424. அற்றைக்கு இரை


ராகம்: பாகேஸ்ரீசங்கீர்ண சாபு (4½)
1 + 1 + 2½
அற்றைக் கிரைதேடி
அத்தத் திலுமாசை
பற்றித் தவியாத
பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா
வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதா
கச்சிப் பெருமாளே.

Learn The Song



Raga Bageshri (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 M1 P G2 M1 R2 S

Paraphrase

அற்றைக்கு இரை தேடி (atraikku irai thEdi) : Going about in search of daily food and other necessities, (கேவலம் விலங்குளைப் போல்,) அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி தேடி அலைந்து,

அத்தத்திலும் ஆசை பற்றித் தவியாத (atthatthilum Asai patrith thaviyAdha) : I hold a desire to acquire wealth, and suffer as a result. artha, material wealth; பொருள் மீதும் ஆசையினை வைத்துக்கொண்டு தவிக்காமல்; அத்தம் = பொருள், பொன்;

பற்றை பெறுவேனோ (patraip peRuvEnO) : Can I develop the resolve to get rid of the attachments and attach myself to You alone? உன் மீது உறுதியான பற்றை யான் பெறுதற்கு இயலுமோ?
பற்றுக பற்றுஅற்றான் பற்றினை, அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (திருக்குறள்)

வெற்றிக் கதிர்வேலா (vetrik kadhir vElA) : You carry the victorious and bright spear. வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே,

வெற்பைத் தொளை சீலா (veRpaith thoLai seelA) : To You goes the credit of having pierced the Mount Krauncha. கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, ஆன்மாக்களின் சஞ்சித வினைகள் மலைபோல் குவிந்து இருப்பதை குறிப்பிடுவது கிரெளஞ்சமலை. அந்த வினை மலையைத் தொலைப்பது ஞானவேல்.

கற்று உற்று உணர் போதா (katru utru uNar bOdhA) : You are the embodiment of knowledge acquired after learning. ஞான நூல்களைக் கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞான ஸ்வரூபனே; இறைவன் ஆராய்ச்சியால் அறியப்படும் பொருள் அன்று. அனுபவத்தால் உணரப்படும் பொருள். போதம் - அநுபவ ஞானம்.

கச்சிப் பெருமாளே. (kachchip perumALE.) : You reside at KAnchipuram, Oh Great One! காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே