353. கடலை பயறொடு


ராகம் : பெஹாக்தாளம்: 1½ + 2 + 4
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவையினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகையொழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற
நிலமு நெறுநெறு நெறுவென வருமொருகொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
நிகரி லயில்வெயி லெழுபசு மையநிறமுளதான
நடன மிடுபரி துரகத மயிலது
முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
நளின பதவர நதிகுமு குமுவெனமுநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவண மதில்வள ரழகியபெருமாளே.

Learn The Song



Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 P N3 D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 S

Paraphrase

கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு (kadalai payaRodu thuvarai eL aval pori sukiyan vadai ka(n)nal kathali i(n)namuthodu ) : Along with peanuts, lentils, split beans, sesame-seed, puffed rice, sukiyan (a sweet dish made of roasted ball of coconut and jaggery), vadai (fried lentil dough), sugarcane and plantain, all of which taste like nectar, க(ன்)னல்(kan(n)al) : sugarcane;

கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற (kaniyum muthu pala kani vakai nalam ivai inithAkak kadal koL puvi muthal thuLirvodu vaLam uRa) : ripe and mature fruits of many kinds are mixed happily; for the prosperity of all people living on this earth surrounded by the seas, பழுத்துள்ள முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன், கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளமுடன் இருப்பதற்காக,

அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன் அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற (amuthu thuthi kaiyil manam athu kaLi peRa karuNaiyudan a(L)Li thiruvaruL makizhvuRa) : With great compassion, He (lord Ganesha) happily scoops that food with His trunk ; மனம் மகிழ்ச்சியுடன் கருணை மிகுந்து தனது துதிக்கையில் (மேற்கண்ட) கலவையை அமுதாக அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க,

நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருக சண்முக என (nedithAna kudaku vayiRinil adaividu matha kari piRaku varum oru muruku saNmuka ena) : and stuffs that food in His large pot-belly; Proclaiming You as the matchless six-faced Lord Murugan who is the younger brother of that wild elephant; பெரிய குடம் போன்ற வயிற்றினில் அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே என்று, குடகு (kudagu) : குடம் போன்ற அல்லது குடகு மலை போன்ற;

குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல் ( kuviya iru karam malar vizhi punalodu paNiyAmal) : I have never prostrated at Your feet by folding my two arms and shedding tears from my wide-open eyes; இரண்டு கைகளும் குவிய, மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக, உன்னைப் பணியாமல்,

கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையின் அலைவுடன் ( kodiya nediyana athi vinai thuyar kodu vaRumai siRumaiyin alaivudan) : instead, my mind has been drifting wearily, propelled by the effect of my enormous past evil deeds and poverty, and caused humiliation and misery; கொடியதும் பெரிதானதுமான மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைச்சல் அடைந்து,

அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ (arivaiyar kuzhiyil muzhukiyum azhukiyum uzhal vakai ozhiyAthO) : will I never be able to kick away the habit of falling into the treacherous pits laid by the whores and roaming about towards utter decay? விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும், பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ?

நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு மறலி வெரு உற ரவி மதி பயம் உற (nediya kadalinil mudukiye varam uRu maRali veru uRa ravi mathi payam uRa) : Scaring away the gifted God of Death (Yaman) who rises swiftly like a swelling sea (to take lives away), and terrifying the sun and the moon; பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும்,

நிலமும் நெறு நெறு நெறு என வரும் ஒரு கொடிதான நிசிரர் கொடுமுடி சட சட சட என (nilamum neRu neRu neRu ena varum oru kodithAna nisirar kodumudi sada sada sada ena) : knocking down the heads of the evil demons marching into the battlefield, making their heads fall down with a thundrous sound and making the earth shake precariously ; பூமியும் நெறு நெறு என அதிரவும் போர்க்களத்துக்கு வந்த கொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள் சட சட சட என்று அதிர்ந்து வீழவும்,

பகர கிரி முடி கிடு கிடு கிடு என (pagara giri mudi kidu kidu kidu ena) : the peaks of the famous eight mountains began to shake and rumble; சொல்லப்படும் எட்டு மலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும், பகர கிரி (pagara giri) : சொல்லப்படும் (அல்லது அழகிய) மலை;

நிகர் இல் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான நடனம் இடு(ம்) பரி துரகதம் மயில் அது (nigar il ayil veyil ezhu pasumaiya niRam uLathAna nadanam idu(m) pari thurakatham mayil athu) : when You mounted the horse-like, dancing and bright peacock, holding Your matchless spear in the hand, உவமை இல்லாத வேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும் வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி, பரி, துரகதம் (pari, thuragatham) : horse;

முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் நளின பத (mudugi kadumaiyil ulagathai valam varum naLina patha) : and fiercely went around the earth at mighty speed, Oh Lord with hallowed lotus feet, வேகமாக உக்கிரத்துடன் புவியை வலம் வந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவனே,

வர நதி குமு குமு என முநிவோரும் நறிய மலர் கொடு ஹர ஹர ஹர என (vara nathi kumu kumu ena munivOrum naRiya malar kodu hara hara hara ena) : as the perennial river Gangai gushed with a bubbling sound and the sages worshipped You with fragrant flowers chanting "Hara, Hara, Hara"; ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க, முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற,

அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை ந(ண்)ணியே (amarar siRai keda naRai kamazh malar misai na(N)NiyE) : and the celestials were liberated from their prison. You took Your seat upon the fragrant lotus in தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து; நறை(naRai) : fragrant;

சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே.(saravaNam athil vaLar azhagiya perumALE.) : the pond at SaravaNam where You grew up, Oh Great One! சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே