440. வம்பறாச் சில


ராகம் : ஆபோகிதாளம்: ஆதி 2 களை
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத்திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற்றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக்கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக்கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத்திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத்தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப்பெருமாளே.

Learn The Song


Know Ragam Abhogi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 G2 M1 D2 S    Avarohanam: S D2 M1 G2 R2 S

Paraphrase

How does one realize God? By being in the company of those true devotees whose minds are detached from worldly objects and are totally absorbed in Your thoughts. For this one has to stay away from demagogues and mischief-mongers.

வம்பு அறாச் சில கன்னமிடும் சமயத்துக் கத்துத் திரையாளர் (vambu aRA chila kannam idum samayaththuk kaththu thiraiyALar ) : These people are mischief-mongers; with words stolen from ancient religious texts, they roar passionately like the waves of seas; வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடியும், சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி ஆரவாரிப்பவரின் கன்னம் (kannam) : stealing; திரை (thirai) : waves;

வன் கலாத்திரள் தன்னை அகன்று (van kalAth thiraL thannai aganRu) : I want to get away from the crowd of such rude slanderers. வன்மையான கலைக் கூட்டத்தினின்று விலகி;

மனத்திற் பற்றற்று அருளாலே தம் பராக்கு அற நின்னை உணர்ந்து (manaththiR patratRu aruLAlE tham parAkkaRa ninnai uNarnthu ) : With Your grace, they experience You with totally detached minds, after overcoming their ego மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும் அறப்பெற்று, தம்மைத் தாமே நோக்கியுள்ள அகம்பாவம் அற்றுப்போய், உன்னையே உணர்ந்து உள்ளம் உருகி; அக்கு / அக்கம் - கண்; பர + அக்கு = பராக்கு; பராக்கு என்றால் குறிப்பிட்ட ஒன்றின் மீது கவனத்தை நிலை நிறுத்தாமல் பார்வையை பரவலாக செலுத்துவது, கவனச்சிதறல்;

உருகி பொற் பத்மக் கழல் சேர்வார் தம் (urugip poR pathmak kazhal sErvAr) : and prostrate at Your golden lotus feet with tender hearts filled with devotion; அழகிய தாமரை மலரன்ன அடிகளைச் சேர்பவர்களுடைய

குழாத்தினில் என்னையும் அன்பொடு வைக்கச் சற்றுக் கருதாதோ (tham kuzhAththinil ennaiyum anbodu vaikkach chatRu karuthAthO ) : Will You ever consider placing me in the company of such pious people? அடியார்கள் கூட்டத்தினில் என்னையும் அன்போடு கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கலாகாதோ?

வெம் பராக்ரம மின் அயில் கொண்டு (vem parAkrama minnayil koNdu ) : With Your spear, possessing extraordinary strength and sparkling like lightning, வெப்பமான ஆற்றலும், ஒளியும் மிக்க வேலாயுதத்தைக் கொண்டு அயில் (ayil) : sharp, metonymically refers to 'vel';

ஒரு வெற்புப் பொட்டுப் பட (oru veRpup pottup pada) : You shattered the matchless Mount Krouncha into dust; ஒப்பற்ற கிரெளஞ்சமலை பொடிபடும்படிச் செய்து,

மாசூர் வென்ற பார்த்திப ( mA sUr venRa pArththiba) : and conquered the demon, SUran, who took the disguise of a mango tree, Oh Lord! மாமரமாய் நின்ற சூரனை வென்ற அரசே,

பன்னிரு திண்புய (panniru thiN buya) : You have twelve strong shoulders! வலிமை மிக்க பன்னிரண்டு தோள்களை உடையவனே,

வெட்சிச் சித்ரத் திருமார்பா ( vetchic chithra thiru mArbA) : Your hallowed chest is adorned with the garland of vetchi flowers! வெட்சிமாலையை அணிந்த அழகிய திருமார்பனே,

கம்பராய்ப் பணி மன்னு புயம் பெறுகைக்கு (kambarAy paNi mannu buyam peRugaikku) : In order to embrace the shoulders of EgAmbarEswar (SivA), adorned with serpents, ஏகாம்பரேஸ்வரராய் விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு; பாம்பு என்பது குண்டலினி சக்தியின் அடையாளம். ஒருவரின் ஆன்மீக வளர்ச்சியின் குறியீடு. மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண்டாகும். சிவன் படங்களில் பாம்பு சிவன் கழுத்தை சுற்றி இருப்பது குண்டலினி சக்தியானது விசுத்தி சக்கரமாகிய கழுத்தை அடைந்துள்ளது என்று குறிக்கும். இன்னும் பழமையான சில படங்களில் பாம்பு சிவன் தலையை சுற்றி இருக்கும். விசுத்தி சக்கர சாதனை செய்பவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். அவர்கள் சொல்வதை எல்லோரும் கீழ்படிந்து கேட்பார்கள். சிவன் தலையில் பாம்பு சுற்றி இருந்தால் குண்டலினி சக்தியானது சகஸ்ராரம் ஆகிய தலையில் அடைந்துள்ளது என்று குறிக்கும்.

கற்புத் தவறாதே கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி (kaRpu thavaRAthE kambai AtRinil annai thavam puri ) : She, the Divine Mother (KAmakshi) of great chastity, performed penance on the banks of the River Kampai கற்பு நிலை தவறாமல், கம்பா நதிக்கரையில் காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த

கச்சிச் சொக்கப்பெருமாளே. (kachchi chokkap perumALE.) : in this place, Kachchi (kAnjeepuram), where You reside enchantingly, Oh Great One! கச்சி என்ற காஞ்சீபுரத்தில் அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

Parvathi's Tapas

From Divine Traveller:

Once Parvathi, the consort of Shiva, was doing penance under the temple's ancient Mango tree near Vegavathi river. In order to test her, Shiva sent Agni (fire) on her. Goddess Parvati prayed to her brother, Lord Vishnu for help. In order to save her, Lord Narayana (Vishnu) took the Moon from Shiva's head and showed the rays which then cooled down the fire and protected Parvathi. Shiva again sent the river Ganga to disrupt Parvathi's penance. Parvathi prayed to Ganga, and Ganga did not disturb her penance and Parvathi made a Shiva Linga out of sand to get united with Shiva. The God here came to be known as Ekambareswarar or "Lord of Mango Tree".

According to another legend, it is believed that Parvathi worshipped Shiva in the form of a Lingam made out of earth/sand ( Prithivi Lingam) under a mango tree. Legend has it that the neighboring Vegavathi river overflowed and threatened to destroy the Lingam and that Parvathi or Kamakshi embraced the Lingam. Shiva pleased with her penance appeared before her and married her.

தினமணி பத்திரிகையிலிருந்து :
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். (இன்னொரு கதை: சிவன் பார்வதி இருவரும் கைலாயத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு சிவனை மட்டும் வளம் வந்தார். கோபம் கொண்ட தேவி இது போல் நடக்காமல் இருக்க காஞ்சியில் தவம் புரிந்து திருச்செங்கோட்டில் சிவனுடைய இடப்பாகத்தை பெற்றாள்.)

பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்துச் செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார்.

உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்யப் பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே