393. பகிர நினைவொரு

ராகம் : சஹானாதாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
பகிர நினைவொரு தினையள விலுமிலி
கருணை யிலியுன தருணையொ டுதணியல்
பழநி மலைகுரு மலைபணி மலைபலமலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்
பழகி யழகிலி குலமிலி நலமிலி
பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி லிகுலாலன்
திகிரி வருமொரு செலவினி லெழுபது
செலவு வருமன பவுரிகொ டலமரு
திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல்நினையாத
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி
திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலி லுணர்விலி சிவபத மடைவதுமொருநாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன்
மகுட மொருபது மிருபது திரள்புய
வரையு மறவொரு கணைதெரி புயல்குருந்ருபதூதன்
மடுவில் மதகரி முதலென வுதவிய
வரத னிருதிறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறைமொழி யிகழிரணியனாகம்
உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி
திகிரி தரமர கதகிரி யெரியுமிழ்
உரக சுடிகையில் நடநவி லரிதிருமருகோனே
உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு
முதய தினகர இமகரன் வலம்வரும்
உலக முழுதொரு நொடியினில் வலம்வருபெருமாளே.

Learn The Song



Raga Sahana (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 P M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 M1 R2 G3 R2 S


Paraphrase

பகிர நினைவொரு தினை அளவிலும் இலி (pagira ninaivoru thinai aLavilum ili) : I do not have even a grain of intention to share food with others; யான் மற்றவரோடு பகிர்ந்து உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன்,

கருணை இலி (karuNai ili) : I do not have any compassion; யான் இரக்கமே இல்லாதவன்,

உனது அருணையொடு தணியல் பழநி மலை குருமலை பணி மலை பல மலை பாடி பரவும் மிடறு இலி (unadhu aruNaiyodu thaNiyal pazhani malai gurumalai paNimalai pala malai pAdip paravu midaRili) : I do not have the competence to sing about Your shrines like ThiruvaNNAmalai, ThiruththaNigai, Pazhanimalai, SwAmimalai, ThiruchchengkOdu and several other mountains; யான் உனது திருத்தலங்களாகிய திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை, திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி போற்றுகின்ற திறம் இல்லாதவன் ,

படிறு கொடு இடறு சொல் பழகி (padiRu kodidaRu sol pazhagi) : I am accustomed to saying evil and contradictory things all the time; யான் வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த பேச்சையே பேசப் பழகியவன் , படிறு (padiRu) : lying, falsehood, deceit, fraud, theft, பொய், வஞ்சனை, திருட்டு;

அழகிலி குலமிலி நலமிலி (azhagili kulamili nalamili) : I do not possess any charm; nor do I have a decent lineage; I have no virtue whatsoever; அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன் யான், நற்குணம் அற்றவன் யான்,

ப(த்)திமை இலி பவுஷதுமிலி (padhimai yili bavushadhum ili) : I have neither devotion and magnanimity; பக்தி இல்லாதவன் யான், பெருந்தன்மை இல்லாதவன் யான்,

மகிமை இலி (mahimai ili) : nor any greatness; எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான்,

குலாலன் திகிரி வருமொரு செலவினில் (kulAlan thigiri varumoru selavinil) : Within the time it takes for the potter's wheel to make one full circle, குயவனுடைய சக்கரம் சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள்;

எழுபது செலவு வரு மன பவுரி கொடு (ezhubadhu selavu varumana bavurikod ) : my mind rotates seventy times, எழுபது சுற்று வரும் மனச் சுழற்சி கொண்டு

அலமரு திருகன் (alamaru thirugan) : I feel miserable, for being such a crooked-minded person; அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி உடையவன் யான்,

உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத திமிரன் (urugudhal azhugudhal thozhugudhal ninaiyAdha thimiran) : I am an arrogant one whose mind never thinks about melting, crying or prostrating before You; உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின் நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான்,

இயல்பிலி அருளிலி பொருளிலி (iyalbili aruLili poruL ili) : I do not have decent manners, grace or any asset whatsoever; நல்ல தன்மை அற்றவன் யான், அருளற்றவன் யான், பொருளற்றவன் யான்,

திருடன் மதியிலி (thirudan madhiyili) : I am a stealthy, stupid, திருட்டுப்புத்தி உள்ளவன் யான், அறிவில்லாதவன் யான்,

கதியிலி விதியிலி (gadhiyili vidhiyili) : and hopeless person without any good karma; நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும் நன்றாக இல்லாதவன் யான்,

செயலில் உணர்விலி (seyalil uNarvili) : and I have no feeling of doing noble deeds. நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன் யான்,

சிவபதம் அடைவதும் ஒருநாளே (sivapadham adaivadhum orunALE) : Do You think such a man like me I can attain the eternal bliss of SivA's world one of these days? இத்தகைய யான் சிவபதம் அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ?

In the following lines, the poet describes Lord Vishnu.

மகர சலநிதி முறையிட (makara jalanidhi muRaiyida) : The ocean full of sharks screamed of pain when மகர மீன்கள் உள்ள கடல் (அம்பின் வேகம் தாங்காமல்) ஓலமிட,

நிசிசரன் மகுடம் ஒருபதும் இருபது திரள்புய வரையும் (nisicharan makudam orupadhum irubadhu thiraLbuya varaiyum) : the asura (demon) RavaNA's ten crowns and twenty mighty mountain-like shoulders அரக்கன் ராவணனின் பத்து கிரீடங்களும் இருபது திண்ணிய புயமலைகளும்

அறவொரு கணை தெரி புயல் (aRa orukaNai theri puyal) : were knocked down by a single peerless and choicest arrow from Rama of dark complexion like the cloud; அற்றுப் போய் கீழே விழுமாறு ஒரு பாணத்தைத் தெரிந்து செலுத்திய மேகவண்ண ராமனும்,

குரு ந்ருப தூதன் (kuru nrupa dhUthan) : On behalf of PANdavAs, Kings of the country Kuru, Krishna went as messenger; குரு நாட்டைச் சேர்ந்த மன்னர்களாகிய பாண்டவர்க்குத் தூதனாகச் சென்ற கண்ணனும்,

மடுவில் மதகரி முதலென உதவிய வரதன் (maduvil madhakari mudhalena udhaviya varadhan) : As GajEndran, the elephant screamed for help crying "Oh, Aadhimoola!", when attacked by a crocodile in the tank, He, as VaradharAjan, came to his rescue; தடாகத்தில் மதயானை கஜேந்திரன்ஆதிமூலமே என ஓலமிட வந்துதவிய வரதராஜனும்,

இரு திறல் மருதொடு பொருதவன் (iru thiRal marudhodu porudhavan) : When two gandharvas came as strong marutha trees, Krishna attacked and brought them down; இரண்டு திண்மையான மருத மரங்களைச் சாடி முறித்த கண்ணனும்,

மதலை குதலையின் மறைமொழி இகழ் இரணியனாகம் ( madhalai kudhalaiyin maRaimozhi igazhiraN iyanAgam) : When little child Prahalada lisped that the VEdAs speak of "Om NamO Narayanaya", his father HiraNyan jeered at him; and HiraNyan's body குழந்தை பிரகலாதனது குதலைச் சொற்களாக வந்த ஓம் நமோ நாராயணாய என்னும் வேதமொழியினை இகழ்ந்த

உகிரின் நுதிகொடு வகிரும் ஒரு அடல் அரி (ugirin udhikodu vagirum or adal ari) : was torn down by the sharp edges of His nails by Narasimham (man-lion form); இரணியனது உடலை நகத்தின் நுனி கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை வாய்ந்த நரசிம்ம மூர்த்தியும்

திகிரி தர மரகத கிரி (thigirithara marakatha giri) : He holds the weapon of ChakrA in His hand; He is like the green emerald mount; சக்ராயுதத்தை ஏந்தியவனும், மரகதப் பச்சை மாமலைபோல் மேனியை உடையவனும்,

எரி உமிழ் உரக சுடிகையில் நட நவில் (eri umizh uraga sudigaiyil natanavil) : He danced as Krishna on the head of KAlingan, a fire-spewing snake; சுடிகை (chudigai) : the crown of the head; a crown, a diadem, hairknot on the top of the head; crest as of a peacock, hood of a cobra. மகுடம், தலையுச்சி, முடி, நெற்றிச்சுட்டி ; நெருப்பைக் கக்குகின்ற காளிங்கன் என்ற பாம்பின் தலையுச்சியில் நடனம் செய்த கண்ணனும்

அரி திரு மருகோனே (ari thiru marugOnE) : You are the nephew of Vishnu (described as Rama, Krishna, VaradharAjan and Narasimham)!

உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர (urugum adiyavar iruvinai iruLporum udhaya dhinakara) : You are the rising sun that fights with the darkness of two karmas (good and bad deeds) of Your ardent devotees, தினகரன் (dhinakaran) : sun; இருள் பொரும்(iruL porum) : fighting with darkness; உள்ளம் உருகும் அடியாரின் நல்வினை, தீவினை ஆகிய இருவினை இருளை விலக்க உதயமாகும் ஞான சூரியனே,

இமகரன் வலம் வரும் உலக முழுது (imakaran valam varum ulaga muzhudhu) : The moon, with its cool rays, goes around this world (once a month), பனிக்கிரணங்கள் உடைய சந்திரன் சுற்றி வருகின்ற இந்த உலகத்தை

ஒரு நொடியினில் வலம் வரு பெருமாளே (oru nodiyinil valam varu perumALE.) : - and You circle the entire world within a fraction of a second, Oh Great One! ஒரே நொடியில் சுற்றிவந்த பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே