472. சிரத்தானத்தில்
Learn The Song
Raga Kanada (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 P G2 M1 D2 N2 S Avarohanam: S N2 P M1 G2 M1 R2 SParaphrase
Saint Arunagirinathar prays to Lord Murugan that He should take special efforts to shower grace on him so that he never forgets to worship Him and gets enamored by worldly objects. உலகப் பற்று கொண்டு அடியேன் அலையாமலும், இறைவனைப் பணிய தவறாமலும் இருக்குமாறு என்னை வரவழைத்து அருள்செய் என்கின்றார்.
சிரத்தானத்திற் பணியாதே (sirath thAnaththiR paNiyAdhE) : Can be interpreted in two ways: 1. Though I do not bow my head to You; 2. I should not bow my my head to anyone except you; தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான் / உன்னைத் தவிர வேறு எவரையும் தலை கொண்டு வணங்காமலும்
செகத்தோர் பற்றைக் குறியாதே (jegaththOr patraik kuRiyAdhE) : in order that I do not get bound by worldly attachment உலக சம்பந்தத்தால் வரும் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்குமாறும்
வருத்தா/வருத்தி (varuththA): You call me என்னை வருத்தி வரவழைத்து,
மற்று ஒப்பிலதான மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய் (matru OppiladhAna malar ththAL vaiththu eththanai ALvAy) : and grant me Your incomparable flower-like feet and bring me under Your supremacy. தமக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. இறைவனுடைய திருவடி - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும் புரியும்.
நிருத்தா (niruththA) : Oh the Great Dancer; (Lord's rhythmic dance is the source of all harmonious movement within the universe.) நடனம் ஆட வல்லவனே; ஆன்மாக்களுடைய இதயத் தாமரையாகிய தகராகாசத்தில் அனவரதமும் தாண்டவம் புரிவதால் உலகங்கள் எல்லாம் இயங்குகின்றன.
கர்த்தத்துவ நேச (karththaththuva nEsA) : You are the prime Leader and Friend! தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே, கர்த்தத்துவம் (karthaththuvam) : leadership,
நினைத்தார் சித்தத்து உறைவோனே (ninaiththAr chiththath uRaivOnE) : You reside in the mind of those who think of You. உன்னை நினைப்பவர்களது சித்தத்தில் வீற்றிருப்பவனே,
திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே (thiruth thAL muththarkku aruLvOnE) : You grant Your holy feet to those liberated living souls. உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு தந்தருள்பவனே,
திருக்காளத்திப் பெருமாளே. (thiruk kALaththip perumALE.) : You belong to the town of ThirukkALaththi, Oh Great One! திருக்காளத்தியில் உள்ள பெருமாளே.
திருக்காளஹஸ்தி ஸ்தல சிறப்பு
வாயு பகவான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கற்பூர லிங்கத்தை ஏற்படுத்தி அதன் முன்பு தவம் இயற்றி வந்தார். தென் கயிலாயம் எனப்படும் இந்தக் க்ஷேத்திரத்தில் ஈசன் சாபம் பெறப்பட்ட உமையவள் இந்த வாயு லிங்கத்தைப் பூஜை செய்து ஞானம் பெற்றதனால் ஞானபிரசுனாம்பா என்று அழைக்கப்படுகிறார். சிவனின் தலையில் இருக்கும் கங்கை இத்தலத்தில் சொர்ணமுகி என்ற பெயரில் கோயிலைச் சுற்றிப் பிரவகிக்கிறாள். மேலும் சாபம் பெற்ற இந்திரன், சந்திரன், ராகு, கேது உள்ளிட்ட பலரும் காளஹஸ்தியில் உள்ள சிவனை வழிபட்டு சொர்ணமுகியில் மூழ்கி சாப விமோசனம் பெற்றார்கள். வேடனான திண்ணப்பன், இறைவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலம். மேலும் சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) என மூன்றும் இத்தலத்து இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றதால் அவற்றின் பெயரால் ஸ்ரீகாளஹஸ்தி என்று வழங்கப்படுகிறது.திண்ணப்பன் முந்தைய ஜன்மத்தில் அர்ஜுனனாக பாசுபதாஸ்திரத்தைப் பெற தவமிருந்தபோது, சிவபெருமான் அஸ்திரத்தை வழங்கியதோடு, அவர் மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அருளினார். அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் திண்ணனாக அவதரித்தார். காட்டிற்கு வேட்டையாடச் சென்ற திண்ணன் அங்கிருந்த சிவபெருமான் மீது பக்தி கொண்டு சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் உள்ள மலர்கள், இலைகளால் மாலை கட்டி, அதை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வழிபட்டு வந்தார். அவரின் பக்தியை உலகிற்குப் பறைசாற்ற நினைத்த சிவபெருமான், ஒருநாள் திண்ணன் வழிபட வரும்போது கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார். சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து அர்ப்பணித்தவுடன் சிவபெருமான் நேரில் காட்சி அளித்து ஆட்கொண்டார். சிவனுக்குக் கண் கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார். நாயன்மார்களில் ஒருவராகவும் கண்ணப்பன் கருதப்படுகிறார்.
Comments
Post a Comment