355. கருப்பையில்


ராகம்: ஆரபிசங்கீர்ண த்ரிபுடை
கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்துமறுகாதே
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்களுரையாதே
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்கருதுநீயே
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கிமகிழ்வோனே
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்சமரவேளே
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்தமயிலோனே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்புமிசையோனே
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்தபெருமாளே.

Learn The Song


Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

கருப்பையில் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே (karuppaiyiR sukkilaththu ulaiththu uRpaviththu maRugAthE) : In order that I do not get anguished by the misery of being in the the womb and tossed about in seminal fluid; கருப்பையிலே சுக்கிலத்திலே அலைப்புண்டு தோன்றி கலங்காமலும் ;

கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே (kapattu asattarkku ithaththa chithrath thamizhkkaL uraiyAthE:) : and not compose beautiful Tamil poems to please deceitful nitwits; வஞ்சனை கொண்ட மூடாத்மாக்களிடம் இன்பம் தருவதான அழகிய தமிழ் பாடல்களை சொல்லாமலும்;

விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே (viruppamutRu thuthiththu enai patRu ena karuthu neeyE) : You have to plan to guide me saying 'firmly hold My feet with loving prayers'. 'ஆசையுடனே துதித்து என்னை பற்றுவாயாக' என்று என்னைக் குறித்து நீயே நினைக்க வேண்டுகின்றேன்.;

வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே (veLippada patRidap paduththa tharukki magizhvOnE) : You take delight in appearing before Your devotees, supporting them firmly and accepting their devotion! அடியார்களின் முன் வெளிப்படவும், அவர்களைக் கைவிடாது பற்றி விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைபவனே; தருக்கு — செருக்கு; வலிமை; களிப்பு;

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்! (நக்கீரர் திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு)

மனத்துடன் கடுமையான போர் நடத்தும் அடியார்கள் முருகா என்று ஒரு முறை ஓதினால் அவன் முகம், வேல், திருவடிகள் இருக்காலும் — நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும், இகத்திலும் பரத்திலும் — தோன்றும்!

பருப்பதத்தை தொளைத்த சத்தி படைச் சமரவேளே (paruppathaththai thoLaiththa saththip padaic chamaravELE) : You are the great warrior holding the powerful SakthivEl (Spear) that pierced through Mount Krouncha; கிரெளஞ்சமலையைத் தொளைத்த சக்தி வேலினை ஏந்திய போர் வீரனே,

பணிக் குலத்தைக் கவர்ப்பதத்துக்கு அளித்த மயிலோனே (paNik kulaththai kavarp pathaththukku aLiththa mayilOnE ) : You mount the Peacock that sent the whole bunch of snakes into captivity between the split toes of its feet, பாம்புக் கூட்டங்களை தனது பிளவுபட்ட பாதங்களுக்கு இடையே அகப்படுத்தியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே! கவர்ப்பதத்துக்கு = பிரிவு கொண்ட பாதங்களுக்கு; ,

செருப் புறத்துச் சினத்தை முற்றப் பரப்பு மிசையோனே (serup puRaththu chinaththai mutRap parappum misaiyOnE) : You are well known for spreading Your rage throughout the battlefield, போர்க்களத்தில் உன் கோபத்தை முற்றிலுமாக விரித்துக்காட்டிய புகழை உடையவனே; மிசை(misai) : eminence; உயர்ச்சி; செரு(seru) : fight; போர்;

தினைப் புனத்துக் குறத்தியைக் கைப் பிடித்த பெருமாளே.(thinaip punaththu kuRaththiyai kaip pidiththa perumALE.) : In the millet field, You took the hand of VaLLi, the damsel of the KuRavAs, in holy matrimony, Oh Great One! தினைப்புனத்திலே குறத்தி வள்ளியின் கையைப்பிடித்து பாணிக்கிரகணம் (திருமணம்) செய்து கொண்ட பெருமாளே;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே