484. கைத்தருண சோதி


ராகம் : ஜோன்புரிதாளம்: ஆதி
கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப்பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப்பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப்பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப்பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப்பெருமாள்காண்
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப்பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப்பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப்பெருமாளே.

Learn The Song



Jonpuri (janya rāga of Natabhairavi, shadava sampoorna raga)

Arohanam: S R2 M₁ P D1 N2 Ṡ    Avarohanam: Ṡ N2 D1 P M1 G2 R2 S


Dr. Charulata Mani's Isai PayaNam


Paraphrase

கைத் தருண சோதி (kai tharuNa jothi) : Possessing a trunk, youthful and luminous, துதிக்கை உடைய, இளமை வாய்ந்த, ஒளிமயமான,

அத்திமுக வேத கற்பக சகோத்ரப் பெருமாள்காண் (aththi muga vEtha sagOthra perumALkAN) : the elephant faced Vinayka is the karpaga tree that yields all desired objects and is the substance of all VEdAs (scriptures); and You are His younger brother, Oh Great One! யானைமுகமுடைய, வேதப்பொருளான கற்பக விநாயகனின் இளைய சகோதரப் பெருமான் நீதான். கற்பக (விருக்ஷ)ம் (kaRpagam) : One of the five miraculous trees in the heaven that yields whatever is desired,

கற்பு சிவகாமி நித்ய கலியாணி (kaRpu sivakAmi nithya kaliyANi) : She is the chaste SivakAmi, and Nithya KalyaNi (Harbinger of perpetual good); கற்பரசி சிவகாமசுந்தரியும், நித்திய கல்யாணியுமான

கத்தர் குரு நாதப் பெருமாள் காண் (kaththar guru nAthap perumAL kAN) : and You are the Master of Her consort, Lord SivA, Oh Great One! பார்வதியின் தலைவரான சிவனாரின் குருநாதப் பெருமான் நீதான். க(ர்)த்தர்(ka(r)ththar) : master, chief, husband;

வித்து ருப ராமருக்கு மருகான (viththu rupa rAmarukku marugAna) : You are the nephew of Rama, whose complexion is like the dark rainy clouds! மழைத்துளி பெய்யும் மேகத்து வண்ணனான இராமருக்கு மருமகனாகி வித்து ரூபம் (viththu roopam) : வித்து ரூபமான மழைத் துளிகளை சுமக்கும் மேகத்தின் வர்ணம்;

வெற்றி அயில் பாணிப் பெருமாள் காண் (vetRi ayil pANip perumAL kAN) : You hold in Your hand the victorious Spear, Oh Great One! வெற்றி வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமான் நீதான்.

வெற்பு உள கடாகம் உட்குதிர வீசு ( veRpuLa katAkam utkuthira veesu) : Making the mountainous planets tremble with fear, as it sweeps its feathers furiously; மலைகள் உள்ள அண்டகோளங்கள் அஞ்சும்படி தோகையை வீசும் கடாகம் (kadAgam) : sphere, globe, அண்டகோளகை; உட்கு (utku) : fear, dread;

வெற்றி மயில் வாகப் பெருமாள்காண் ( vetRi mayil vAgap perumAL kAN) : is Your victorious Peacock, Oh Great One! வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமான் நீதான்.

சித்ரமுகம் ஆறு முத்துமணி மார்ப (chithramuka mARu muththumaNi mArbu) : Those lovely six faces and the vast bejewelled chest of Yours அழகிய முகங்கள் ஆறும், முத்துமாலைகள் அணிந்த மார்பும்,

திக்கினில் இலாதப் பெருமாள்காண் (thikkinil ilAthap perumAL kAN) : can never be seen in any other part of this Universe, Oh Great One! வேறு எந்தத் திசையிலும் காணமுடியாத பேரழகுப் பெருமான் நீதான்.

தித்திமிதி தீதென ஒத்தி விளையாடு (thithimi thi theethena oththi viLaiyAdu) : Dancing to the beat of the sound "thithimithi theethe ", தித்திமிதி தீது என தாளமிட்டு விளையாடுகின்ற

சித்திர குமாரப் பெருமாள் காண் (chiththira kumArap perumAL kAN) : You are the most handsome Son of the Lord, Oh Great One! அழகிய குமாரப்பெருமான் நீ தான்.

சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட (suththa vira sUrar pattu vizha vElai thotta) : You are a true warrior, Oh valorous One! You threw Your Spear so powerfully as to destroy the demons (sUrar)! சுத்த வீரனே, சூரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனும்,

கவி ராஜப் பெருமாள் காண் (kavi rAjap perumAL kAN) : You also excel in poetry being a King of Poems, Oh Great One! சிறந்த கவியரசனாகியவனும் ஆன பெருமான் நீதான்.

துப்பு வளியோடும் அப்புலியுர் மேவு ( thuppu vaLiyOdum appuliyur mEvu) : Along with Your purest consort, VaLLi, You reside in PuliyUr (Chidhambaram), தூயவளான வள்ளியுடன் அந்தப் புலியூர் (சிதம்பரம்) தலத்தில் மேவி துப்பு (thuppu) : தூய்மை கொண்ட;

சுத்த சிவ ஞானப் பெருமாளே.(suththa siva gnAnap perumALE.) : and You are the Pure Saivite Knowledge itself, Oh Great One! சுத்த சிவஞான உருவான பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே