Posts

Showing posts from December, 2023

Symbolism of Murugan Worship

உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. uruvAi aruvAi uLadhAi iladhAi maruvAi malarAi maNiyAi oLiyAy karuvAi uyirAik gadhiyAi vidhiyAi guruvAi varuvAi aruLvAi guganE! You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the cosmic embryo, and You are also the life that moves the embryo! jYou are the ultimate refuge and You lead the path of the destiny of jeevatmas towards salvation. May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow on me Your grace! Brahman is the Absolute Reality, the source of all things into which all things will eventually go back. It is a pure, blissful consciousness that is infinite, eternal, and unchanging. Advaita...

மன்மதன் தத்துவம்

மன்மதன் என்றால் என்ன? ‘மன்மதன்’ என்றால் ‘மனதை கடைபவன்’ என்று அர்த்தம். ‘மதனம்’ என்றால் கடைவது. காதல் வயப்பட்ட ஒருவரின் மனதை மதனம் பண்ணுவதால் மன்மதனுக்கு இந்த காரண பெயர். திருமாலின் மனத்தில் இருந்து உண்டான மன்மதன், திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்து எழுந்த பிரம்மாவுக்கு தம்பிமுறை. மன்மதனுடைய புஷ்ப பாணங்கள் தாமரை, மல்லிகை, கருங்குவளை (நீலோத்பலம்), மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவை தான்; நாணோ புஷ்பங்களில் ரீங்காரமிடும் வண்டுகள்; அவனுடைய தென்றல் தேரை இழுப்பது கிளி! மலர் அம்புகளை செலுத்தும் வில்லாகிய மனம் பஞ்சேந்திரியங்களால் ஆளப்படும் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தை காமத்தில் கட்டிப் போடுகிறது. அது எப்படி? ஐந்து பாணங்கள் ஐம்புலனைக் குறிப்பன. பஞ்ச இந்த்ரியங்களால் அநுபவிக்கப்படும் ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்கிறவை தன்மாத்ரை எனப்படும். லலிதா சஹஸ்ரநாமத்தில் பஞ்ச தன்மாத்ர சாயகம் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்...

பாற்கடல் கடைதல் - தத்துவ விளக்கம்

ஆடக மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி : பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து, ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக : ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி, ஆழி கடைந்து அமுது ஆக்கி : பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து, அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயன் : இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமால் (திருப்புகழ் பாடல் 420. வேடர் செழுந்தினை ) பாற்கடல் கடைந்த கதை ஒரு காலத்தில் இந்திரன் துர்வாச முனிவர் அளித்த மலர் மாலையை அலட்சியமாக தன்னுடைய யானைக்கு அணிவித்தான். யானை அதை தன் தும்பிக்கையால் பிய்த்து எறிந்ததை பார்த்த முனிவர் கடுங்கோபம் கொண்டு தேவர்களின் வலிமையும் அதிர்ஷ்டமும் மறைந்து போகும்படி சாபம் அளித்தார். அந்த சாபத்தின் மூலம் தேவர்கள் மிகவும் வலிமை குறைந்தவர்கள் ஆகி விட்டனர். எல்லா அண்ட சராசரமும் அசுரர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது.

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே