385. நாலிரண்டிதழ்


ராகம் : துர்காஅங்க தாளம் (7½)
1½ + 2 + 2 + 2
நாலி ரண்டித ழாலே கோலிய
ஞால முண்டக மேலே தானிள
ஞாயி றென்றுறு கோலா காலனு மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
யோக மந்திர மூலா தாரனு
நாடி நின்றப்ர பாவா காரனு நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
நூல றிந்தம ணீமா மாடமு
மேத கும்ப்ரபை கோடா கோடியு மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
சால மண்டப மீதே யேறிய
வீர பண்டித வீரா சாரிய வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
மாரி பிங்கலை நானா தேசிய
மோகி மங்கலை லோகா லோகியெ வுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி யம்பிகை ஞாதா வானவ
ராட மன்றினி லாடா நாடியஅபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
சூலி மந்த்ரச பாஷா பாஷணி
காள கண்டிக பாலீ மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூலாய் வாள்சிவ
காம சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே.

Learn The Song



Paraphrase

In our physical body, there are seven major chakras and are doors to higher consciousness. Chakras are vortexes of energy located vertically along the spine, and correspond to the spinal plexuses in the physical body. Chakras are known as lotuses, and each chakra symbol is portrayed with a different number of petals that are indicative of their vibratory frequency. Root Chakra has 4 petals; Sacral Chakra has 6 petals; Solar Plexus Chakra has 10 petals; Heart Chakra has 12 petals; Throat Chakra has 16 petals; Third Eye Chakra has 2 petals; Crown Chakra has 1,000 petals. Each of the chakras are associated with different gods.

96 தத்துவங்கள் கொண்ட மனிதன் உடலில் முக்கியமானவை மூச்சுக் காற்றை இயக்கும் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா எனப்படும் ஆறு சக்கரங்களான ஆறு ஆதாரத் தலங்கள். மூலாதாரம் நான்கிதழ் கமலம்; சுவாதிஷ்டானம் ஆறிதழ் கமலம்; மணிபூரகம் பத்து இதழ்களை உடையது; அநாகதம் பன்னிரண்டு இதழ்களையுடையது; விசுத்தி பதினாறு இதழ்க் கமலம்; ஆக்ஞை இரண்டிதழ் கமலம். ஒவ்வோர் ஆதாரத்திலும் ஒவ்வொரு தெய்வம் உண்டு. உதாரணத்திற்கு மூலாதாரத்திற்கு உரியவராக இருப்பவர் கணபதி.

மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி மேலே எழும்பி வரும்போது ஆதாரக் கமலங்கள் மலர்கின்றன. சுவாதிட்டானமாகிய நாற்சதுர வீட்டின் நடுவில் ஆறிதழ் தாமரை வட்டமும், நடுவே “ந”கார எழுத்தும், இலிங்க பீடத்தின் நடுவே அக்கினிபோல் செந்நிறத்தையுடைய பிரும்மனும், சரசுவதி தேவியும் வீற்றிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. சுவாதிட்டானத்திற்கு மேல் நாபி ஸ்தானத்தில் மணிபூரகம் என்னும் உந்தி 1008 நரம்பு நாடிகள் சூழப்பட்டுள்ளது. 10 இதழ் தாமரை வட்டமும் அதன் நடுவே “ம”கார எழுத்தும், மரகத வண்னமான மகாவிட்டுணுவும், மகா இலக்குமியும் அமர்ந்திருப்பார்கள். மணிபூரகத்துக்கு 8 அங்குலம் மேல் முக்கோண வடிவில் இருதய ஸ்தானத்தில் அநாகதம் உள்ளது. இதன் நடுவே 12 இதழ் தாமரையும், நடுவே “சி”கார அட்சரமும் உருத்திரனும், பார்வதியும் கொலுவிருப்பர். அநாகதத்திற்கு 12 அங்குலத்துக்கு மேல் கழுத்து ஸ்தானத்தில் அறுகோண வடிவில் விசுத்தி சக்கரம் இருக்கும். அதன் நடுவே 16 இதழ் தாமரையும், “வ”கார அட்சரமும், அவற்றின் நடுவே மேகவண்ணத்துடன் மகேசுவரனும், மகேசுவரியும் இருப்பார்கள். விசுத்திக்கு 16 அங்குலத்துக்குமேல் நெற்றியில் புருவமத்தியில், இரண்டிதழ் கொண்ட தாமரையும் ய”காரமும் அதன் நடுவே சதாசிவனும், மனோன்மணியும் கொலுவிருப்பதாகக் கூறுவர். ஆக்கினைக்கு எட்டு அங்குலத்திற்கு மேல் சகஸ்ரததளம் அல்லது பிரம்மரந்திரம் எனும் 1000/1008 இதழ் தாமரைப்பூ உள்ளது.

நம் உடலில் இருக்கும் 72000 நாடி நரம்புகளை இயக்குவது இந்த ஆறு தலங்கள் தான். மூலாதாரத்தில் இருக்கும் விந்து சக்தி பிராண வாயுவுடன் சேர்ந்து குண்டலினியாக சுழுமுனை வழியே, மேலே ஏறி மேலைநிலம் என்ற ஆக்ஞா சக்கரத்தில் உள்ள பெண் சக்தியான நாத சக்தியுடன் இணைந்தால் அமிர்தம் சுரக்கும்.

நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டக(ம்) மேலே ( nAliraNdu idhazhAlE kOliya nyAla muNdaga mElE) : Seated on the suspended lotus made of six petals called the SwadhishtAnam chakrA centre, நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியானவள் அதற்கு மேலுள்ள ஆறு இதழ் தாமரையின் மேல் (சுவாதிஷ்டானம் என்னும்) ஆதார நிலையில் தொங்கிப் பொருந்தி உள்ள, , ஞால் (nyAla) : அதாவது நால் = தொங்குதல்; யானைக்கு வாய் தொங்குவதால், நால்வாய் என்று பெயர். உலகம் அந்தரத்தில் தொங்குவதாகக் கருதப்பட்டதால் ஞாலம். முண்டகம் = வாழை, தாமரை;

தான் இள ஞாயிறு என்று உறு கோலா காலனும் (thAn iLa nyAyiRu endruRu kOlA kAlanum) : is Lord BrahmA who is seated gorgeously like a rising sun with a reddish-gold hue; உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள, ஆடம்பரமான பிரமனும்,

அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும் (adhin mElE nyAlam uNda pirANa AdhAranum) : right above that chakrA (called MaNipUraka) is seated Lord VishNu who once swallowed the earth and who is the protector of all lives; அந்த ஆதாரத்தின் மேல் நிலையில் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) பூமியை உண்டவரும், உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவருமாகிய திருமாலும்,

யோக மந்திர மூலாதாரனு(ம்) (yOga manthira mUlAdhAranum) : In the lotus of the heart (in AnAhatham ChakrA), which is the base of all yOgAs and ManthrAs, is seated Lord Rudran; யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும்,

நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக ( nAdi nindra prabAvA kAranu naduvAga) : sought after by the Trinity (described above), is the Lord (SadAsivan), of the form of light and glory and seated in the middle (of the two eyebrows); (இம்மூவரும்) தேடி நிற்கும், ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடு நிலையில் ஆக்ஞா சக்கரத்தில் வீற்றிருக்க,

மேல் இருந்த கிரீடா பீடமு(ம்) (mEl irundha kireetA peetamum) : above that chakrA is the seat meant for Your mystic frolics and இவர்களுக்கு மேலான நிலையில் (உனது) லீலைகளுக்கு இருப்பிடத்தில் (சஹாஸ்ராரத்தில்) ,

நூல் அறிந்த மணீ மா மாடமும் (nUl aRindha maNee mA mAdamu) : the elegant gem-studded shrine that is identified by the scriptures as the Lord's seat; சாஸ்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும்,

மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக (mE thagu prabai kOdA kOdiyum idamAga) : It is that abode of Yours where millions of dazzling rays shine; மேன்மை வாய்ந்த ஒளி கோடிக் கணக்காய் சுடரொளி வீசும் (உனது) இடமான சஹாஸ்ராரத்தில்,

வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய வீர பண்டித (veesi nindru uLa dhUpA dheepa visAla mandapa meedhE ERiya veera paNditha) : in that wide hall of Your shrine many fragrant incenses and lamps are displayed; and You are ensconced snugly in that centre, Oh valorous Pundit! வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதனே!
கற்பகந் தெருவில் வீதி கொண்டு, சுடர்
பட்டி மண்டபம் ஊடாடி இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் வெண்பொடிகொடு ...... (கட்டிமுண்ட)

வீர ஆசாரிய வினை தீராய் (veerA chAriya vinai theerAy) : Oh Gallant Master, kindly destroy all my deeds and save me! வீர குரு மூர்த்தியே, எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக.

ஆல கந்தரி மோடா மோடி ( Ala kandhari mOdA mOdi ) : She has stored poison in Her neck; She is the pompous Durga; விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், ஆடம்பரமுள்ள துர்க்கை, மோடா மோடி = பெருமிதம் மிக்க துர்க்கை; கந்தரம் = கழுத்து;;

குமாரி பிங்கலை நானா தேசி அமோகி (kumAri pingalai nAnA dhEsi amOhi) : She is ever youthful; Her complexion is of golden colour; She is attracted by several bright lights; She is devoid of any desires; மூப்பு இல்லாதவள், பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள், ஆசையற்றவள்,

மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி (mangalai lOkA lOki evuyir pAlum Ana sambrami ) : She is the most auspicious; She delivers and protects all lives; She is full of pride in Her love towards all; சுமங்கலி, எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள், எல்லா உயிர்களிலும் நிறைந்து விளங்குபவள், சம்பிரமம் --- நிறைவு;

மாதா மாதவி (mAthA mAdhavi) : She is the Mother Durga; துர்க்கைத் தாய்,

ஆதி அம்பிகை ஞாதா ஆனவர் ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி (Adhi ambikai nyAdhA vAnava rAda mandrinil AdA nAdiya abirAmi) : She the primordial Mother; She is exquisitely beautiful, seeking to dance on the same stage along with the Omniscient Lord, NadarAjar; ஆதி நாயகி, அம்பிகை, எல்லாம் அறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன் அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி,

கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி(kAla sankari seelA seeli thrisUli manthra sabashA bAshaNi) : She is the destroyer of Yaman, God of Death; She is the most immaculate of all pure deities; She holds the trident in Her hand; She speaks the choicest words of ManthrAs; காலனை அழித்தவள், பரிசுத்த தேவதைகள் யாவரிலும் தூயவள், முத்தலைச் சூலத்தை ஏந்தியவள், மந்திரங்களின் நல்ல சொற்களைப் பேசுபவள்/ மந்திரங்களின் பொருளாக விளங்குபவள்,

காள கண்டி கபாலி மாலினி கலியாணி (kALa kaNdi kapAlee mAlini kaliyANi) : She has a dark blue neck (because of Shiva's swallowing the poison); She holds a skull in Her hand; She wears garlands of flowers; She is always auspicious; கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், நித்ய கல்யாணி,

காம தந்திர லீலா லோகினி (kAma thanthira leelA lOkini) : She carries out the nuances of the act of love throughout the world; காம சாஸ்திரம் கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள்; பரதேவதை இந்தப் பஞ்ச பாணங்களையும் கரும்பு வில்லையும் தன் திருக்கரங்களில் பிடித்துக் கொண்டு, நம்முடைய இந்திரியங்கள் வெறி பிடித்து ஒடாமல் தன் பிடிப்பில் வைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறாள்.

வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம சுந்தரி வாழ்வே (vAma thanthira nUlAy vAL sivakAma sundhari vAzhvE) : She is the one researched by all the texts devoted to the worship of Shakthi; She is PArvathi, known as SivagAma Sundhari; and You are Her Treasure, Oh Lord! சக்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆராயப்படுபவள், அத்தகைய சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே,

தேவர்கள் பெருமாளே. (dhEvargaL perumALE.) : You are the Lord of all celestials, Oh Great One! தேவர்களின் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே