444. நாடித் தேடி
Learn The Song
Know The Ragam Suddha Saveri (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S R2 M1 P D2 S Avarohanam: S D2 P M1 R2 SParaphrase
நாடித் தேடித் தொழுவார் பால் (nAdith thEdith thozhuvAr pAl) : Towards Your devotees who willingly seek and worship You, உன்னை விரும்பித் தேடித் தொழும் அடியார்களிடம்
நான் நத்தாகத் திரிவேனோ (nAn naththAga thirivEnO) : will I not wander in affable association with them? நான் விருப்பம் உள்ளவனாகத் திரிய மாட்டேனோ?
மாடக் கூடற் பதி (mAdakkUdal pathi ) : In the unique town of Madhurai, which is also known as NAnmAdak kUdal, நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள, கூடற் பதி (koodal pathi) : Madurai;
சிவபெருமானுடைய 64 திருவிளையாடல்களைக் கூறுவது பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம். அதில் வரும் கூடற் காண்டத்தில் மதுரையை நான்கு மாடங்களால் இறைவன் காத்து அருளிய நான்மாடக் கூடலான படலம் அமைந்துள்ளது.
ஒருமுறை வருண பகவான் கொடிய வயிற்று வலி நோயால் அவதிப்பட்டவன், பெருமழையைப் பொழிந்து மதுரை மாநகரையே மூழ்கும்படி செய்தான். அவதியுற்ற மக்கள் இறைவனை வேண்ட, சோமசுந்தரர் மேகங்களை அழைத்து மதுரையை காக்கும்படி ஆணையிட்டார். இறைவன் ஆணைப்படி அந்த மேகங்கள் மதுரையின் நான்குபகுதிகளிலும் மேகங்களாகத் திரண்டு மழையிலிருந்து மதுரையைக் காத்தன. இதைக் கண்ட வருணபகவான் சோமசுந்தரை வணங்கி நின்றான். அவரும் வருணபகவானின் குற்றத்தை மன்னித்து அவனுடைய வயிற்றுவலியைப் போக்கினார்.
ஞான வாழ்வைச் சேர தருவாயே (nyAna vAzhvai sErath tharuvAyE) : grant me the divine life centered on Knowledge. (துவாதசாந்த நிலையில் கூடும் — துவாதசாந்தப் பெருவெளி என்பது சிரசின் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் யோக ஸ்தானம்) சிவானந்தப் பெருவெளியில் ஞான வாழ்வை அடையும்படி அருள் புரிவாயாக. Madhurai is not only the place for granting Liberation in Life (Jeevan Mukthi) but also unique in being the DwadasAntha Sthalam, a zone twelve inches above our head.
Just as Chidambaram was the heart (Anahata) of the Virat Purusha, Madurai represented His Dwathashantha, and existed before everything else. Other psychic centers and the corresponding Sthalas are — Tiruvaroor – the Mooladhara, Thiruvanaikkaval – the Swathishthana, Tiruvannamalai – Manipooraka, Tirukalahasthi – Visuddhi, Kashi – Agna, and Kailasa – Brahmarandra.
பாடற் காதற் புரிவோனே (pAdal kAdhal purivOnE) : You love the songs sung in beautiful Tamil. தமிழிசையில் பாடினால் ஆசையோடு கேட்பவனே,
பாலைத் தேன் ஒத்து அருள்வோனே(pAlaith thEn oththu aruLvOnE) : Your Grace is as sweet as milk and honey. பால் போன்றதும் தேன் போன்றதுமான இனிமை கொண்ட அருளைப் பாலிப்பவனே!
ஆடல் தோகைக்கு இனியோனே (Adal thOgaikku iniyOnE) : You bless Your dancing peacock with pleasure. நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே,
ஆனைக் காவிற் பெருமாளே. (Anai kAviR perumALE.) : You reside at ThiruvAnaikkA, Oh Great One! திருவானைக்கா தலத்தின் பெருமாளே.
Comments
Post a Comment