304. தாமரையின் மட்டு


ராகம் : தர்பாரி கானடாதாளம்: ஆதி
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பிலடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தியவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென்மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்தமறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்கநதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்றுவயலூரா
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த பெருமாளே.

Learn The Song




Raga Darbari Kanada (Janyam of 20th mela Natabhairavi) By Ragasurabhi

Arohanam: S R2 G2 M1 P D1 N2 S    Avarohanam: S D1 N2 P M1 P G2 M1 R2 S

Paraphrase

திருச்சிராப்பள்ளியில் உள்ள வயலூர் வந்த அருணகிரியார் கணபதியை துதித்து ‘கைத்தல நிறை கனி’ என்று துவங்கும் பாடலைப் பாடியிருக்கிறார். வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலைக்கு வரக் கூறிய குறிப்பு இந்த பாடலில் இருக்கிறது. வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம். முருகன் விராலிமலைத்தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது விராலிமலை தலபுராணம்.

தாமரையின் மட்டு வாசமலர் ஒத்த தாளிணை நினைப்பில் அடியேனை (thAmaraiyin mattu vAsamalar oththa thALiNai ) : I was without the thought of Your two holy feet which are like the most fragrant lotus flower; நினைப்பில்/நினைப்பு இல்லாத (ninaippil ) : without the thought/memory; மட்டு - தேன் (ஒப்பு: மட்டு ஊர் குழல் ... தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை);

தாதவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாருவென மெத்திய (dhAthavizh kadukkai nAga magizh kaRpa dhAru vena meththiya ) : (You invited me, saying) "The scent spreads from petals of kondRai (Indian laburnum), surapunnai and magizha trees, which abound like kaRpaga trees in Heaven, at தாதவிழ் கடுக்கை (dhAthavizh kadukkai) : pollen spilling kondrai flower, மகரந்தப் பொடி விரியும் கொன்றை, நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய (nAga magizh kaRpa dhAru ena meththiya ) : சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து

விராலி மாமலையில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து ( virAli mA malaiyil niRpa nee karudhi utru vA ena azhaiththu) : the great VirAli Malai; I shall wait for you there. You contemplate it in your mind and come to me".

என் மனதாசை மாசினை அறுத்து ( en manadhAsai mAsinai aRuththu) : By inviting me like this, You destroyed the evil desire in my mind and

ஞானமுது அளித்த வாரம் இனி நித்த மறவேனே (nyAnamudhu aLiththa vAram ini niththa maRavEnE) : gave me the Nectar of Knowledge; I will never forget that great incident. வாரம் (vAram) : a special or important time, event, ceremony, celebration, etc. that is favorable for attainment of a goal;

காமனை எரித்த தீ நயன நெற்றி (kAmanai eriththa thee nayana netri) : With the fire-eye on the forehead that burnt KAman (Love God),

காதிய சுவர்க்க நதி வேணி (kAdhiya suvarga nadhi vENi) : with tresses holding the rapidly flowing Akasa Ganga (river), வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய திருச் சடைமுடியையும், காதிய (kAdhiya) : destructive, எல்லாவற்றையும் அழிக்க வல்லதான ;

கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது (kAnil urai putril Adu paNi yitta kAdhu) : and with an ear wearing a snake that resides in the earthen dunes of the forest and dances with a raised hood,காட்டிலுள்ள புற்றில் படம் எடுத்து ஆடும் பாம்பைக் குழையாக அணிந்த திருக்காதுகளையும்

உடைய அப்பர் குருநாதா (udaiya appar gurunAthA) : is Your father (SivA) whose master You are!

சோமனொடு அருக்கன் மீன் உலவு மிக்க சோலை (sOmanodu arukkan meenulavu mikka sOlai ) : The trees are so tall that the sun, the moon and the stars all roam over the groves, அருக்கன் (arukkan) : sun; சோமன் (sOman) : moon;

புடை சுற்று வயலூரா ( pudai sutru vayalUrA) : encircling VayalUr, which is Your abode.

தன் வேலால் சக்தி தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடியபின் தாய் ஆதிநாயகியையும் தந்தை ஆதிநாதரையும் தேவர்கள் காண பூஜை செய்யும் புதல்வனாக விளங்குகிறார் இந்த முருகன். திருப்புக்கொளியூர் திருப்புகழான பக்குவ ஆசார பாட்டிலும் சக்தி தீர்த்தத்தை இவ்வாறு பாடுகிறார் "ஒத்த நிலா வீசு நித்தில நீராவி உற்பல ராஜீவ வயலூரா!" வயலூர், பெயருக்கேற்ப காவிரிக் கரையில் வயல்கள் சூழ்ந்த பசுமையுடன் விளங்குகிறது.

சூடிய தடக்கை வேல்கொடு (sUdiya thadakkai vElkodu viduththu) : You took out that spear from Your broad hand

விடுத்து சூர் தலை துணித்த பெருமாளே.(sUr thalai thuNiththa perumALE.) : and threw it to behead SUran, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே