சைவ சித்தாந்தம் : அறிமுகம் (பகுதி 1)
சைவ சித்தாந்தம் என்றால் என்ன?
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றது சைவ சமயம். தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து மலநீக்கம் பெற்று சிவனடியை சேரும் வழி காட்டுவதே சைவ சித்தாந்ததின் நோக்கம். சித்தாந்தம் என்பது ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவு. சைவ சித்தாந்தம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரால் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது. சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் உள்ளனர். சமயக்குரவராகிய நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். சந்தான குரவர்கள் மடங்கள் ஸ்தாபித்து வழிமுறை பாடங்கள் வகுத்தார்கள். அந்த நால்வரில் முதலாமவர் மெய்கண்டார்; அவரின் சீடர் அருள் நந்தி சிவம்; அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். கடைசியாக உமாபதி சிவம். சைவ சமயத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். மெய்கண்டார் கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரஞ்சோதி முனிவர் (பிற்காலத்தில் திருவிளையாடல் புராணத்தின் ஆசிரியரான பரஞ்சோதி முனிவர் அல்ல) என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். சிவஞான போதத்துடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். மேலும், சைவ நாயன்மார்களின் தமிழ்ப் பாசுரங்களான தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப் பட்டிருக்கின்றன.
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை: சற்காரிய வாதம்
ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும்."எள்" காரணம் "எண்ணெய்" காரியம், "மண்" காரணம் "பானை" காரியம். ஒரு பொருள் எங்கிருந்து வந்தது என கேள்விக்கான விடை காணும் தத்துவ விளக்கம் காரண காரிய வாதம். எந்த ஒரு காரண நிலையிலும் காரியம் உண்டு என எடுத்துரைப்பது சத்காரிய வாதம் ஆகும். அதாவது காரியம் புதிதாக தோன்றுவது அல்ல அது காரண நிலையில் உறைந்துள்ளது என்கிறது சத்காரியவாதம். பானை என்பது ஏற்கனவே மண்ணிலுள் உள்ளது, இல்லை எனில் மண்ணிலிருந்து பானையை உருவாக்க முடியாது என்பதே "சத்காரியவாதம்" ஆகும். சற்காரிய வாதம் கூறும் 'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற கருத்து இயற்பியல் அடிப்படையில் உள்ள 'ஆற்றல் மாறாக் கோட்பாட்டை' (Law of Conservation of Energy) ஒத்துள்ளது. சத் = என்றும் உள்ள பொருள்; காரியம்- செயற்படுவது; வாதம் = கொள்கை.
"உள்ளது அழியாது, இல்லது தோன்றாது" என்பதை "உள்ளதே தோன்றும்; இல்லது தோன்றாது" என்றும் சொல்லாம். உள்ளது அழியாது. அழிதல் என்பது பரு பொருளாக விளங்கியிருந்த ஒன்று நுண்மையாகக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போயிற்றே தவிர அடியோடு ஒன்றும் இல்லாமல் அழியவில்லை. மண் குடம் அழிந்தது என்றால் அது குடமாக இருந்த நிலை அழிந்து, உடைந்த துண்டுகளாக மாறி இருக்கிறது. மண் குடத்தில் மண் மூலப்பொருளாக மறைந்து இருக்கிறது. ஒரு பொருள் கண்ணால் கண்டு, கையால் தொட்டு உணர்ந்து அறிய வேண்டும் என்றால் அது நுண்மையான நிலையில் பொருளுக்கு உள் இருந்திருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாவிட்டால் ஒருபோதும் தோன்றாது.
மண் குடமாக விளங்கித் தோன்ற, குடத்தைச் 'செய்பவன்' ஒருவன் கட்டாயம் வேண்டும். அதாவது, மூலப்பொருளான (காரணம்) மண்ணிலிருந்து இருந்து செயப்படுபொருளாக (காரியம்) விளங்கித் தோன்றுவதற்கு 'செய்பவன்' (நிமித்த காரணன்) ஒருவன் கட்டாயம் வேண்டும். அதே போல், 'உலகம்' தோற்றமுள்ள பொருள் என்பதால் உலகமும் 'செயப்படுபொருள்'தான். அதற்கு மூலப்பொருள் 'மாயை'. அந்த செயப்படுபொருளை மாயை என்னும் மூலப்பொருளில் இருந்து உருவாக்க, 'செய்பவன்' ஒருவன் உறுதியாக இருக்கிறான். அவனையே நாம் இறைவன் என்கிறோம்.' என்று நிறுவுகிறார் மெய்கண்டார்.
இன்னோர் உண்மையையும் சற்காரிய வாதம் தெரிவிக்கின்றது. அறிவும் அறிவில்லாததும் வேறு வேறு. அறிவில்லாத பொருளில் அறிவு என்றும் தோன்றுவதில்லை. மேலும் அறிவில்லாத பொருள் தானாகவும் செயல்படுவதில்லை என்று தெளிவு படுத்துகிறது.
அத்வைதவாதிகள் பிரம்மம் என்கிற ஒரே சத்திய வஸ்து மாயா சக்தியினால் எண்ணற்ற ஜீவராசிகளாக தோன்றுகிறது என்றும் பிரம்மத்திற்கு புறம்பாக இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை என்று கூறுகின்றனர்.
பிரகிருதி அல்லது இயற்கை எனும் அறிவற்ற சடப்பொருளும் புருஷன் எனும் அறிவுள்ள பொருள் ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே சாங்கியம் பேசும். பிரகிருதி என்ற பொருளை முதன்மையானதாகவும், புருசனை இரண்டாவதாகவும் வைத்துக் கொண்டதால் சாங்கியம் முதன்மை காரணவாதம் எனப்பட்டது. உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் மாயை; புருசன் தான் இறுதியான உண்மை என்று கூறும் வேதாந்தவாதமான பிரம்ம காரணவாதத்தை மறுக்கும் நோக்கத்தில் சாங்கியவாதிகள் இரண்டாவதாக புருசனை ஏற்கவேண்டிய தேவை ஏற்பட்டது.‘புருசன்’ என்பது முதன் முதலான பொருளின், மூலப் பொருளின் பெருக்கம் தான் எனக் கூறப்பட்டது. கண்களுக்குப் புலனாகும் உலகத்திற்கு அடிப்படை “பொருள்தான்”; புருசன் உலகத் தோற்றத்திற்கான காரணமல்ல. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது; மூலப் பிரகிருதி இயக்கமுற்று பலவாக வளர்ச்சி அடைந்து புருசன் ஆனது.
அத்வைத வேதாந்திகள், ஸாங்கியர்களின் பரிணாமவாத கூற்றாகிய பிரகிருதியின் பரிணாம மாற்றமே ஜகத் – பிரகிருதியே ஸ்ருஷ்டியாகப் பரிணமித்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் பால் தயிராகப் பரிணமித்தது என்றால் பால் தயிரானபின் தயிரில் பால் இல்லாததை போலவே பரமாத்மா ஜகத்து பரிணமித்தபின் இல்லாமல் போய் விடுவார் என்று கூறுவதை போல ஆகும். மாறாக அவர்கள் இறைவன் சுத்த ஞான ஸ்வரூபமாக இருந்துகொண்டே மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார்; இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான் என்ற விவர்த்த வாதத்தை முன் வைக்கிறார்கள்.
நியாய- வைசேஷிகக் கொள்கையாளர்கள் சற்காரிய வாதத்தை மறுப்பவர்கள். அவர்கள் வாதப்படி வெறும் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை அதிலிருந்து விளைந்தது. மண்ணைப் பானையாக்கும் குயவன் இல்லாத பானை என்ற விளைவை மண்ணிலிருந்து உண்டாக்குகிறான். இதற்கு ஆரம்பவாதம் என்றும், அஸத்-கார்ய-வாதம் என்றும் பெயர். ‘ஸத்’ என்றால் இருப்பது. ‘அஸத்’ இல்லாதது. ஈச்வரன் அணுக்களைக் கொண்டே அணுக்களில் இல்லாத சிருஷ்டியைப் பண்ணியிருக்கிறான்.
பெளத்தர்கள் கர்ம விதிகளுக்கு ஏற்பவே உலகம் இயங்குகின்றது என்றும் அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது என்றும் உரைப்பர். உடம்பில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பகுத்துப் பகுத்து ஆராய்ந்து பார்த்தும் ஆன்மா இன்னது என அறிய வாராமையால் ஆன்மா சூனியமே என்பர். அவர்கள் கூறுவது சூனிய ஆன்மவாதம் எனப்படும். இதை மறுக்கும் சைவ சித்தாந்தம் இவ்வாறு ஆராய்ந்து ஆன்மா சூனியமே எனக் கூறும் அறிவே ஆன்மா என்கிறது. இறைநிலை என்பது எங்கும் நிரம்பியள்ள சுத்தவெளி; அந்த பேரறிவான பேறாற்றலே எல்லாத் தோற்றப் பொருட்களுக்கும் உயிரினங்ககளுக்கும் மூலம் என்று சைவ சித்தாந்தம் தெளிவு படுத்துகிறது.
Saiva Siddhanta Explained
Saiva Siddhanta is the canonical text-book of Saivites who worship Shiva as the first and foremost God and whose ultimate goal in life is to experience union with Shiva. It outlines the settled view of Shaiva doctrine or siddhanta. It is based on Tamil devotional hymns known as as Tirumurai, written by Shaiva saints from the 5th to the 9th century. The chief amongst these saints was Meykanda Devar who wrote Sivagyana Bodham; the lineage of disciples following him being Arul Nandi Sivam, Maraigyana Sambandar and Umpapati Sivam.
In Saiva Siddhanta, unlike in Advaita, maya is considered the real matrix of the world. It is the material cause of the world, thereby subscribing to the theory of Satkaryavada, i.e., the effect is really contained in the cause.
According to satkaryavada theory, the manifested effect is pre-existent in the cause in a potential state prior to its production. Nothing new is created; it is only an explicit manifestation of what was implicit in the material cause. If the effect did not pre-exist in the material cause, then no amount of effort on part of any agent could bring it into existence. Curd can be got only from milk and a cloth only from threads. Effects can be produced only from what is capable of producing them. Thus we can say that the effect must be potentially contained in the cause. In the case of a clay pot, the potter and his tools are only efficient causes which are necessary to manifest the effect — the pot, from the material cause — the clay. If the effect were not already existent in its cause, then something would have to come out of nothing. The original cause of everything that is perceived is the eternal consciousness. Sankhya, Yoga, and the Vedanta schools are satkaryavadins. In Saiva Siddhanta, Shiva is the efficient cause; shakti is the instrumental cause for the creation of the universe.
Another important question arises: Is the effect a real transformation of the cause or just an unreal appearance? The Advaita Vedantins who advocate Vivartavada believe that the manifestation of the effect is merely an illusion. Sankhya system, the advocates of Parinamavada, believe that the effect is a real modification of prakriti, the cause. Sankhya is a dualistic school which believes in two independent ultimate principles, puruṣa ('consciousness' or spirit); and prakṛti, (nature or matter). When prakṛti comes into contact with Purusha, Prakriti becomes manifest, or evolves into the world/universe. The effect thus pre-exists in prakriti; it come out at the time of creation and returns back to it at the time of dissolution.
Those who do not subscribe to the view that effect pre-exists in its material cause are called asatkaryavadins. Nyaya-Vaisheshika and the Buddhist schools believe in asatkaryavada.
Comments
Post a Comment