வசனமிகவேற்றி — பதவுரை
By Mrs Devaki Iyer, Pune
For a translation of this song in English, click the link vachana miga
வசனம் மிக ஏற்றி | வாக்கால் உச்சரித்து பல ஆவ்ருத்திகள் (எண்ணிக்கையில்) உரு ஏற்றி |
மறவாதே | (அம்மந்திரத்தால் குறிக்கப்படும் இறைவடிவத்தை) மனதை விட்டு அகலாமல்தியானித்து |
மனது துயர் ஆற்றில் | ஆற்றின் ஓட்டம்போலத் தொடர்ந்து வரும் துன்பங்களாலான இவ்வுலக நினைவுகளில் மனம் |
உழலாதே | சென்று துன்பப்படாமல் (காத்து, அடக்கி) |
இசைபயில் | புகழ்வாய்ந்த/ ப்ரசித்தமான |
ஷடாக்ஷரம் | ('சரவண பவ' எனும்முருகனுக்கு உரிய) ஆறு எழுத்து |
அதாலே | மந்திரத்தை மேற்சொன்ன முறையில் ஜபிப்பவர்க்கு |
இக பர சௌபாக்கியம் | இவ்வுலக வாழ்க்கை இன்பங்களும் அதோடு கூட மோக்ஷத்தையும் |
அருள்வாயே | கொடுத்து விடுகிறவன் அல்லவா நீ (நாம ஜபத்தின் பலனை, "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் / இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தினால் இடர் கெடலும் ஆம்/ அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார்.) |
பசு பதி | உடல் பற்று/ உலகப்பற்று க்களால் கண்டுண்ட இவ்வுயிர்களு க்கெல்லாம் தலைவனான (அக்கட்டுக் களை அறுக்கவல்ல) |
சிவாக்யம் உணர்வோனே | சிவ பெருமானிடம் சென்று சேர்க்கும் நூல்களை (சைவாகமங்களை) நன்கு அறிந்தவனே (உபதேசம் புரிய வல்லவனே.) |
பழநி மலை வீற்று | இந்தப் பழநி எனும் சிவமலையில் அமர்ந்து |
அருளும் வேலா | பக்தர்களுக்கு அருள் புரியும் வேலவனே |
அசுரர்கிளை வாட்டி | தாரகன், சூரபத்மன், சிங்கமுகன் போன்ற அசுரர்களுடைய குலத்தையே போரில் வதைத்து அழித்து |
மிக வாழ | நன்றாக மீண்டும் வாழும்படி |
அமரர் | தேவர்களை |
சிறைமீட்ட | அவ்வசுரர்களின் பிடியில் இருந்து விடுவித்த |
பெருமாளே | தலைவனே |
Comments
Post a Comment