326. அப்படி ஏழும்


ராகம்: கேதாரம்அங்கதாளம் 2 + 1½ + 2 (5½)
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகைமிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயமதடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரிதருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள்புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு மபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு மணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
விக்ரம வேலை யேவியபெருமாளே.

Learn The Song



Raga Kedaram (Janyam of 29th mela Shankarabaranam) By Kanthi Yedavalli

Arohanam: S M1 G3 M1 P N3 P S    Avarohanam: S N3 P M1 G3 R2 S


Paraphrase

அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம (appadi Ezhum Ezhum vakuththu vazhAthu pOthinin agrama) : The Lord seated on the lotus flower meticulously created the upper seven worlds and the lower seven worlds and presides over them; பதினான்கு உலகங்களும் தவறில்லாமல் படைத்து தாமரை மலரில் அமர்ந்து முதன்மை ஸ்தானம் வகிப்பவரும், அக்ரம (agrama) : முதன்மை ஸ்தானம் வகிப்பவர்; போது (pOdhu) : flower; here, lotus;

வியோம கோளகை மிசை வாழும் (viyOma kOLakai misai vAzhum ) : and pervades all the worlds; அண்ட கோளத்திலும் வாழ்கின்றவரும் , வியோமம் (viyOmam) : open space, sky;

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி (akshara thEvi kOvin vithippadi mARi mARi) : He is the consort of Saraswathi, the Goddess of letters; according to my destiny predetermined by that BrahmA, I assumed births again and again; சரஸ்வதி தேவியின் கணவனுமான பிரமதேவன் எழுதியுள்ள விதியின்படி, (பிறப்புக்கள்) மாறி மாறி ; கோ (ko) : இறைவன், பேரரசன், அரசன், தந்தை;

அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு (anaiththu uru Aya kAyam athu adaivE koNdu) : I took so many shapes in several bodies properly; எல்லா உருவங்களையும் கொண்ட உடல்களை முறையே நான் எடுத்து,

இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா (ippadi yOni vAy thoRum uRpaviyA vizhA) : in this way, I entered many wombs to take birth and eventually die; இவ்வாறாக கருக்குழி பேதங்களிலும் தோன்றிப் பிறந்தும், பின்னர் இறந்தும்;

உலகில் தடுமாறியே திரி தரு காலம் எத்தனை ஊழி காலம் எனத் தெரியாது (ulagil thadumARiyE thiritharu kAlam eththanai Uzhi kAlam enath theriyAthu ) : I do not know for how many aeons I have to endure this cycle (of birth and death) struggling in this world.

வாழி இனிப் பிறவாது நீ அருள் புரிவாயே (vAzhi inip piRavAthu nee aruL purivAyE) : Hail to You, Oh Lord! Kindly bless me not to be born again.

கற்பகம் வேழம் ஏய் வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம (kaRpakam vEzham Ey vana pacchiLa Enal meethu uRai kaRpudai mAthu thOy tharum abirAma) : You are the exquisitely handsome one hugged by VaLLi, the most chaste damsel, seated on a platform over the millet-field where the crops were tall as the coconut trees and the sugarcanes. தென்னை, கரும்பு இவைகளுக்கு ஒப்பான பசுமையான இளந்தினைகள் உள்ள புனத்தில் இருக்கும் கற்புடைய வள்ளியை அணைக்கும் அழகனே! வேழம் (vezham) : an elephant, a bamboo, sugarcane; கற்பகம் (karpagam) : coconut tree; ஏய் (Ey) : be similar to, ஒத்திருக்கும்;

கற்புர தூளி லேபன மல் புய (kaRpura thULi lEpana mal puya) : Wearing the fragrant paste of camphor powder, Your shoulders are strong and ever ready for a wrestling bout!

பாக சாதன கற்பக லோக தாரண கிரி சால (pAka sAthana kaRpakalOka thAraNa giri sAla ) : You rescued and established new life in the celestial land of IndrA, where the (wish yielding) kaRpaga trees abound! You revel in all mountains, Oh Lord! இந்திரனுடைய (நினைத்ததைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகத்துக்கு நிலைத்த வாழ்வைத் தந்தவனே! மலைக் கூட்டத்தில் விளங்குபவனே! பாக சாதனன் (baagasaathanan) : பாகன் என்னும் பகைவனைக் கொன்றவன், இந்திரன், (புண்ணிய பலன்களை உயிர்கள் பெற உதவுபவன்);

விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல (vipra samUka vEthana pacchima bUmi kAvala) : You are present among the society of brahmins; You pervade all vEdAs! You are the protector of the upper celestial world! அந்தணர் கூட்டத்தில்இருப்பவனே! வேதத்தில் உள்ளவனே! மேற் புறத்தில் உள்ள விண்ணுலகின் காவலன!

வெட்சியு(ம்) நீப மாலையும் அணிவோனே (vetchiyu(m) neepa mAlaiyum aNivOnE) : You wear garlands of vetchi and kadappa flowers!

மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ (meththiya Azhi sERu ezha veRpodu cUran neeRu ezha) : The seas brimming with water were agitated, with mud rising all over, and the seven mountains, along with the demon SUran, were destroyed to pieces

விக்ரம வேலை ஏவிய பெருமாளே.(vikrama vElai Eviya perumALE.) : when You wielded Your victorious spear, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே