368. சுட்டது போலாசை


ராகம் : ஹிந்தோளம்தாளம் : சங்கீர்ணசாபு 3 + 1½ (4½)
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
சுத்தநிரா தாரவெளிகாண
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறிமதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
முத்திரையா மோனமடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
னப்பிரமா வோடவரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
எத்தனையோ கோடியசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
பத்திருதோள் வீரதினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமம றாது
பத்திசெய்வா னாடர்பெருமாளே.

Learn The Song



Raga Hindolam (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 M1 D1 N2 S    Avarohanam: S N2 D1 M1 G2 S

Paraphrase

சுட்டது போல் ஆசை விட்டு (suttadhu pOlAsai vittu) : I want to renounce desires like a hand flings away burning hot stuff. கையிலுள்ள ஒரு சூடான பொருளை கை எப்படி உதறுகிறதோ, அது போல ஆசைகளை நான் உதறித் தள்ளி,

உலக ஆசார துக்கமிலா ஞான சுக மேவி (ulaga AchAra dhukkamilA nyAna suga mEvi) : I want to reach the state of blissful wisdom, devoid of worldly miseries. உலக வாழ்வில் ஏற்படும் துயரங்கள் அற்ற ஞான சுக நிலையை நான் அடைந்து,

சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளி காண (soR karaNAtheetha niRguNa mUdAdu sudhdha nirAdhAra veLi kANa) : I want to have the vision of the spotless and unfettered cosmos that is beyond words and perception and is featureless. சொல்லுக்கும், மனத்திற்கும் எட்டாது நின்று, குணங்களே இல்லாத, பரிசுத்தமான, சார்பற்றதாக விளங்கும் பர வெளியை நான் கண்டு, கரணம் (karaNam) : மனம், வாக்கு, காயம் (உடல்) புத்தி, சித்தம், அகங்காரம்;

மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார முட்டவு மீதேறி மதி மீதாய் (mottu alar vAreeja chakra jatAdhAra muttavu meedhERi madhi meedhAy) : That which pervades the blossoming lotus chakrAs, the six fundamental kundalini centres, and transcends them, and is superior to the moon showering nectar; மொட்டுக்கள் மலர்ந்த தாமரையாம் ஆறு ஆதார குண்டலினி சக்கரங்கள் அனைத்திலும், அவற்றைக் கடந்தும் இருப்பதுவும், அமுதைப் பொழியும் சந்திரனுக்கு மேலானதும் ஆன; வாரீசம் = தாமரை, முட்டவுமீதேறி = அனைத்திலும், அவற்றைக் கடந்தும் இருப்பதுவும், மதி மீதாய் = சந்திர கலையாகிய அமிர்த நிலைக்கும் மேலாய்;

முப்பதும் ஆறாறு முப்பதும் வேறான முத்திரையா மோனம் அடைவேனோ (muppadhum ARARu muppadhum vERAna mudhdhiraiyA mOnam adaivEnO) : that which is different from the ninety-six tenets (30+36+30 = 96); and that which is the manifested symbol of sublime silence; will I ever attain that? முப்பதுடன் ஆறு ஆறும் ஆன முப்பத்தாறும், இவற்றோடு முப்பதும் — ஆக 30+36+30= 96 தத்துவங்கள்; முத்திரையாம் = அடையாளமாகும்;
தொண்ணூற்றாறு (30+36+30=96) தத்துவங்களுக்கும் வேறுபட்டதான அடையாள அறிகுறியாகிய மெளன நிலையை நான் அடைவேனோ? ( மௌனம்’ என்பது வெறும் ஐந்து புலன்களை மட்டும் அடக்குவது அல்ல. ஆறாவது புலனான எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்துவது தான். அந்த ஓட்டத்தை நிறுத்திய மௌன நிலையில் தான் சிதாகாசமான வெட்ட வெளியை அறிவாய் உணர முடியும். )

எட்டவொணா வேதனத்தொடு கோ கோ என அப் பிரமா ஓட (ettavoNA vEdhanaththodu hO hO venabiramA Oda) : BrahmA ran away screaming in unbearable pain;

வரை சாய (varai sAya) : Mount Krouncha collapsed; கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும்,

எற்றிய ஏழாழி வற்றிட (etriya EzhAzhi vatrida) : the seven seas with rising waves became dry; அலைகள் வீசும் ஏழு கடல்கள் வற்றி விடவும்

மாறாய எத்தனையோ கோடி அசுரேசர் பட்டு (mARAya eththanaiyO kOdi asurEsar pattu) : millions of hostile demons and their leaders were destroyed; பகைமையோடு வந்த பல கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிபடவும்; மாறுஆய = பகைவர்களான;

ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்திரு தோள் வீர (oru sUr mALa vikrama vElEvu paththiru thOL veera) : and SUran, the matchless demon, died when You hurled Your victorious spear with all the might of Your twelve shoulders, Oh Valiant One! ஒப்பற்ற சூரன் இறந்து படவும், பராக்கிரமம் நிறைந்த வேலைச் செலுத்திய பன்னிரு தோள் வீரா,

தினை காவல் பத்தினி தோள் தோயும் உத்தம (thinai kAval paththini thOL thOyum uththama) : She guarded the millet field; she is VaLLi, the virtuous woman; and You hugged her shoulders, Oh Upright One!

மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே. (mARAdhu baththi seyvA nAdar perumALE.) : The celestials worship You steadfastly, Oh Great One!

தொண்ணூற்றாறு தத்துவங்கள்

தத்துவங்கள் என்பவை, உலகின் தோற்றம், பிரபஞ்சம் இவற்றை ஆக்கும் மூலப்பொருட்கள். சைவ சித்தாந்தத்தின் படி, மும்மலங்களில் ஒன்றான மாயை, சிவத்தால் இயக்கப்படும் போது, இந்த தத்துவங்கள் படிப்படியாகத் தோன்றுகின்றன. இந்த மாயாமலமானது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்று மூன்றாகப் பிரிந்து, அவை ஒவ்வொன்றிலுமிருந்து, முறையே ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என, மொத்தம் முப்ப்பத்தாறு தத்துவங்கள் தோன்றுகின்றன. இவை, உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும். சுத்தமாயையிலிருந்து தோன்றும் ஐந்தையும், "சிவதத்துவம்" என்றும், அசுத்தமாயையிலிருந்து தோன்றும் ஏழையும் "வித்தியாதத்துவம்" என்றும், பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் இருபத்து நான்கையும் " ஆன்ம தத்துவங்கள் 24 என்றும் வகைப்படுத்துவர்.

மேற்கூறிய அகத் தத்துவங்கள் 36 உடன் சித்தர்களால் சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கூறாக வகைப்படுத்தப்பட்ட 60 உடற்கூற்றுத் தத்துவங்கள் சேர்ந்து தொண்ணூற்றாறு தத்துவங்களால் செய்யப்பட்டது மனித உடல். இதில் தான் ஆன்மாவாகிய உயிர் வாழுகின்றது. எப்போது அந்தக் உடல் பழுதடைந்து கெட்டு உயிர் போகிறதோ அப்போது இந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடி விடுகின்றன.

96 தத்துவங்கள் – 25 பஞ்சபூத காரியங்கள், 5 வாசனாதிகள்/அவத்தைகள், 10 வாயுக்கள், 10 நாடிக்கள், 4 வாக்குகள், 3 மலங்கள், 3 குணங்கள், 5 சிவ தத்துவம், 7 வித்யா தத்துவம், 24 ஆன்ம தத்துவம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே