விராலிமலை முருகன்
மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு 20 கிமீ முன்பாக அமைந்திருக்கிறது. தற்போது சிறு நகரமாக மாறிவிட்ட விராலி மலை முன்னர் வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். இந்த முருகன் மருத்துவ முருகனாம்! முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படும் இக்கோயில் மயில்களால் சூழப்பட்டு மிக ரம்மியமாகக் காட்சியளிக்கும். பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா? மூலவர் சண்முகநாதன். அம்மன் வள்ளி தேவசேனா இருவருமாவர். திருவண்ணாமலையைப் போல, இதுவும் ஏராளமான சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வாழ்ந்த/ வாழும் பூமி. விராலிமலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் அரும் பெரும் சித்தியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழங்கியதாகப் புராணம் கூறுகிறது.