293. சயிலாங்கனைக்கு

ராகம்: பூர்வி கல்யாணிஅங்கதாளம் (15)
2½ + 1½ + 1½ + 2 + 1½ + 1½ + 1½ + 3
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர்வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர்உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்தவுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்குறையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்துசுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்டமுழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த பெருமாளே.

Learn The Song




Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 P D2 P S    Avarohanam: S N3 D2 P M2 G3 R1 S

Paraphrase

சயில அங்கனைக்கு உருகி (sayila Anganaikku urugi) : Moved by the devotion of PArvathi, daughter of Mount HimavAn, அங்கனை (anganai) : woman;

இடப்பக்கங் கொடுத்த கம்பர் ( idap pakkam koduththa kambar) : Ekambareswarar gave the left side of His body to Her;

வெகுசாரி சதி தாண்டவத்தர் (vegusAri sathi thANdavaththar) : He dances in a variety of ways to various beats (jathis);

சடை இடத்துக் கங்கை வைத்த நம்பர் ( sadai yidaththu gangai vaiththa nambar) : and He is our Lord SivA who has adorned His tresses with River Ganga.

உரை மாளச் செயல் மாண்டு சித்தம் அவிழ (urai mALa seyal mANdu chiththam avizha) : He lost His speech, His actions died and His mind was blown apart

நித்ததுவம் பெறப் பகர்ந்த உபதேசம் (niththathuvam peRap pagarndha upadhEsam) : when He received the preaching from You that secured His eternity; நித்ததுவம்(niththathuvam) : eternity, என்றும் உளதாம் தன்மை;

சிறியேன் தனக்கும் உரை செயில் (siRiyEn thanakku murai seyil) : and if You condescend to preach the same ManthrA to this humble soul as well,

சற்றுங் குருத்துவம் குறையுமோ தான் (satRum guruththuvam kuRaiyumO thAn) : do You think Your status as a preceptor will be diminished in the least?

அயில் வாங்கி எற்றி உததியிற் கொக்கன்தனைப் பிளந்து சுரர் வாழ (ayil vAngi etri udhadhiyil kokkan thanaip piLandhu surar vAzha ) : When You took out Your spear and shot it to pierce through SUran who disguised himself in the sea as a mango tree and rescued the DEvAs.

அகிலாண்டமுற்று நொடியினிற் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல ( akilAnda mutru nodiyinil sutrum thiRal prachaNda muzhu neela) : It (the peacock) has the capacity to go around the entire universe in a minute; it has tremendous strength, fury and deep blue colour;

மயில் தாண்ட விட்டு (mayil thANda vittu) : and You drove this peacock in a gallop!

முதுகுலப் பொற் குன்று இடித்த சங்க்ரம விநோதா (mudhu kulap poR kundru idiththa sangrama vinOdhA) : You caned the golden crest of ancient Mount MEru with Your ChendAyutham (weapon in the shape of a cane), and to You war is simply a sport!

மதுராந்தகத்து வட (madhurAnthakaththu vada) : On the northern part of MadhurAnthagam,

திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே.(thiruch chitrambalath amarndha perumALE.) : there is ThiruchchitRambalam, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே