458. குமரி காளி (அமுதம் ஊறு)
Learn The Song
Raga Senjurutti(Janyam of 28th mela Hari Kambhoji) By Charulata Mani
Arohanam: D2 S R2 G3 M1 P D2 N2 Avarohanam: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 SParaphrase
குமரி காளி வராகி மகேசுரி (kumari kALi varAhi mahEsuri) : She is in the form of a belle; She is KALi; She is VarAgi; She is the Great Goddess; சிறு பிராயத்தவள், காளி, வராகி, மகேஸ்வரி,
கவுரி மோடி (gavuri mOdi) : She has names like Gowri and Durga (Modi); பொன்னிறம் உடைய கௌரி, மோடி, முதலிய பெயர்களை உடையவள், மோடி = மாயை; லீலைகள் (விளையாட்டுகள்) செய்கிறவள் என்றும் பொருள்.
சுராரி நிராபரி (surAri nirApari ) : 1. She is like the eye of the Celestials; She is bereft of any falsehood; தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி; சுராரி/சுர அரி: அரி என்றால் கண். சுராரி என்றால் தேவர்களுக்குக் கண் போன்றவள் (அல்லது தேவர்களின் பலமாய் நிற்பவள்), நிராபரி - பொய்யிலி
2. She vanquished the asuras who are the enemies of the celestials;
சுராரி நிராபரி - (சுரர்களுக்குத் பகைவர்களான) அசுரர்களை முதன்மை இழக்கச் செய்பவள் அல்லது கீழ்ப்படுத்தினவள். இங்கே அரி என்றால் பகைவன்.
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி(kodiya sUli sudAraNi yAmaLi mahamAyi) : She holds a powerful trident in Her hand; She is in the form of an effulgence; She has the complexion of emerald green; She is the Greatest Delusion; உக்ரமான சூலத்தை ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி, யாமளி (yAmaLi) : green complexioned;
குறளு ரூப முராரி சகோதரி (kuRaLu rUpa murAri sahOdhari) : She is the sister of the Lord Vishnu who took the dwarf (VAmana) form; வாமன வடிவம் கொண்ட முரன் என்னும் அசுரனை வதைத்த (திருமாலின்) சகோதரி; குறள் ருபம் (kuRaL roopam) : வாமன ரூபம், குட்டை உருவம்;
உலக தாரி உதாரி பராபரி (ulaga dhAri udhAri parApari) : She is the mother who conceives the universe and protects it; She is compassionate; She is primordial; உலகத்தைத் தரித்துப் புரப்பவள், தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள்,
குரு பராரி விகாரி நமோகரி அபிராமி (guru parAri vihAri namOhari abirAmi) : She is like the eye of the Great Master, Lord SivA; She assumes diverse forms; She is worshipped by all; She is exquisitely beautiful; குருவாகிய சிவனுக்குக் கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள்,
சமர நீலி புராரி தன் நாயகி (samara neeli purAritha nAyaki) : She is Goddess Durga, a capable warrior; She is the Consort of Lord SivA who burnt down Thiripuram; போர் வல்ல துர்க்கை, திரிபுரம் எரித்த சிவபெருமானின் பத்தினி,
மலை குமாரி கபாலி நல் நாரணி (malai kumAri kapAlina nAraNi) : She is the daughter of HimavAn; She holds the skull in Her hand; She is the virtuous sister of Narayana known as Narayani; இமயவன் புதல்வி, கபாலம் ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி,
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி (salila mAri sivAya manOhari paraiyOgi) : She is like the showering cloud; She is the most desirable one connected with Lord SivA; She is ParA Sakthi (Supreme Energy); She is a Yogi; நீர் பொழியும் மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள், பரா சக்தி, யோகி,
சவுரி வீரி முநீர் விட போஜனி (savuri veeri muneer vida bOjani) : She is extremely strong; She is valorous; She imbibed the evil poison AlakAlam that emerged from the milky ocean; வலிமை உள்ளவள், வீரம் உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள், சவுரி/சௌரி (savuri/sowri) : வலிமை மிக்கவள்;
திகிரி மேவு கையாளி செயாள் (thigiri mEvu kaiyALi seyAL) : She holds a Disc in Her hand; She is Lakshmi; சக்கரம் ஏந்திய திருக்கரத்தை உடையவள், இலக்குமி, செயாள்/செய்யாள்(seyAL) : சிவந்தவளான இலக்குமி;
ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா (oru sakala vEdhamum Ayina thAy umai aruL bAlA) : She is the unique combination of all the VEdAs; She is Mother UmAdEvi (PArvathi). You are the son delivered by Her! ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே,
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் (thimidham Adu surAri nisAcharar) : The demons made a loud noise and fought with the celestials; பேரொலி செய்து போராடிய தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய
முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு (mudigaL thORu kadAvi ) : on every head of the demons You struck with a weapon, தலைகளில் எல்லாம் ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து, கடாவி இ(ட்)டு (kadAvi idu) : ஆயுதங்களைச் செலுத்தி;
ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா (ey oru sila pasAsu guNAli niNAmuNa vidum vElA) : and made the devils who gathered at the battlefield holler loudly and feed on the corpses; so powerful was Your spear! அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே, குணாலி (guNAli) : ஆரவாரக் கூத்து;
திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை (thiru ulAvu soNesar aNAmalai) : The streets of ThiruvannAmalai of SoNEsar are rich and prosperous; லக்ஷ்மீகரம் நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில்
முகில் உலாவு விமான நவோ நிலை (mugil ulAvu vimAna navOnilai) : beyond the nine decks of the tall Temple tower where clouds hover, மேகம் உலவும் கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே. (sikara meedhu kulAvi ulAviya perumALE.) : You move around elegantly on the crest of that tower, Oh Great One! கோபுர உச்சியில் விளக்கமுற்று உலாவிய பெருமாளே.
The following explanations are written by Janaki Ramanan, Pune.
இந்தப் பாடலில் 35 நாமங்களால் ஜகன் மாதாவைத் துதிக்கிறார். அன்னையின் ஒவ்வொரு நாமமும் அமுத ஊற்று, ஊற்றுக் கண் திறப்போமா?
- குமரி : அன்னை தான் அவள் . ஆனாலும் மூப்பே இல்லாத என்றும் இளமை கொண்ட அழகிய குமரி. மனிதன், மனதால், உடலால், வயதால் தளரும் பொழுது, இந்த இளையவளைச் சார்ந்து சக்தி பெறுகின்றான்.
- காளி : வெள்ளை உள்ளம் கொண்ட அன்னை, தீயோருக்குக் காட்டுவதோ, கரிய நிறம் கொண்ட காளி என்னும் உக்ர உருவம் தீமையை எரிக்கும் தீப்பிழம்பு
- வராகி : மகிஷக் கொடி ஏந்தி, வெற்றி முழக்கி வருபவள். மலர்க் கோலங்களின் நடுவில் சிரிப்பவள்.
- மகேஸ்வரி : மகாதேவனாம் மகேஸ்வரரின் தர்ம பத்தினி. மல்லிகை மலர் போல் பூத்து வருபவள், அகிலம் காத்து நிற்பவள்,
- கௌரி : பத்து வயது மங்களாம்பிகையாய் நலங்களை அள்ளித் தருபவள்.
- மோடி : காரிருள் போல் கருத்தை மறைக்கும் கலக்கத்தை நீக்கித் துன்பம் துடைப்பவள்,
- சுராரி : அமரர் களுக்குக் கண் போன்றவள். அவர்களைக் கண் போல் காப்பவள்.
- நிராபரி : பொய்மை அற்ற நிலைத்த சத்தியம் அவள் .
- கொடிய சூலி : கொடுமைகளைக் கொய்வதற்காகக் கூரிய சூலாயுதம் ஏந்தியவள்.
- சுடாரணி : ஒளிமயமானவள்,
- யாமளி : பச்சையும் கருமையும் கலந்த ச்யாமள வர்ணத்தினள் என்றும் பதினாறாய் எழில் காட்டி நிற்பவள்
- மகமாயி : கொடிய இன்னல் எனும் வெம்மை நீக்கச் சமயத்தில் பொழியும் அருள் மாரி.
- குறளு ரூப முராரி சகோதரி : வாமனனாய் வந்து, த்ரிவிக்ரமனாய் நின்று மண்ணும் விண்ணும் அளந்த திருமாலின் சகோதரியாய், எங்கும் வியாபித்து நிற்பவள்
- உலகதாரி : உலகம் படைத்து, அதைத் தாங்கிக் காத்து நிற்பவள்.
- உதாரி : வரங்களை, இன்பங்களை, சித்திகளை வாரி வாரி வழங்கும் கருணைக் கடல்,
- பராபரி : முதன்மையானவளாய் மேம்பட்டு நிற்கும் அம்பிகை
- குரு பராரி : ஆதி குருவான சிவனுக்குக் கண் போன்றவள்.
- விகாரி : நவ நவமாய் வடிவெடுத்து வெவ்வேறு ரூபங்களில் வருபவள்.
- நமோகரி : விண்ணுளோரும் மண்ணுளோரும் போற்றி வணங்கும் இறைவி
- அபிராமி : அழகுக்கு இலக்கணமான எழிலரசி.
- சமர நீலி : ஒன்பது வயதின ளாய், துர்க்கையாய் போர்க் கோலம் பூண்டு துஷ்டர்களை அழிப்பவள்.
- புராரி தன் நாயகி : திரிபுரம் எரித்தவனின் பத்தினி.
- மலை குமாரி இமவான் மகள் : பார்வதியாய்ப் பிறந்து, தவமிருந்து சிவனை அடைந்தவள்.
- கபாலி : நிலையாமையை உணர்த்த கபாலம் ஏந்துபவள்.
- நன் நாரணி : நற்குணம் வாய்ந்த, காக்கும் தெய்வமான நாராயணி
- சலில மாரி : நிலவளம் காக்கும் பருவ மழையாய் மன வளம் காக்கும் கருணை மழையாய்ப் பொழிபவள்.
- சிவாய மனோகரி : சிவன் மனதுக்கு ரம்மியமானவளாய் அவனிடம் லயிப்பவள்.
- பரை : அளப்பரிய ஆற்றல் கொண்ட பராசக்தி
- யோகி : யோக நிலையாகவும் யோக சாதனையாகவும், அவற்றின் பலனாகவும் இருப்பவள்
- சவுரி : சர்வ வல்லமை கொண்டவள்.
- வீரி : வீரத்தின் திருஉருவம்
- மு நீர் விட போஜனி : பாற் கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை வாரி உண்டவள் (நஞ்சுண்டவனின் இடப் பாகம் கொண்டதால், இவளும் நஞ்சுண்டவள்)
- திகிரி மேவு கையாளி : சக்கரம் ஏந்திய விஷ்ணு துர்க்கையாகவும் வைஷ்ணவியாகவும் இருப்பவள்.
- செய்யாள் : சகல சௌபாக்கியங்களும் தரும் லஷ்மி.
- ஒரு சகல வேதமுமாயின தாய் உமை : இணையில்லாத வேத, சாஸ்த்ர, புராணங்களின் சாரமாய் இருக்கும் அன்னை உமையாள்,
Comments
Post a Comment