8. கனகந்திரள்கின்ற பெருங்கிரி

ராகம் : சங்கராபரணம்/நீலாம்பரிதாளம் : திஶ்ர த்ருபுடை (7)
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடுகதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடுமுருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள்மருகோனே
பலதுன்பம்உ ழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள்புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர்புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கனபெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள்பெருமாளே.

Learn the Song

Ragam: Neelambari


The Song in Neelambari

Ragam: SankarabharaNam

The Song in Sankarabharanam


Paraphrase

கனகம் திரள்கின்ற பெருங்கிரி (kanagam thiraLkindRa perungiri) : The big mountain (Mount Meru) with amassed gold பொன் திரண்டிருக்கும் மேரு மலை

தனில் வந்து தகன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே (thanil vandhu thaganthagan endRidu kadhirminjiya cheNdai eRindhidu gathiyOnE ) : on which you, the refuge for all life, threw the dazzling golden 'chendu'; கதியோனே = புகலிடமானவரே;

கடமிஞ்சி அநந்த விதம்புணர் கவளந்தனை உண்டு வளர்ந்திடு கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே (kadaminji anantha vidhampuNar kavaLanthanai undu vaLarndhidu kariyin thuNai endru piRandhidu murugOnE) : You are born as the brother of the elephant god who, like an inebriated elephant, consumes a variety of edibles and grows enormously; மதம் மிகுந்து, அளவில்லாத வகையான பல ஆகாரங்களை கவள அளவாக எடுத்து உண்டு, வளர்ந்திடும் யானை முகத்தை உடைய விநாயகமூர்த்தியினது சகோதரராகத் தோன்றிய முருகப்பெருமானே!

பனகம் துயில்கின்ற திறம்புனை (panagan thuyilkindra thiRampunai) : The god who lies on the serpent, AdhisEshan – the 5-headed celestial snake, in Yoga Nidra. Adiseshan's five heads represent our five organs in the body or the five bhootas and the lord controls the 'pancha bhootas'. பாம்பாகிய ஆதிசேடன்மீது, அறிதுயிலாகிய யோக நித்திரை புரிவதில் வல்லவரும்,

கடல்முன்பு கடைந்த பரம்பரர் (kadalmunbu kadaindha paramparar) : the god who churns the Milky Ocean திருப்பாற்கடலை முன்னாளில் (தேவர் பொருட்டு) கூர்மாவதாரமெடுத்து கடல் கடைந்தவரும், பொருள்களுக்கெல்லாம் மூல பொருளாக விளங்குபவரும்,

படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே (padarumpuyal endravar anbukoL marugOnE) : Loved by the god with cloud-like complexion (Vishnu); ஆகாயத்தில் படருகின்ற மேகத்திற்குச் சமானமாகிய நீல நிறத்தையுடையவருமாகிய நாராயணமூர்த்தி மிகுந்த அன்பு கொள்ளுகின்ற மருகனாக எழுந்தருளியவரே!

பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி பவம் (pala thunbam uzhandru kalangiya chiRiyan pulaiyan kolaiyan puri bavam) : The sins committed by me, a small entity, mired in miseries and tormented, mean, meat-eating and murderer,

இன்று கழிந்திட வந்து அருள் புரிவாயே (indru kazhindhida vandharuL purivAyE) : wipe them (the sins) out with your grace today.

அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன் அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே (anagan peyar nindRuruLum thiripuramum thiri vendRida inbudan azhal untha nakunthiRal koNdavar pudhalvOnE) : You are the son of the blemish-less('anagan') Shiva, whose laughter emitted the fire ('azhal'), which merrily ignited and destroyed the constantly rotating tripura. பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, எப்போதும் சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள, அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே,

அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு என அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர் (adalvandhu muzhangi yidum paRai dududuNdudu duNdudu duNdena adhirgindRida aNdam nerindhida varusUrar) : The drums boom out 'dududuNdudu duNdudu' and the whole earth resounds the boom when the hordes of demons come charging

மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட (manamum thazhal chendRida andRu avar udalum kudalum kizhi koNdida) The hearts of asuras too went to the flames, and their body as well as the intestines were torn (in that fight)

மயில் வென் தனில் வந்து அருளும் கன பெரியோனே (mayil vend thanil vandharuLum gana periyOnE) : The great god who rides the back of the peacock

மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே.(madhiyum kadhirum thadavumpadi uyargindRa vanangaL porundhiya vaLam ondRu parangiri vandharuL perumALE) : You reside in the Parangiri mountain whose forests are covered with towering trees that touch the sun and the moon. திருப்பரங்குன்றம் மூலாதாரத் திருத்தலம். ஆனபடியால் `மதியுங் கதிர்’ என்பது சந்திரநாடி சூரியநாடி (இடா பிங்கலா) என்பனவற்றைக் குறிப்பிடுகிறது.


About Ugra Pandiyan

கனகம் திரள்கின்ற பெருங்கிரி......கதியோனே : The lines refer to one of the one of the thiruvilayadals or divine sports of Lord Shiva. The sixty four Thiru ViLaiyaadals have formed the theme of a big literary work called 'Thiru ViLaiyaadal PuraaNam' and describes the 64 Divine Sports and Exploits of Lord Siva of Madurai known as Chokanatha or Sundaresvara. This was composed by ParanjOthi Munivar in the 16th century.

Legend has it that Meenakshi and Sundareswarar ruled over the city of Madurai for a long period of time. Sundareswarar also goes by the name Sundara Pandyan. Ugra Pandyan, the son of the divine couple, is believed to be none other than Subramanya.

Sundara gives his son three weapons against his mortal enemies: discus (chakra) to aim at Indra, Javelin ('vel') to quell the sea(varuna), club ('chendu') to strike Mount Meru. Varuna, the sea, jealous of Ugra’s perfect rule, rises and threatens Madurai. Ugra hurls his Javelin at the sea and subsides its fury.

Indra makes clouds rain on the Chola and chera lands,but denies rains to Pandyas. Ugra captures and imprisons the clouds. Indra declares war, but Ugra smites the god with his discus and forces him to send the rains.

Maha-meru was a sacred mountain with one thousand and eight peaks with which it supported the earth. When the mountain does not accede to Ugra's request, Ugra decides to curb the Meru's arrogance and strikes the mountain with anger: the peaks tremble and the mountain open up its riches with vast stores of precious stones, from which the king takes as much as needed and seals the cleft with his own royal seal. He distributes the wealth to Brahmins, and the temples; the rain pours and the country becomes fertile once again.

Reference to the story in other Thiruppugazh songs:
பாணிக்கு
பஞ்ச பாதக
சயிலாங்கனைக்கு

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே