (aRivai aRibavar aRiyum inbam thanai) : (அறிவும், அறியாமையும் அற்றுப் போன நிலையே உண்மையான ஞான நிலையாகும். தான் ஒன்றை அறிவதற்கோ, தன்னை அறிவிப்பதற்கோ தனக்கு அன்னியமாக வேறொரு பொருள் இல்லாமல் தானே பிரகாசிப்பதாகிய சிவமே உண்மை அறிவு ஆகும். அப்பேற்பட்ட) ஞான நிலையை அறிபவர் அறிந்து அனுபவிக்கும் பரமானந்தப் பொருளை;

துரிய முடிவை (thuriya mudivai) : The ultimate vision experienced by Yogis (sages) in trance, யோகியர் தன்மயமான நிலையில் தரிசிக்கும் முடிவுப் பொருளை,

அடி நடு முடிவில் துங்கம் தனை (adi nadu mudivil thungan thanai) : That purest substance without a beginning, a middle or an end,

அணுவினின் சிறிய அணுவை (aNuvinin siRiya aNuvai) : tinier than the minutest particle of an atom,

மலமு நெஞ்சும் குணத்ரயமும் அற்றதொரு காலம் நிகழும் வடிவினை (malamu nenjum guNathrayamum atradhoru kAlam nigazhum vadivinai) : which manifests in the heart of those who have gotten rid of the three slags (namely, arrogance, karma and delusion), the four aspects of mind (namely intellect, free-will, egoism and desire) and the three qualities (namely sattvam, rajas and thamas). மும்மலங்களும், நான்கு கரணங்களும், முக்குணங்களும், நீங்கின ஒரு வேளையில் துலங்கும் அருள் உருவத்தை,

முடிவில் ஒன்றென்று இருப்பதனை ( mudivil ondrendru iruppadhanai) : which ultimately remains as the One and only One,

நிறைவு குறைவு ஒழிவற நிறைந்தெங்கு நிற்பதனை (niRaivu kuRai vozhivaRa niRaindhengu niRpadhanai) : that has no fullness nor deficiency nor degeneration and is omniscient and

நிகர் பகர அரியதை (nigar pagara ariyadhai) : which is incomparable,

விசும்பின் புரத்ரயம் எரித்த பெருமானும் (visumbin purathrayam eriththa perumAnum) : Such a unique Entity was addressed by Lord SivA, who burnt down Thirisiram that was constantly orbiting the sky, வானில் சஞ்சரித்துக் கொண்டே இருந்த திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானும்,

நிருப குருபர குமர என்றென்று பத்திகொடு பரவ (nirupaguru parakumara endrendru baththikodu parava) : praising with devotion saying "Oh Lord, Great Master, KumarA"

அருளிய மவுன மந்த்ரம் தனை (aruLiya mavuna manthran thanai) : You blessed Him with the "ManthrA of Silence".

பழைய நினது வழி அடிமையும் விளங்கும் படிக்கு ( pazhaiya ninadhu vazhi adimaiyum viLangum padikku) : Kindly initiate me, Your old traditional slave, also into it

இனிது உணர்த்தி அருள்வாயே(inidh uNarthi aruLvAyE) : in a sweet, vivid and graceful manner.

தகுதகுகு தகுதகுகு ...............தரரரர ரிரிரிரிரி என்றென்று(thaguthagugu thaguthagugu ..... tharararara ririririri endrendru ) : Repeatedly sounding like the meters given

இடக்கையும் உடுக்கையும் யாவும் (idakkaiyum udukkaiyum iyAvum) : the drums made of leather beaten by the left hand (idakkai), hand-drums (udukkai) and other drum instruments

மொகுமொகென அதிர (mogumogena adhira) : were making a thundrous noise;

முதிர் அண்டம் பிளக்க (mudhir aNdam piLakka) : in that din, the earth split apart;

நிமிர் அலகை கரணமிட (nimir alagai karaNamida) : the erect ghosts jumped about dancing;

உலகெங்கும் ப்ரமிக்க (ulagengum bramikka) : the entire world was awestruck;

நடமுடுகு பயிரவர் பவுரி கொண்டு இன்புற (nata mudugu bayiravar pavuri koNdinbuRa) : Bhairava MUrthis (SivA's disciples) were ecstatic and danced non-stop;

படு களத்தில் ஒரு கோடி முது கழுகு கொடி கருடன் அங்கம் பொரக் (padu kaLaththiloru kOdi mudhukazhugu kodigarudan angampora) : in the battlefield where the demons (asuras) were dying, millions of old eagles, crows, vultures and other birds were eating away the flesh from the dead bodies;

குருதி நதி பெருக (kurudhi nadhiperuga) : blood was gushing in the field like a river;

வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட (vegumuka kavandhangaL nirththamida) : several beheaded torsos were dancing about everywhere; கவந்தம் (kavantham) : a headless trunk, stump of a tree;

முரசு அதிர நிசிசரரை வென்று ( murasadhira nisichararai vendru ) : and the drums were beaten loudly to proclaim victory, when You conquered the asuras,

இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே.(indhiraRk aras aLiththa perumALE.) : and redeemed the Kingdom of IndrA and gave it to him gracefully, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே