மூல மந்திரம் — பதவுரை
By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link moolamanthiram மூலமந்திரம் வேதத்தின் மூலமான மூலமந்திரமான சிவ பஞ்சாக்ஷரமோ, முருகனின் ஷடாக்ஷரத்தையோ ஓதல் இங்கு இலை நியமமாக செபிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை ஈவது இங்கு இலை பிறருக்கு, தேவை என்று வருபவர்க்குக் கொடுக்கும் பழக்கமும் இல்லை நேயம் இங்கிலை உன்னிடம் மாறாத அன்பு ( அல்லது எவரிடத்தும் அன்பு செய்யும் பாங்கு) என்னிடத்தில் இல்லை மோனம் இங்கு இலை மனம் அடங்கியதன் அடையாளமான மௌனம் (மனன சீலம்) என்னிடம் இல்லை ஞானம் இங்கு இலை (ஞானத்தின் வெளிப்பாடான மேற்சொன்ன எதுவும் இல்லை ஆதலால்) மெய் உணர்வு இல்லவே இல்லை என்பது வெளிப்படை