358. குகையில் நவநாதரும்


ராகம் : பெஹாக்அங்க தாளம் (7)
2½ + 1½ + 1½ + 1½
குகையில்நவ நாத ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்கமுரல்வேதக்
குரகதபு ராரி யும்ப்ர சண்ட
மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரி யுங்கொ டுங்கணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும்அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்றுஅடைவேனோ
பகைகொள்துரி யோத னன்பி றந்து
படைபொருத பார தந்தெ ரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்டவரைமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சி வந்த
பவளமத யானை பின்பு வந்தமுருகோனே
மிகுதமர சாக ரங்க லங்க
எழுசிகர பூத ரங்கு லுங்க
விபரிதநி சாச ரன்தி யங்கஅமராடி
விபுதர்குல வேழ மங்கை துங்க
பரிமளப டீர கும்ப விம்ப
ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த பெருமாளே.

Learn The Song



Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 P N3 D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 S

Paraphrase

The form of the soul is arivu. Arivu is Consciousness about one’s Self (tannai ariyum arivu - individual consciousness). Individual self is none other than Siva who has forgotten his real nature. When jiva identifies “itself” as Siva (Universal Consciousness), then the limited consciousness merges with the Supreme Consciousness. This is like space merging with space and light merging with light. Siva is the grace that helps jiva in this effort. When this realization occurs, the soul has nothing else to know, no other state to reach, except to remain with this awareness (arive vadivendru arivathu). This state of realization is outside the reach of even Siddhas and gods such as Brahma, Vishnu and Siva. (Here the Saint talks of merging and realizing the Para Brahmam, which is distinct from the various manifested forms such as the aforementioned gods.)

குகையில் நவ நாதரும் (gugaiyil nava nAtharum) : The nine prime sidhdhAs doing penance in the caves; குகையில் தவம் புரியும் நவநாதராகிய பெரும் சித்தர்களும்,
The nine senior SidhdhAs are as follows:
SathyanAthar, SathokanAthar, AadhinAthar, AnAdhinAthar, VaghuLanAthar, MadhanganAthar, MachchendranAthar, GadendranAthar and GorakkanAthar. They did penance in the caves praying to Lord SivA and attained the status of Sidhdha.

சிறந்த முகை வனச சாதனும் (siRantha mukai vanasa sAthanum ) : BrahmA, whose origin was from the great lotus blooming from Vishnu's belly; திருமாலின் தொப்புளாம் தாமரை மொட்டில் தோன்றிய பிரமனும், முகை (mugai) : அரும்பு, மொட்டு ; வனச சா(ஜா)தன் (vanasa sAthan) : தாமரையில் தோன்றிய பிரம்மா ;

தயங்கு குணமும் அசுரேசரும் (thayangku kuNamum asurEsarum ) : the three distinguished characteristics, namely, Sathvam (tranquility), rajO (aggressiveness) and thamas (sluggishness); the leaders of the demons;

தரங்க முரல் வேதக் குரகத புராரியும் (tharanga mural vEthak kurakatha purAriyum ) : Lord SivA, who destroyed Thiripuram using the four VEdAs as His chariot's horses, which roared like the wavy seas; வேதங்களை அலைகடல் போல் ஒலிக்கும் நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை அழித்த சிவபிரானும்; திரிபுர தகனம் செய்யப் புகுந்த இறைவனுக்கு ஒப்பற்ற தேரை செய்து கொடுத்தனர் தேவர்கள். அதற்கு நான்கு வேதங்களுமே குதிரைகளாக இருந்தன. தரங்கம் (tharangam) : கடல்; முரல் (mural) : ஒலி; குரகதம் (kuragatham) : a horse (குரம் hoof + கதம் moving);

ப்ரசண்ட மரகத முராரியும் ( prasaNda marakatha murAriyum) : valiant Vishnu of emerald-green complexion who was known as MurAri, having killed the demon Muran; வீரம் மிகுந்த, மரகதப்பச்சை வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம் திருமாலும்,

செயங்கொள் குலிச கை வலாரியும் (seyangkoL kulisa kai valAriyum) : triumphant IndrA, holding a mace (kulisam) in his hand with which he conquered the demon, Valan; வெற்றி பெற்ற வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனும்,

கொடுங்கண் அறநூலும் (kodungkaN aRanUlum) : all the text books of SAstrAs laying down strict rules; கடுமையான விதிகளை வகுக்கும் சாஸ்திர நூல்களும்,

அகலிய புராணமும் (akaliya purANamum) : detailed legendary stories of yore of various Gods; விரிவான புராணங்களும்,

ப்ரபஞ்ச சகலகலை நூல்களும் (prapanja sakalakalai nUlkaLum) : the entire works of art in this world; and

பரந்த அருமறை அநேகமும் (parantha arumaRai yanEkamum) : the very many extensive scriptures of exceptional value;

குவிந்தும் அறியாத ( kuvinthum aRiyAtha) : all of these convened in an attempt to comprehend You but failed.

அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து (aRivum aRiyAmaiyung kadantha aRivu thirumEni yenRu uNarnthu) : Realising that You are the embodiment of that wisdom which transcends all knowledge and ignorance,
மனவாசகங் கடந்த நிலை என்பது ஆன்மாவானது விஞ்ஞானமய கோசம் எனப்படும் கஞ்சுக சரீரத்தில் நிலைபெறும் 35 கருவிகளில் பிராணனும் புருடனுமாகிய கருவி இரண்டும் ஏனைய 33 கருவிகளும் நீங்கிய துரியாதீத நிலைையில் ஆன்ம அறிவு விளங்கப்பெற்ற நிலையாகும். இதுவே மனதற்ற நிலை எனபடுவது. சீவ கரணங்கள் எல்லாம் சிவகரணங்களாகப் பெறும் நிலை இது. ஆன்மாவின் இந்த துரியாதீத அவத்தையில் மெய்ஞ்ஞான அனுபவம் கிட்டும்.

உன் அருண சரணாரவிந்தம் என்று அடைவேனோ (un aruNa saraNAravintham enRu adaivEnO) : when shall I attain Your rosy lotus feet?

பகை கொள் துரியோதனன் பிறந்து (pakaikoLthuri yOthanan pi Ranthu) : DuriyOdhanan, a symbol of enmity, was born to

படை பொருத பாரதம் (padaiporutha bArathan) : wage the war of MahAbhArathA with his armies;

தெரிந்து பரியதொரு கோடு கொண்டு சண்ட வரை மீதே (therinthu pariyathoru kOdu koNdu saNda varaimeethE) : Knowing that story (of Mahabharata), He scribed it on top of the great Mount Meru with His lone tusk; பருத்த தனது ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது,

பழுதற வியாசன் அன்று இயம்ப (pazhuthaRa viyAsan anRiyampa) : as Sage VyAsar once narrated the epic flawlessly; குற்றமற்ற வகையில் வியாச முநிவர் முன்பொரு நாள் சொல்லி வர,

எழுதிய விநாயகன் (ezhuthiya vi nAyagan) : and was transcribed by VinAyagA;

சிவந்த பவள மத யானை (sivantha pavaLa mathayAnai) : with coral-red complexion and the form of a raging elephant;

பின்பு வந்த முருகோனே (pinpu vantha murukOnE) : You are His younger brother, Oh MurugA!

மிகு தமர சாகரம் கலங்க (migu thamara sAgaram kalanga) : The stirred-up seas made a loud noise, தமரம் (thamaram) : din, roar, great noise, பேரொலி;

எழு சிகர பூதரம் குலுங்க (ezhusikara pUtharam kulunga) : the seven crests of (SUran's) hills shook;

விபரித நிசாசரன் தியங்க அமராடி (viparitha nisAsaran thiyanga amarAdi) : and the perverted demon, SUran, was bewildered when You fought in the battlefield.

விபுதர் குல வேழ மங்கை (viputharkula vEzha mangai) : She belonged to the lineage of the celestials; She was reared by the elephant (AirAvadham);

துங்க பரிமள படீர கும்ப விம்ப ம்ருகமத பயோதரம் (thunga parimaLa padeera kumba vimba mrugamatha payOtharam) : Her large and bright bosoms are smeared with pure sandal paste, and they have the fragrance of musk; பரிசுத்தமானதும், நறுமணம் கொண்டதும், சந்தனம் அணிந்ததும், குடம் போன்றதும், ஒளி கொண்டதும், கஸ்தூரி அணிந்ததுமான

புணர்ந்த பெருமாளே.(puNarnth perumALE.) : and You embrace that DEvayAnai's chest, Oh Great One! கொங்கையை அணைந்த பெருமாளே

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே