இருவர் மயலோ - பதவுரை
Posted by Smt. Janaki Ramanan, Pune. Read here the meaning in English for the song Iruvar mayalo "இருவர் மயலோ" என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆதி முதற் பொருளாக, அண்டமெலாம் வியாபித்து நிற்கும் விஸ்வரூபனாக, பூத நாயகனாக, முருகனைக் கண்டு மலைக்கும் அருணகிரியாரின் பரவச நிலை சொல்லும் பாடல். முருகனிடம் முறையிடும் வழிமுறைகள் பற்றிய கேள்வி ஞானம் கூட இல்லாத தன் குரல் அவனுக்கு எட்டுமோ எனக் கேள்வி எழுப்பும் அதே நேரம், அவன் கடாட்சம் தன் மேல் படாததற்குக் காரணம், அவன் கவனம் தன் இரு தேவியரிடமே நிலைப்பது தானோ, என நயம் படக் கேட்கும் உரிமையுள்ள தூய பக்தராக அருணகிரியாரைப் பார்க்கிறோம்.