329. ஆசைகூர்


ராகம்: யமுனா கல்யாணிதாளம்: ஆதி
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்துநடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டியொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தியளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சிதனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின்மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்டபெருமாளே.

Learn The Song




Yamuna Kalyani (Janyam of 65th mela Kalyani; Sampoorna Bhashanga)
Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 R2 S   OR
S N3 D2 P M2 G3 M1 G3 R2 S (M1 anya swara)


Paraphrase

இந்த பா அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு இறைவனை வழிபடும் "அகப்பூசை" பா ஆகும். "என்னுடைய ஆசையோடு கூடிய மனதான தாமரை மலரை வைத்து ‘அன்பு’ என்கிற நூலிட்டு, என் நாக்கைக் கொண்டு மெய் ஞான மணம் வீசுவதானதும், மலரில் துளிக்கும் அருள் தேனைப் பருக தூய்மையான புத்தி உள்ள பக்தர்கள் என்ற தேனீக்கள் மொய்க்கும் சித்ரக் கவி மந்திர மலர்மாலையாகவும் அதைக் கட்டி, உந்தன் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ?" என அருணகிரியார் உருகுகிறார். ஆறு ஆதாரங்களில் அடங்கியுள்ள ஐம்பத்தொரு மாத்ருகா மந்திரங்களை தாமரை மலராய்த் தொடுத்த மாலையில் மனமாகிய பத்மம் (தாமரை) கட்டப்பட்டதால் அந்தத் தாமரையில் வாசம் செய்யும் திருமகளும் கலைமகளும், அதாவது கல்வியும் செல்வமும், பக்தர்களாகிய நம் வசப்படும்.

Saint Mystic Arunagirinathar wants to adorn Lord's feet with a garland made with the 51 lotus petals or the 51 mantra aksharas of the six chakras. These with love as the thread that ties together the mind flower, which is suffused with the nectar of fragrant wisdom that is eagerly sought after by the iquisitive intellect.

ஆசைகூர் பத்தனேன் (Asai kUr baththanEn) : I, with my tremendous love and devotion for You,

மனோ பத்மமான பூ வைத்து (manO padhmamAna pU vaiththu) : I shall pick the lotus flower of my heart; மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்க விட்டு; மனதை இறைவன் திருவடியில் சேர்த்து விட்டால் உலக பந்தங்களிடமிருந்து விடுபடலாம்.

நடுவே அன்பான நூலிட்டு (naduvE anAna nUlittu) : tying that flower with the thread of my love,

நாவிலே சித்ரமாகவே கட்டி (nAvilE chithramAgavE katti) : I shall make a beautiful garland with (words coming from) my tongue,

ஒரு ஞான வாசம் வீசி ( oru nyAna vAsam veesi) : which would spread the fragrance of divine Knowledge;உன்னைப் பூரணமாகப் புரிந்து கொண்ட ஞானமே அம்மாலையில் நறுமண வாசனையாக வீச வேண்டும்.

ப்ரகாசியா நிற்ப (prakAsiyA niRpa) : and sparkle with dazzling light,

மாசிலோர் புத்தி அளி பாட (mAsilOr budhdhi aLipAda) : and around which surround the humming beetle called the spotless intellect; என் புத்தி அதில் பொருந்துகிற வண்டாக வேண்டும்.

மாத்ருகா புஷ்ப மாலை ( mAthrukA pushpa mAlai) : and that garland is called MAthruka Pushpa MAla!

கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ ( kOla pravALa pAdhaththil aNivEnO) : When will I have the honour of offering that garland to Your lovely coral-like red feet? ப்ரவாளம் (pravALam) : coral; பவளம்; கோல (kOla) : beautiful; அழகிய;

மூசு கானத்து மீது வாழ் (mUsu kAnaththu meedhu vAzh) : She lives in the forest where beetles abound; கானம் (kanam) : forest; மூசு (moosu) : மொய்த்தல்;

முத்த மூரல் வேடிச்சி (muththa mUral vEdichchi) : She belongs to the hunters' tribe, and her teeth are like beautiful pearls; மூரல் (mooral) : பல், புன்சிரிப்பு;

தனபார மூழ்கு நீப ப்ரதாப மார்பத்த (thanabAra mUzhgu neepap prathApa mArbaththa) : You drown in that VaLLi's bosoms; and Your own chest is filled with famous kadappa flowers, Oh Lord!

மூரி வேழத்தின் மயில் வாழ்வே (mUri vEzhaththin mayilvAzhvE) : You are also the consort of DEvayAnai, looking like a peahen, and who was reared by the strong elephant (AirAvatham)! வலிமையை உடைய ஐராவத யானை வளர்த்த மயில் அனைய தேவசேனையின் கணவனே! மூரி (moori) : strong; வலிமை, பெருமை, பழைமை;

வீசு மீன் அப் பயோதிவாய் விட்டு வேக (veesu meenap payOdhi vAy vittu vEga) : The ocean, full of waves and fish, screamed loudly, boiled over and dried up;

வேதித்து வரு மாசூர் வீழ (vEdhiththu varumAsUr veezha) : and SUran, who tortured the DEvAs, was knocked down dead

மோதிப் பராரை நாகத்து (mOdhip parArai nAgaththu) : when You began Your attack on the huge Mount Krouncha, பராரை - பருத்த அடிப்பாகம் உடைய; நாகத்து - கிரௌஞ்ச மலை மீது

வீரவேல் தொட்ட பெருமாளே. (veera vEl thotta perumALE.) : by throwing Your mighty Spear, Oh Great One!

Matruka Aksharas

Sound is worshipped as the supreme Divinity. The Aksharas, the imperishable letter-form from A to Ksha, represent the rhythmic sound of the Divine. The collection of 51 Aksharas can form a powerful tool when the aksharas could be strung together in suitable order and composition. Apart from the Vedic treatises and Tantric texts, texts such as Matruka Nighantu, Siddha Sapara Tantra and Mantra Vidhanam outline the importance and the power of Mantras.

The sites where the Divine Mother Sati’s body parts is believed to have fallen after the Daksha Yagna are considered the 51 Akshara Peetas, where each Peeta Goddess is regarded as the personification of an Akshara. In each of the sites, the Goddess is worshipped as a personification of one of the Aksharas.

Soundaryalahari of Adi Shankaracharya contains the 51 Aksharas hidden in 51 slokas. Lalita is also known as Matrika Devi, the Goddess of the Letters of the Alphabet. Lalitha Sahasranama contain these Aksharas and invokes Devi as Mantrathmika, Mathruka Varna Roopini and Tantra Roopa Manon mayee. Shyamala Dandakam by Kalidasa calls Devi as Sarva Mantrathmike and Sarva Yantrathmike.

In the Tantra Shastra worship of Devi, Sanskrit letters are hidden in the Sri Chakra. In Sanskrit there are 36 consonants and 15 vowels. In Devi's Sri yantra, these letters are inscribed in the various triangles and petals. The combination of the 15 Vowels (the 15 Nityas) and the consonants (the 36 Tattvas) produces all sound, all mantra, all vibration, all word, and all music. The Nityas or Eternities of Lalita represent the fifteen lunar days or tithis of the waxing Moon. Each has her own yantra, mantra, tantra and prayogas or ritual applications. The full circle of the Nityas also represents the 21,600 breaths a human being takes in a full day and night. As such, the Nityas are the Kalachakra, or Wheel of Time.

Nearer home for Thiruppugazh Anbargal, Kanthar Anubhoothi contains 51 verses and is a Mahamantra.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே