437. பொக்குப்பை
Learn The Song
Raga Bahudari (Janyam of 28th mela Hari Kambhoji; shadava-audava rāgam)
Arohanam: S G3 M1 P D2 N2 S Avarohanam: S N2 P M1 G3 SParaphrase
பொக்கு பை கத்தம் தொக்கு பை (pokku pai kaththam thokku pai) : This body is a bag of blemishes, a bag full of faeces, குற்றங்கள் நிறைந்த பை, மலம் மிகுந்த பை, பொக்கு (pokku) : defect, fault, குற்றம்; கத்தம் (kaththam) : மலம்; தொக்கு(thokku): filled with; நிறைந்த;
குத்துப் பொய்த்து எத்துத் தத்துக் குடில் பேணி (kuththu poyththu eththu thaththu kudil pENi) : and is nothing but a cottage filled up with caustic words, falsehood, deceit and dangers. Hankering after such a body, சுடுசொல், பொய், வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த குடிசையான இந்த உடலை விரும்பி, குத்து (kuththu) : சுடுசொல்; எத்து (eththu) : வஞ்சகம்; தத்து (thaththu) : danger, ஆபத்து;
பொச்சைப் பிச்சு அற்பக் கொச்சைச் சொற் கற்று (pocchai pichchu aRpa kocchai choR kaRRu) : I acquired mean words, reeking of abuse, insanity and pettiness. குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று, பொச்சை (pochchai) : குற்றமானது; பிச்சு (pichchu) : பைத்தியம்;
பொற் சித்ரக் கச்சுக் கிரியார் தோய் (poR chithrak kacchu giriyAr thOy) : I was snared by women with large bosoms, wearing strange and seductive blouses, அழகிய விசித்திரமான கச்சணிந்த பெருமார்புப் பெண்டிரைச் சேர்வதால் வரும்
துக்கத் துக்கத்திற் சிக்குப் பட்டிட்டு (thukka thukkaththiR chikku pattittu) : who threw me into the worst misery, கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு
துக்கித்து எய்த்துச் சுழலாதே (thukkiththu eyththu chuzhalAthE) : making me grief-stricken, debilitated and worried! Getting out of such a rut, வேதனையுற்று, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல்,
சுத்தச் சித்தத்துப் பத்திப் பத்தர்க்கு ஒத்து (suththa chiththaththu paththi paththarkkku oththu) : will I ever be able to become like the chaste souls, with unblemished heart, devoted to You, பரிசுத்த மனதுடன் பக்தி பூண்ட பக்தர்களுக்கு இணையாக
சற்று அர்ச்சிக்கப் பெறுவேனோ (chatRu archchikka peRuvEnO) : and have the honour of offering You even a little bit of worship? சிறிதளவேனும் உன்னைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
திக்குத் திக்கு அற்றுப் பை தத்து அத்திக்குச் செல் (thikku thikku atRu pai thaththu aththikku chel) : He was isolated without help from any quarter, and ultimately, he hid under the turbulent sea with green waves, எந்தத் திக்கிலும் உதவியின்றி, தனிப்பட்டு, கடைசியில் பச்சைநிற அலைகள் மோதும் கடலுக்குள்ளே போய்ச் சேர்ந்து, பை தத்து அத்தி - பசிய அலைமோதுகின்ற கடல்;
பத்ரக் கொக்கைப் பொரும் வேலா (pathrak kokkai porum vElA) : taking the shape of a leafy mango tree, You fought with that SUran, Oh great warrior with the Spear! இலைகளோடு கூடிய மாமரமாக மாறிய சூரனுடன் போர் செய்த வேலனே, கொக்கு (kokku) : mango tree;
செப்பச் சொர்க்கத்துச் செம்பொன் தத்தைக்கு (cheppa sogaththu chem pom thaththaikku) : DEvayAnai, the damsel belonging to the prosperous Celestial land looking like the reddish golden parrot, செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் போன்ற கிளியாகிய தேவயானையை
செச்சைக் கொத்து ஒப்பித்து அணிவோனே (checchai koththu oppiththu aNivOnE) : is adorned by You with a garland of vetchi flowers! வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டுபவனே,
கக்கு அக்கைத் தக்க அக்கக்கட்கு அக்கு (kakku akkai thakka akkakkatku akku ) : Taking the bones (of BrahmA and others) He shapes them appropriately to fit His own body to wear as garland. (பிரமன் முதலியோர் சரீரத்தினின்றும்) கழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி,
(கக்கு) - கழன்ற, அக்கு = எலும்பு; அக்கை - எலும்பை, தக்க - தகுந்த; அக்கக்கட்கு - அங்கங்கட்கு, (தமது) அங்கங்களுக்கு, (அக்கு) - (ஆபரணமாக) ஆக்கிய,
உலகைப் படைக்கும் பிரம்மனே அநித்தியமானவன்; பல பிரம்மர்கள் தோன்றி மறைகின்றனர். படைத்த பிரம்மனே நிலையற்றவன் எனும்போது, மனிதர்கள் தாங்கள் நித்தியமாக வாழப் போவதாக நினைப்பது தவறு. உலகமும் அதைப் படைக்கும் பிரம்மனும் நிலையற்றவர்கள் (அநித்தியம்) என்பதை உணர்த்தவே சிவபெருமான் பிரம்மர்களின் கபாலங்களை மாலையாக அணிந்துள்ளார்.
அக்கி கண் கத்த அத்தர்க்குப் பெரியோனே (akkik kaN kaththa aththarkkup periyOnE) : and holds Agni (Fire) in the third eye on His forehead; He is the Father of the Universe; and You are that SivA's master! அக்கினியை கண்ணிலே வைத்த தலைவர் சிவபிரானுக்கு குருவான பெரியவனே, அக்கி கண் (akki kaN) : அக்னி கண் உடையவர்; அக்கி (akki) : அக்னி; க(ர்)த்த (ka(r)ththa) : chief, lord; க(ர்)த்த (ka(r)ththa) : தலைவர்;
சிவனின் மூன்று கண்களில் வலது கண் சூரியனையும், இடது கண் சந்திரனையும், நெற்றிக்கண் அக்னியையும் குறிக்கும்.
கற்றை பொற் றெத்தப் பெற்ற பொற் சிற்பக் கச்சிக்குள் சொக்கப்பெருமாளே.(kaRRaip poRRu eththap peRRa poR chiRpak kacchikkuL chokkap perumALE.) : This can be explained in different ways:
1)if split like this : Katrai + Pon + Thetha + Petra + Pon + Sirpa + Kachikkul + Sokka + Perumaale : O Beautiful Muruga (Sokka Perumaale) who resides in Kanchipuram (Kachikkul)—a holy city filled with heaps of glowing gold structures and magnificent artistic sculptures!
திரளான பொன்னால் செய்த அமைப்புகளும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்த காஞ்சிப் பகுதியில் (கச்சி) விளங்கும் அழகிய சொக்கப் பெருமாளே! கற்றை = திரளான / குவியலாக அமைந்த; பொன் = தங்கம் (தங்க ஆபரணங்கள்/அமைப்புகள்); தெத்த = ஒளி வீசும்படி / அமையப் பெற்று (தெத்துதல் = நெருக்கமாக அமைத்தல் அல்லது ஒளி வீசுதல்); பெற்ற = கொண்டிருக்கின்ற; பொன் = அழகிய / மேன்மையான (பொன் போன்ற); சிற்பக் = சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த; கச்சிக்குள்: காஞ்சிபுரத்திற்குள்; சொக்க: அழகிய; பெருமாளே: முருகப்பெருமானே.
2)கற்றை + போற்று + ஏத்த + பெற்ற + பொன் + சிற்ப + கச்சிக்குள் சொக்கப்பெருமாளே; கற்றை: (பக்தர்களின்) திரளான கூட்டத்தால்/ திரளான துதிப்பாடல்களால்; ஏத்தப் பெற்ற: போற்றிப் புகழப் பெற்ற; பொன் சிற்ப: அழகிய பொன் போன்ற வடிவம் கொண்டவனே. இதன்படி ஒட்டுமொத்தப் பொருள்: "பக்தர்களின் பெருங்கூட்டத்தால் எந்நேரமும் துதித்துப் போற்றப் பெறுகின்ற, பொன்னொளிர் வடிவழகு கொண்ட சிற்பம் போன்ற கச்சிநகர்ச் சொக்கப் பெருமாளே!"
.
Comments
Post a Comment