364. சலமலம் அசுத்த


ராகம் : குந்தலவராளி அங்கதாளம் (5½)
4 + 1½
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
தடியுடல் தனக்கு ளுற்றுமிகுமாயம்
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
தனிலுரு மிகுத்து மக்களொடுதாரம்
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
கருவழி யவத்தி லுற்றுமகிழ்வாகிக்
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
கடுவினை தனக்குள் நிற்பதொழியாதோ
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
மழுவனல் கரத்துள் வைத்துமருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
மறைதொழ நகைத்த அத்தர்பெருவாழ்வே
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
படையது பொருப்பில் விட்டமுருகோனே
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
பலருய அருட்கண் வைத்தபெருமாளே.

Learn The Song


Raga Kuntalavarali (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S M1 P D2 N2 D2 S    Avarohanam: S N2 D2 P M1 S

Paraphrase

"நாடா பிறப்பு முடியாதோ என நான் துயரத்துடன் அரற்றுவது என் வினையினால் வந்தது என்றால் அது உன் திருச்சபையில் ஏற்கப்படாது" என்று அருணகிரிநாதர் கூறியபடி கர்ம வினைகள் வலியன. அனுபவித்தே ஆக வேண்டும். பிறவி எடுத்த நாம் அதின் மாயம் புரியாமல் மகிழ்கிறோம்; பல கல்விகள் கற்றும் பயனின்றி அல்லல் படுகிறோம். பிறவி சூழலிலிருந்து மீள வேண்டுமானால் அவன் கருணை வேண்டும்.

சலமலம் அசுத்த மிக்க தசை (sala malam asuththa mikka thasai) : The urine, the faeces, flesh full of filth and muck,

குருதி அத்தி மொய்த்த தடியுடல் தனக்குள் (kuruthi aththi moyththa thadiyudal thanakkuL) : blood and bones are packed into this stout body; அத்தி/அஸ்தி(aththi) : bone, எலும்பு;

உற்று மிகு மாயம் சகலமும் இயற்றி (utRu mikumAyam sakalamum iyatRi) : living in this body, I have been indulging in many deceitful acts;

மத்தமிகும் இரு தடக்கை அத்திதனில் உரு மிகுத்து ( maththamigum iru thadakkai aththi thaniluru miguththu) : my body has acquired a huge size of a wild elephant with a trunk; தடக்கை (thadakkai) : large/wide hand; இரு தடக்கை (iru thadakkai) : dark and big hand or trunk; அத்தி (ஹஸ்தி) (aththi/hasthi) : elephant;

மக்களொடு தாரம் கலனணி துகிற்கள் (makkaLodu thAram kalanaNi thukiRkaL) : centering around my children, my wife, jewels, clothings, கலன்(kalan) : ornaments;

கற்பினொடு குலம் அனைத்து முற்றி (kaRpinodu kulam anaiththu mutRi) : my education and my clan, and bult a glorious life around them; கற்பு (kaRpu) : கல்வி;

கருவழி அவத்திலுற்று மகிழ்வாகி (karuvazhi yavaththi lutRu makizhvAki) : I was completely delighted in entering this useless path of worldly life through a womb; பிறப்பு வழி என்ற பயனற்ற பாதையில் சென்று அதில் மகிழ்ச்சி அடைந்தவனாகி,

கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்த முற்றி (kalai pala pidiththu niththam alaipadum anarththa mutRi) : I wandered through life, busying myself everyday painfully learning so many diverse works of art; கலை பல பிடித்து - பல வித சாத்திர நூல்களைக் கற்று;

கடு வினை தனக்குள் நிற்பதொழியாதோ (kaduvinai thanakkuL niRpathozhiyAthO) : I am caught within the web of my bad deeds; will this misery never end?

மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து (malai magaL idaththu vaiththu mathi punal sadaikkuL vaiththu) : Keeping PArvathi, the daughter of mountain Himalaya, on the left side of His body and the moon and River ganga inside His tresses,

மழு அனல் கரத்துள் வைத்து (mazhuvanal karaththuL vaiththu) : holding the pickaxe and fire in His hands; மழு (mazhu) : pickaxe, பரசு என்ற ஆயுதம்;

மருவார்கள் மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இடக்கை வைத்து (maruvArkaL madivuRa ninaiththu veRpai varisilai yidakkai vaiththu) : and with the intention of destroying the enemies (the three demons of Thiripuram), He held the Mount Meru as a bow in His left arm மருவார் (maruvAr) : பகைவர்; சிலை (silai) : = bow;

மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே (maRai thozha nagaiththa aththar peruvAzhvE) : and burnt down Thiripuram by His mere smile, as the VEdAs stood worshipping; You are the treasured son of that Lord SivA!

பல திசை நடுக்கமுற்று நிலை கெட (pala thisai nadukkamutRu nilai keda) : People in many directions trembled and lost their balance;

அடற்கை உற்ற படையது பொருப்பில் விட்ட முருகோனே (adaRkai utRa padaiyathu poruppil vitta murugOnE) : when You threw the powerful spear from Your strong arms at the Mount Krouncha, Oh Lord MurugA! அடல் (adal) : victory; among other meanings are valor, power, murder...; பொருப்பு (poruppu) : (Meru) mountain;

பழுதறு தவத்திலுற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய (pazhuthaRu thavaththilutRu vazhi mozhi uraiththa paththar palar uya) : In order to redeem Your devotees who pursue an impeccable path of penance and praise Your glory, வழி மொழி(vazhi mozhi) : everyday prayers, வழிபாட்டுத் துதி மொழி;

அருட்கண் வைத்த பெருமாளே.(arutkaN vaiththa perumALE.) : You cast Your gracious eyes on them, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே