2. பக்கரைவி சித்ரமணி

ராகம்: நாட்டைதாளம்: ஆதி – கண்ட நடை
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுரகமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டள்கைவடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியபனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கைமறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரைஇளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகைதனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும்அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடையபெருமாளே.


Pakkarai vichithramaNi poRkalaNai ittanadai
pakshiyenum ugrathura gamu neeba

pakkuva malarththodaiyum akkuvadu pattozhiya
patturuva vittaruLkai vadivElum

dhikkadhu madhikkavaru kukkudamum rakshaitharu
chitradiyu mutriyapa niruthOLum

seyppadhiyum vaiththuyar thiruppugazh viruppamodu
seppena enakkaruLgai maRavEnE

ikkavarai naRkanigaL sarkkarai paruppuda ney
etporiya valthuvarai iLaneer vaN

dechchilpaya Rappavagai pachcharisi pittu veLa
rippazham idippalvagai thani moolam

mikka adisiR kadalai bhakshaNam enakkoLoru
vikkinasa marththanenum aruLaazhi

veRpa kudilachchadila viRparamar appar aruL
viththaga maruppudaiya perumaaLE.


Learn the song

Ragam Nattai + Mohanam

Ragam Mohanam


பிள்ளையார் வழிபாட்டின் முக்கியத்துவம்

மனம், உடல் ஆன்மாவுடன் லயமாவதே நம் வாழ்வின் குறிக்கோள். இதற்கு நம் வினைகள் தடையாக உள்ளன. நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும். மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது. அதற்கு நாயகன் விநாயகர் ஆவார். கர்ம வினையை அகற்றுவதற்கு நாம் மூலாதாரச்சக்கரத்தில் உள்ள கணபதியை முறைப்படி தியானிகக வேண்டும்.

Paraphrase

Saint Arnagirinathar sang this song in the precincts of 'Poyya-Ganapati' shrine at Vayaloor Murugan temple. Lord Murugan had ordained Arunagiri to sing songs in His praise at Thiruvannmalai and gave him the words 'Muthaitharu' to begin the song with. After this song, Arunagirinathar sat in meditation, and Murugan appeared before him in a vision, directing him to Vayaloor. At Vayaloor, Murugan further decreed that Arunagirinathar should sing, for the deliverance of mankind, about His his Vahana, the peacock; the garland; 'Vel'– the spear; His flagstaff bearing the emblem of a rooster; His protective feet; His strong and muscular shoulders; and Vayaloor.

பக்கரை விசித்ரமணி பொற் கலணை இட்ட நடை பட்சியெனும் உக்ர துரகமும் (pakkarai vichithramaNi poRkalaNai ittanadai pakshi enum ugrathuragamum) : The fierce horse-like bird (peacock), wearing bejewelled stirrup and a golden saddle, பேரழகான மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அங்கவடி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், பக்கரை விசித்ரமணி (pakkarai) : விசித்ரமான அழகுடைய மணிகளால் செய்யப்பட அங்கவடி (குதிரைச் சவாரி செய்பவர்கள், இரண்டு பக்கத்திலும் காலை நுழைத்து வைத்துக்கொள்வதற்காக, உலோகத்தால் ஆனது), stirrup (a loop, ring, or other contrivance of metal, wood, leather, etc., suspended from the saddle of a horse to support the rider's foot); கலணை (kalaNai) : saddle, சேணம்; சேணம் என்பது சவாரி மிருகங்களின் மேல் அமர்வதற்காக அதன் முதுகில் பூட்டப்படும் இருக்கை;

நீப பக்குவ மலர் தொடையும் (neeba pakkuva malar thodaiyum) : wearing a garland of just-bloomed kadappa flowers

அக்குவடு பட்டொழிய பட்டு உருவ விட்டருள் கை வடிவேலும் (akkuvadu pattozhiya patturuva vittaruLkai vadivElum) : the spear (of knowledge) that pierced through and destroyed the Krauncha mountain (of ignorance)

திக்கது மதிக்கவரு குக்குடமும் (dhikkadhu madhikkavaru kukkudamum) : the cock-baring flagstaff that is majestically fluttering in all the eight directions. Mythologically, Surapadma was a demon who tried to fight Murugan. When he took the form of a tree, Murugan split him into two. One of the two parts was transformed by Murugan into the peacock that eventually became his vahana or vehicle, while the other half was transformed into the cock that Murugan holds aloft as a banner or emblem.

ரட்சைதரு சிற்றடியும் (rakshaitharu chitradiyum): the tiny feet that protects the entire living things in the universe,

முற்றிய பனிரு தோளும் (mutriyapa niruthOLum): twelve strong shoulders

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு (seyppadhiyum vaiththu uyar thiruppugazh viruppamodu seppu ): and Vayaloor — "mentioning this Vayaloor and all of the above, recite incomparable songs of praise", செய்ப்பதி (seyppadhi): vayaloor, செய் (வயல்) + பதி (ஊர்) = வயலூர்

என எனக்கு அருள்கை மறவேனே (ena enakku aruLgai maRavEnE) : I will never forget your ordaining me thus.

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் (ikku avarai naRkanigaL sarkkarai paruppudan nei) : Sugar cane, flat beans, fruits, sugar, lentils, refined butter,

எள் பொரி அவல் துவரை (eL pori aval thuvarai) : sesame-seed, fried and puffed rices, split beans,

இளநீர் வண்டெச்சில் பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம் (iLaneer vaNdu echchil payaRu appavagai pachcharisi pittu veLarippazham idippalvagai thani moolam ) : tender coconut, pure honey, whole lentils, fried sweet rice (appam), raw rice pudding (pittu), cucumber, food items from ground grains, rare edible roots; இடி = மாவு; பல் வகை = பல வகையான; தனி = ஒப்பற்ற, மூலம் = கிழங்குகள்.

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் (mikka adisil kadalai bhakshaNam enakkoL) : plenty of cooked rice and nuts (and the above items) are the Sathwik (harmless) food items; மிக்க அடிசில் = சிறந்த உணவு (வகைகள்).

ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி (oru vikkina samarththanenum aruL aazhi) : Efficient remover of obstacles and the great ocean of compassion, Oh Vinayaka!

வெற்ப குடிலச் சடில (veRpa kudila chadila) : (son of Shiva)who dwells in Mount Kailash, One who has twisted tresses,

விற்பரமர் அப்பர் அருள் (vil paramar appar aruL) : One who holds in His hand the Meru Mountain as His bow — He is Lord Shiva and You are His gift;

வித்தக மருப்புடைய பெருமாளே (viththaga maruppudaiya perumaaLE.) : Oh Embodiment of Knowledge! (possessing)unique tusk, Oh Great One!

Brief Meaning

Oh Vinayaka, I shall never forget your beneficent command that I should sing about your mount – the peacock, the kadappa garland, your resplendent spear, rooster-bearing flag, your compassionate feet, the strong shoulders and the places you reside!

திருமதி ஷ்யாமளா அவர்களின் விளக்கவுரை

முருக தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்று வயலூர். அருணகிரியாரை வயலூருக்கு வரச் சொல்லி தன் திருவடி , பன்னிரு தோள்கள், வேல் மயில் சேவல் பற்றி தூய செந்தமிழில் பாடும்படி பணித்தார்.

வினாயகருக்கு பிடித்தமான 23 வகை உணவுகளை படைக்கிறார். அரிசி பருப்பு வெல்லம் புட்டு காய் கனி என பலப்பல. அனைத்தும் அவருக்கு சிறு பட்ச்சணம் தான். இவர் விக்னத்தை நீக்குபவர், அருட்கடல், காப்பதில் மேரு மலை, குரா மலர், சடை பினாக வில் தரித்த சிவனாரின் செல்வப் புதல்வர். ஒற்றை கொம்புடைய யானை வடிவமானவர். வினாயகர் இப்பாடலை தலை அசைத்து ரசித்தாராம்.

முதற்பகுதி முருகனுக்கு சமர்ப்பணம். பக்கரை என்பது குதிரை மேல் அமர்வதற்காக போடப்படும் ஒரு அணி. தவிர பல மணிகள் கோத்த மாலை கால் வைக்க பொன்னிற சேணம். அப்படிப்பட்ட குதிரை போல் அழகானது முருகனின் மயில். கம்பீரமாக நடக்கும் பறவை.கிரௌஞ்ச மலையை பிளந்து பொடியாக்கிய வேல், திசையனைத்தும் மதிக்கும், உதய சூரியனை முதலில் காணும் சேவல், அனைவரையும் காக்கும் பன்னிரு தோள் கொண்ட பெருமாள், அனைத்தை பற்றியும் புகழ்ந்து மகிழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் திருப்புகழ் என்று வேறு குறிப்பிடுகிறார். அதனால் அப்புறம் அவர் பாடிய அனைத்து பாடல்களும் திருப்புகழ் என பெயர் பெற்றன. அந்த வயலூர் வினாயகரை, வேல் முருகனை மறவேனே என்கிறார்.

Comments

  1. I remember my mom singing this song. Thnx for this wonderful site, Uma.

    ReplyDelete
  2. Bliss..thks..plz continue postings..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே