341. உலகத்தினில்


ராகம்: ஆந்தோளிகாதாளம்: திச்ர த்ரிபுடை (7)
உலகத்தினில் மாதரு மைந்தரும்
உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை
உயர்துக்கமு மோடுற வென்றுறவருகாலன்
உதிரத்துட னேசல மென்பொடு
உறுதிப்பட வேவள ருங்குடில்
உதிரக்கனல் மீதுற என்றனையொழியாமுன்
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
கதறிப்பத றாவுரை வென்றுயர்
கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடுகளிகூருங்
கவலைப்புல மோடுற என்துயர்
கழிவித்துன தாளிணை யன்பொடு
கருதித்தொழும் வாழ்வது தந்திடநினைவாயே
இலகப்பதி னாலுல கங்களும்
இருளைக்கடி வானெழு மம்புலி
யெழில்மிக்கிட வேணியில் வந்துறஎருதேறி
இருகைத்தல மான்மழு வும்புனை
யிறையப்பதி யாகிய இன்சொலன்
இசையப்பரி வோடினி தன்றருளிளையோனே
மலைபட்டிரு கூறெழ வன்கடல்
நிலைகெட்டபி தாவென அஞ்சகர்
வலியற்றசு ரேசரு மங்கிடவடிவேலால்
மலைவித்தக வானவ ரிந்திரர்
மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ
வடிவுற்றொரு தோகையில் வந்தருள்பெருமாளே.

Learn The Song



Paraphrase

உலகத்தினில் மாதரும் மைந்தரும் (ulagaththinil mAdharu maindharum) : In this world, many women including one's wife, sons,

உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை (uRu sutramum vAzhvod uRum kiLai) : close relatives and other well-to-do family members, நெருங்கிய சுற்றத்தாரும், நல்ல வாழ்வுடன் வாழும் மற்ற உறவினர்களும்,

உயர் துக்கமுமோடு உறவு என்றுற வரும் காலன் (uyar dhukkamu mOduRa vendruRa varu kAlan) : and next of kin assemble with profound grief, as Yama approaches; மிக்க துயரத்தோடு பந்துக்களென்று வந்து சேரும்படி வரும் யமன்;

உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில் உதிர (udhiraththudanE jalam enbodu urudhip padavE vaLarum kudil udhira) : This body, an amalgam strongly made with blood, water and bones, gets destroyed, குடில் உதிர (kudil udhira) : as the hut-like body gets destroyed, குடிசை (தேகம்) அழிய;

கனல் மீது உற என்று எனை ஒழியா முன் (kanal meedhuRa endranai ozhiyA mun) : and is consigned to the fire; before I am wiped out (by that Yaman),

கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா ( kalagak kalai nUl pala koNdedhir kadhaRip padhaRA) : I study many controversial religious works, and argue agitatedly;

உரை வென்று உயர் கயவர்க்கு உளனாய் வினை நெஞ்சொடு களி கூரும் (urai vendru uyar kayavarkku uLanAy vinai nenjodu kaLi kUrum) : having defeated many in debates, I behave like petty-minded and dishonourable people, beating my chest with arrogant pleasure; பேச்சில் வல்லவனாய் வென்று, கீழ் மக்களுக்கு உள்ள புத்தியைக் கொண்டவனாய், தீவினைக்கு உரிய எண்ணத்துடன் செருக்கு மிகும்

கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து (kavalaip pulamOdu uRa enthuyar kazhiviththu) : and my mind is filled up with confusion. Will You please remove my woe,

உன தாள் இணை அன்பொடு கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே (una thALinai anbodu karudhith thozhum vAzhvadhu thandhida ninaivAyE) : and consider granting me the great life of reflecting on and worshipping Your two hallowed feet with love and devotion?

இலக பதினாலு உலகங்களும் இருளை கடி (ilagap padhinAl ulagangaLum) : Dispelling the darkness in all the fourteen worlds விளங்கும்படியாக பதினாலு உலகங்களின் இருட்டினை விளக்கி ஒழித்து ;

வான் எழு அம்புலி (iruLaik kadivAn ezhum ambuli) : the moon that rises in the sky,

எழில் மிக்கிட வேணியில் வந்து உற (ezhil mikkida vENiyil vandhuRa) : rests on His beautiful tresses;

எருது ஏறி (erudhERi) : who mounts the great bull, Nandi;

இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை அப்பதியாகிய இன் சொலன் (iru kaiththala mAn mazhuvum punai iRai appathi yAgiya insolan) : and holds in His two hands a deer and a pick-axe; He is Lord SivA, who has kind words for His devotees;

இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே (isaiyap parivOdini thandharuL iLaiyOnE) : to the delight of that SivA, You preached to Him graciously!

மலை பட்டு இரு கூறு எழ (malai pattu iru kUR ezha) : Mount Krouncha was pierced and split into two parts;

வன் கடல் நிலை கெட்டு (van kadal nilai ket(tu)) : the vast sea was totally shaken; வலிய கடல் நிலை குலைந்து,

அபிதா என அம் சகர் (abidhA ena am sagar) : people in this beautiful world were terrified and sought Your refuge, அபிதா (abhitha) : ஆபத்தில் முறையிட்டு கூறும் சொல்; அஞ்சகர்/அம் ச(ஜ)கர்( anjagar/am sagar) : அழகிய ஜகத்தோர்;

வலி அற்ற அசுரேசரும் மங்கி ட(vali atra asurEsaru mangida) : and kings of the demons, bereft of power, lost their lustre; வலிமை நீங்கிய அசுரத் தலைவர்களும் பொலிவு இழந்திட, வலி அற்ற (vali atra) : வலிமை இழந்த;

வடிவேலால் மலை வித்தக (vadivElAl malai viththaga) : when You fought with Your sharp spear, Oh Wise One! கூரிய வேலினால் மலைக்கும்படியாக போர் செய்த ஞானியே, ; மலை (malai) : மலைந்த;

வானவர் இந்திரர் மலர் கைகொடு மாதவரும் தொழ (vAnavar indhirar malark kaikkodu mA thavarum thozha) : The celestials, IndrAs and sages worshipped You with flowers in their hand

வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே.(vadivutra oRu thOgaiyil vandharuL perumALE.) : when You elegantly mounted Your unique and beautiful peacock and came to bless all, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே