426. கருமமான பிறப்பற


ராகம்: பெஹாக்அங்கதாளம் (15½)
1½ + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2
கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத்தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக்கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக்கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப்புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட்டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத்ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப்பெருமாளே.

Learn The Song



Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 P N3 D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 S

Paraphrase

The religious demagogues, whose muddled heads have no clue about obtaining salvation by extricating themselves from the karma-driven endless birth cycle, cause strife and confusion among people. The saint wishes to realize the Ultimate Truth through the precepts of the Lord who alone can bestow immortality on him.

கருமமான பிறப்பற ஒரு கதி காணாது (karumamAna piRappaRa oru gathi kANAthu) : Without finding a way to get rid of birth caused by karma; வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு ஒரு வழியும் தெரியாமல்

எய்த்துத் தடுமாறும் (eyththuth thadumARum) : they struggle and straggle through –இளைத்துத் தடுமாறுபவரும்,

கலக காரண துற்குண சமயிகள் (kalaga kAraNa thuR guNa samayigaL) : these vicious religious fanatics, who are bent upon creating trouble, குழப்பத்தை விளைவிக்கும் பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின்

நானா வர்க்கக் கலைநூலின் ( nAnA vargak kalai nUlin) : pursue various religious text books பலவிதமான சாஸ்திர நூல்களில்

வரும் அநேக விகற்ப விபரித (varum anEga vikaRpa viparitha ) : in which there are contradictory views, சொல்லப்பட்ட அனேக மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான மன உணர்ச்சிக்கு எட்டாததான,

மனோபாவத்துக்கு அரிதாய மவுன பூரித சத்திய வடிவினை (manO bAvaththukku arithAya mavuna pUritha saththiya vadivinai ) : which cannot comprehend the Ultimate Reality or Truth, which is tranquil, complete, comprehensive and truly effulgent; மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை

மாயாமற்குப் புகல்வாயே (mAyAmaRkup pugalvAyE) : kindly preach It to me so that I may remain immortal. நான் இறப்பின்றி விளங்குவதற்காக உபதேசித்து அருள்வாயாக.

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி ( tharuma veema arucchuna nakula sakAthEvarkkup pugalAgi) : He was the protector of the five PANdavAs, namely, DharmA, Bhima, Arjuna, Nakula and SahAthEva; தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி,

சமர பூமியில் விக்ரம வளைகொடு (samara bUmiyil vikrama vaLaikodu) : He blew His triumphant conch (PAnchajanya) in the battlefield; போர்க்களத்தில் வெற்றிச் சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி,

நாளோர் பத்தெட்டினிலாளும் (nALOr paththettinil ALum) : in the war that lasted for eighteen days, நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில்

குரு மகீதல முட்பட (kuru mageethala mutpada) : in which the land of Kurukshethra was devastated; குருக்ஷேத்திரம் பாழ் நிலமாக, முள்பட = பாழ்நிலமாக;

உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள (uLamathu kOdAmaR kshathriyar mALa) : he stood in the righteous path, without any deviation; the kings of the KauravAs were all annihilated; தனது திருவுள்ளம் கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும்,

குலவு தேர் கடவு அச்சுதன் மருக (kulavu thEr kadavu achchuthan maruga) : while He drove the chariot (for Arjuna); You are the nephew of that Lord Vishnu! (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே,

குமாரா கச்சிப் பெருமாளே.(kumArA kacchip perumALE.) : Oh Lord KumArA! You have Your abode at KAnchipuram, Oh Great One! குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே