338. இருநோய் மலம்


ராகம் : சிந்துபைரவிஅங்கதாளம் (5) 1 + 1½ + 1½ + 1
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
யினிதாவ ழைத்தெனது முடிமேலே
இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
ரியல்வேல ளித்துமகி ழிருவோரும்
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
மொளிர்வேத கற்பகந லிளையோனே
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
உபதேசி கப்பதமுமருள்வாயே
கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
கரிமாமு கக்கடவுளடியார்கள்
கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
கருணாக டப்பமலரணிவோனே
திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
திகழ்மார்பு றத்தழுவு மயில்வேலா
சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
சிறைமீள விட்டபுகழ்பெருமாளே.

Learn The Song


Guruji Teaching

As Sung By Kumari Srividya, student of Mrs Chitra Murthy

Viruttham By Guruji in SindhuBhairavi

Raga Sindhu Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

A living being is bound by his own actions, desires, and attachments which bind him to the mortal world. You cannot easily escape from it, until you suppress the triple gunas (sattva, rajas, and tamas), overcome desires and attachments, arrest the progression of karma, silence your ego, and practice renunciation. Every desire-ridden action leaves strong impressions in the mind. Repeated activity of the senses in the world of objects results in the formation of latent impressions (purva-samskaras). They create the casual body (karana sarira) which become attached to the soul. As long as the souls are enveloped in the impurities of their past karma and bound to their latent impressions, they cannot be free. Only when an aspirant surrenders to the Supreme Self and becomes absorbed in His contemplation, can he experience oneness with the divine.

உயிருக்குத் தனித்த இருப்பு என்பது எக்காலத்திலும் இல்லை. உயிர் எந்நிலையிலும் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே நிற்கும். பிறப்பு நிலையில் அது பாசப் பொருள்களைச் சார்ந்து நிற்கிறது. பாசமாகிய சார்பு நீங்குமானால் அது சிவமாகிய சார்பைப் பெற்றுவிடும். ஊசலில் ஆடுகின்றவன் கயிறு அறுந்த அக்கணமே தரையில் விழுகிறான். அதுபோலப் பாசப்பற்று அறுமாயின், இறைவன் அவ்வுயிரை தன் கடமையாக கருதி தாங்குவான்.

இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி (irunOy malaththai siva voLiyAl miratti) : Scaring and driving away the two diseases called birth and death and the three slags known as arrogance, karma and delusion with the effulgent beam of SivA; பிறப்பு, இறப்பு என்ற இரு பெரு நோயையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும் சிவ தேஜஸ் கொண்டு விரட்டி ஓட்டி ,

எனை இனிதா அழைத்தெனது முடி மேலே (enai inidhA azhaith enadhu mudi mElE) : inviting me sweetly, and on my head

இணை தாள் அளித்து (iNai thAL aLiththu) : You should place Your two holy feet,

உனது மயில் மேல் இருத்தி (unadhu mayilmEl iruththi ) : seat me on Your peacock,

ஒளிர் இயல்வேல் அளித்து மகிழ் ( oLir iyal vEl aLiththu magizh) : and delight me by handing Your bright and sparkling spear; ஒளி வீசி விளங்கும் வேலினை என் கையில் அளித்து நான் மகிழும்படியாக ,

இருவோரும் ஒருவாகென (iruvOrum oruvAgena) : and then we both would become one single entity (not being separated).

கயிலை இறையோன் அளித்தருளும் ( kayilai iRaiyOn aLith aruLum) : SivA, the Lord of KailAsh, delivered graciously

ஒளிர் வேத கற்பக நல் இளையோனே (oLir vEdha kaRpaga nal iLaiyOnE ) : the KaRpaga (Wish-yielding) VinAyagA who is the head of the distinguished VEdAs, and You are His younger brother!

சுரர் பார் துதித்து அருள (oLir mAmaRaith thogudhi surar pArthudhith aruLa) : In order that both the celestials and terrestrials praise with reverence,

ஒளிர் மாமறைத் தொகுதி உபதேசிகப் பதமும் அருள்வாயே (upadhEsikap padhamum aruLvAyE) : kindly preach to me portions of the great scriptures and salient instructive words. விளங்கும் சிறந்த வேதப் பகுதிகளையும், (தேவர்களும் பூலோகத்தவர்களும் போற்ற) உபதேச மொழிகளையும் அருள்வாயாக.; பதம் (patham) : எழுத்து, சொல், பொருள்;

கருநோய் அறுத்து எனது மிடி தூள் படுத்தி விடு (karunOy aRuth enadhu midithUL paduththividu) : He slays the disease of birth through re-entry into a womb and shatters my indigence; கருநோய் (karu nOy) : கருவில் சேரும் பிறவி நோய்; மிடி (midi) : poverty;

கரிமா முகக் கடவுள் (kari mAmukak kadavuL) : He is the elephant-faced God;

அடியார்கள் கருதா வகைக்கு வரமருள் ஞான தொப்பை (adiyArgaL karudhA vagaikku varam aruLnyAna thoppai) : He is the wise Lord, with a pot-belly, capable of granting boons to His devotees far beyond their expectation;

மகிழ் கருணா (magizh karuNA) : and that Ganapathi is delighted with You, Oh compassionate one!

கடப்ப மலர் அணிவோனே (kadappa malar aNivOnE) : You wear the garland made of kadappa flowers.

திருமால் அளித்தருளும் ஒரு ஞான பத்தினியை (thirumAl aLiththu aruLum oru nyAna paththiniyai) : She is VaLLi, the matchless and the wisest daughter of Vishnu,

திகழ் மார்புறத் தழுவும் அயில் வேலா ( thigazh mArbuRath thazhuvum ayil vElA) : and You embrace her with Your hallowed chest, Oh Lord with a sharp spear!

சிலை தூளெழுப்பி கவட அவுணோரை வெட்டி (silai thUL ezhuppi kavad avuNorai vetti) : You smashed Mount Krouncha into powder, slashed the heinous demons;

சுரர் சிறை மீள விட்ட புகழ் பெருமாளே.(surar siRai meeLavitta pugazh perumALE.) : and You have the great honour of releasing all the celestials from SUran's prison, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே