By Mrs Devaki Iyer, Pune
For a translation of this song in English, click the link sarakkeri
சரக்கு ஏறி | 96 மூலப்பொருள்கள், 36 கட்டு/மூட்டைகளாகக் கட்டி வைக்கப்படட்டுள்ள |
இத்தப்பதி வாழ் | இந்த (பதி என்பது ஆன்மாவின் ஆன்மா) உயிர் குடி கொண்டுள்ள |
தொந்த | குளிர்-வெப்பம், இன்பம்_-துன்பம்,மானம்-அவமானம் முதலிய இருமைகளுக்கு |
பரிவோடு ஐந்து | அன்புற்றவர் போலத் தோன்றுகின்ற ஐந்து புலன்களாகிற |
சதிகாரர் புக்கு | ஆன்மாவை முக்தி நெறியில் செல்லவிடாது தடுக்கும் வஞ்சனையாளர் புகுந்து கொண்டு |
உலைமேவு | நெருப்பின் மீது இருப்பது போன்ற
அழிவுக்கு வழியான |
இந்தச்செயல் மேவி | புலன் இன்ப நுகர்ச்சிகளில்/உலகவியலில் ஈடுபட்டு
|
சலித்தே மெத்த | அங்குமிங்கும் ஓடி (சலித்தல் = அசைதல்) |
சமுசாரம்,பொன் | உலக இன்பங்களையும், பொன் பொருளையும் |
சுகித்தே | நன்றாக அனுபவித்து |
சுற்றத்தவரோடு | மனைவி மக்கள் மற்றும் உறவினரோடு |
இன்பத்தழைத்தே | நாளும் பெருகும் சந்தோஷத்தோடு |
மெச்ச | அனைவரும் கொண்டாடும்படி |
தயவோடு | மிகுந்த பரிவோடு |
இந்தக்குடி பேணி | இந்தசொந்தபந்தங்களைப் பாதுகாத்து (முடிவில்) |
குரக்கோணத்தின் | கூர்மையான அலகை உடைய (கோணம் = மூக்கு) |
கழு, நாய் உண்ப | பிணம்தின்னிக் கழுகுகளும், நாய், நரி போன்ற விலங்குகளும் உண்ணும்படி |
குழிக்கே வைத்து | குழி தோண்டிப்புதைக்கப்படும் |
சவமாய் நந்து | பிணமாகி அழுகக்கூடிய |
இக்குடில்கேநத்தி | இந்த மாய உடல் மீதே பற்று வைத்து |
பழுதாய் | வீணாக |
மங்கப்படுவேனோ | அழிந்து விடுவேனோ |
(முருகா அப்படி ஆகி விடாமல்) |
குறித்தே முத்திக்கு | வீடு பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு, |
மறா (மாறா) இன்ப | அழியாத/குறையாத ஆனந்தமாம் |
தடத்தே பற்றி | முக்தி வழியைப்பிடித்துக்கொண்டு |
சக மாயம் | இவ்வுலகம் சார்ந்த |
பொய்க்குலக்கால் | பொய்யான, இன்று இருப்பது போல் தோன்றி நாளை மறையும்உலக விஷய பற்றுக்கள் |
வற்ற | வற்றி இல்லாமல் தொலையும் படி |
சிவஞானம் | சிவ ஞானம் ஆகிற (அதாவது சீவனே
சிவன் எனும் முற்றிய அறிவு) |
பொன் கழல் தாராய் | உன்னுடைய மேலான திருப்பாததரிசனம் தந்து அருள்வாய் |
புரக்காடு | முப்புரங்கள் (காட்டில் பிடித்த தீ போல்) |
அற்றுப்பொடியாய் மங்க | எரிந்து சாம்பலாகி அழியச்செய்தவர் |
கழைச்சாபத்து | கரும்பை வில்லாக உடைய |
ஐச்சடலான் உங்க | அழகிய மேனி உடைய மன்மதனும் அழிய |
புகைத்தீ பற்ற | அவனையும் தீயில் எரித்தவர் |
புகலோர் | என்று பேசப்படும் சிவபெருமானார் |
அன்புற்று | இந்திரன் முதலிய தேவர்கள்தாரகாசுரனுக்கு அஞ்சியபொழுது அவர்கள் மீது கருணை கொண்டு |
அருள்வோனே | தோற்றுவித்தவனே |
புடைத்தே | நன்றாக அடித்து
|
எட்டுத் திசையோர் | எட்டுத் திசையிலும்/எல்லா இடங்களிலும் இருப்பவர்கள் (திக்பாலர்கள் என்றும் ஆம்) |
அஞ்ச | பயம் அடையும் படி |
தனிக்கோலத்துப் புகு | ஒப்பற்ற (பயங்கர) வடிவெடுத்து நினைத்த இடத்தில் செல்லக்கூடிய |
சூர் மங்க | சூர பத்மன் அழியும்படி |
புகழ்ப்போர் சத்திக்கு | போர் புரிவதில் வல்லமை பெற்ற அந்த உன் வேல் ஆயுதத்துக்கு |
இரை ஆனந்தத்து | (அவன் சதையை) உணவாக மிகவும் மகிழ்சியடையும்படி |
அருள்வோனே | கொடுத்தவனே |
திருக்கானத்தில் | அழகான அந்தத்தினைப்புனத்தில் |
பரிவோடு | மிகுந்த அன்போடு, |
அந்தக் குறக்கோலத்து | குற வேடத்தில் வந்த |
செயலாள் அஞ்ச | லக்ஷ்மியான வள்ளி பயமுறவும் |
திகழ் சீர் அத்திக்கு | பெருமை பொருந்திய (தன் தமையனான) யானைக்கு |
அழல், வா என்ப | பயந்து அழாதே, நான் இருக்கிறேன் வாஎன்று கூறி |
புணர்வோனே | அவளை அணைத்துக்கொண்டவனே |
சிவப்பேறுக்கு | (அது போல) சிவப்பேறு எனும் முக்தி, |
கடையேன் | மிகவும் கீழ் நிலையில் உள்ள நானும் |
வந்து உள் புக | கூட (எப்படியோ) வந்து சேர்ந்து விடுமாறு |
சீர் வைத்துக்கொளு | செய்து உன் புகழை (அடியார்க்கு எளியன் கருணை வடிவினன் என்னும்) தக்க வைத்துக்கொள்வாயாக |
ஞானம் பொன் | ஞானமாகிய செல்வத்துக்குப்பெயர் பெற்ற |
திருக்காளத்தி | திருக்காளஹஸ்தியில் எழுந்தருளி இருக்கும் |
பெருமாளே | முருகப்பெருமானே |
Comments
Post a Comment