Posts

பன்னிரு சைவம் மற்றும் முருகவேள் திருமுறைகள்

Image
சைவத் திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் தமிழ் சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள். இவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது இவற்றை தொகுத்தவர் திருநாரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இவர் மன்னனின் வேண்டுகோளின் பேரில் சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

ஆதிமூலமே என்று கஜேந்திரன் அலறிய பொழுது ....

To read the story in English, click Story of Gajendra and Lord Vishnu பாற்கடலால் சூழப்பட்ட பர்வதம் த்ரிகூடம். அம்மலையின் அடிவாரத்தில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற ஒரு அழகிய தோட்டம். அதன் அருகில் மிக அழகிய குளம். அங்கு கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் பெண் யானைகளுடனும் குட்டிகளுடனும் வசித்து வந்தது. முற்பிறவியில் அந்த யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது காண வந்த அகத்திய முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், தன்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்தலால் மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே அருளி, ஸ்ரீமந் நாராயணனே அவன் சாபத்தை தீர்ப்பார் என்று வரம் கொடுத்தார்.

மூல மந்திரம் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link moolamanthiram மூலமந்திரம் வேதத்தின் மூலமான மூலமந்திரமான சிவ பஞ்சாக்ஷரமோ, முருகனின் ஷடாக்ஷரத்தையோ ஓதல் இங்கு இலை நியமமாக செபிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை ஈவது இங்கு இலை பிறருக்கு, தேவை என்று வருபவர்க்குக் கொடுக்கும் பழக்கமும் இல்லை நேயம் இங்கிலை உன்னிடம் மாறாத அன்பு ( அல்லது எவரிடத்தும் அன்பு செய்யும் பாங்கு) என்னிடத்தில் இல்லை மோனம் இங்கு இலை மனம் அடங்கியதன் அடையாளமான மௌனம் (மனன சீலம்) என்னிடம் இல்லை ஞானம் இங்கு இலை (ஞானத்தின் வெளிப்பாடான மேற்சொன்ன எதுவும் இல்லை ஆதலால்) மெய் உணர்வு இல்லவே இல்லை என்பது வெளிப்படை

வசனமிகவேற்றி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vachana miga வசனம் மிக ஏற்றி வாக்கால் உச்சரித்து பல ஆவ்ருத்திகள் (எண்ணிக்கையில்) உரு ஏற்றி மறவாதே (அம்மந்திரத்தால் குறிக்கப்படும் இறைவடிவத்தை) மனதை விட்டு அகலாமல்தியானித்து மனது துயர் ஆற்றில் ஆற்றின் ஓட்டம்போலத் தொடர்ந்து வரும் துன்பங்களாலான இவ்வுலக நினைவுகளில் மனம் உழலாதே சென்று துன்பப்படாமல் (காத்து, அடக்கி) இசைபயில் புகழ்வாய்ந்த/ ப்ரசித்தமான ஷடாக்ஷரம் ('சரவண பவ' எனும்முருகனுக்கு உரிய) ஆறு எழுத்து அதாலே மந்திரத்தை மேற்சொன்ன முறையில் ஜபிப்பவர்க்கு இக பர சௌபாக்கியம் இவ்வுலக வாழ்க்கை இன்பங்களும் அதோடு கூட மோக்ஷத்தையும் அருள்வாயே கொடுத்து விடுகிறவன் அல்லவா நீ (நாம ஜபத்தின் பலனை, "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் / இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தினால் இடர் கெடலும் ஆம்/ அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார்.) பசு பதி உடல் பற்று/ உலகப்பற்று க்களால் கண...

சரக்கேறி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link sarakkeri சரக்கு ஏறி 96 மூலப்பொருள்கள், 36 கட்டு/மூட்டைகளாகக் கட்டி வைக்கப்படட்டுள்ள இத்தப்பதி வாழ் இந்த (பதி என்பது ஆன்மாவின் ஆன்மா) உயிர் குடி கொண்டுள்ள தொந்த குளிர்-வெப்பம், இன்பம்_-துன்பம்,மானம்-அவமானம் முதலிய இருமைகளுக்கு பரிவோடு ஐந்து அன்புற்றவர் போலத் தோன்றுகின்ற ஐந்து புலன்களாகிற சதிகாரர் புக்கு ஆன்மாவை முக்தி நெறியில் செல்லவிடாது தடுக்கும் வஞ்சனையாளர் புகுந்து கொண்டு உலைமேவு நெருப்பின் மீது இருப்பது போன்ற அழிவுக்கு வழியான இந்தச்செயல் மேவி புலன் இன்ப நுகர்ச்சிகளில்/உலகவியலில் ஈடுபட்டு சலித்தே மெத்த அங்குமிங்கும் ஓடி (சலித்தல் = அசைதல்) சமுசாரம்,பொன் உலக இன்பங்களையும், பொன் பொருளையும் சுகித்தே நன்றாக அனுபவித்து சுற்றத்தவரோடு மனைவி மக்கள் மற்றும் உறவினரோடு இன்பத்தழைத்தே நாளும் பெருகும் சந்தோஷத்தோடு

உடுக்கத் துகில் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link udukka thugil உடுக்க உடலை மூடவும், குளிர் வெம்மையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் துகில் வேணும் ஆடைகள் வேண்டும் நீள் பசி தொடர்ந்து துன்புறுத்தும் பசி நோயை அவிக்கைக்கு நீக்குவதற்கு அ(ன்)ன அன்னமும் பானம் வேணும் நீர், திரவ பதார்த்தங்களும் வேண்டும் நல் ஒளிக்கு நன்கு ப்ரகாசிப்பதற்கு/அழகாகத் தோன்றுவதற்கு புன (பின்) நல்லாடை வேணும் மீண்டும்(பின்னும்) நல்ல (பட்டு முதலிய) ஆடைகள்/ (ஏற்கெனவே ஆடை தேவை என்பது சொல்லியாயிற்று எனவே, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமல்ல, கொஞ்சம் பகட்டுக்கு “பின்னும்” பட்டு ஆடை வேண்டும் என்பதே புனலாடை, (வடமொழியில் புன: பின்னும்) வேண்டும் மெய் உறு நோயை உடம்புக்கு ஏற்படும் பல பிணிகளை ஒழிக்க இல்லாமல் செய்ய பரிகாரம் வேணும் மாற்று/ மருந்துகள் வேண்டும் உள் இருக்க அகத்தில் /வீட்டில் குடும்பத்தைப்பராமரிக்க சிறு நாரி வேணும் ஒரு இளம் பெண் தேவை ஒர் படுக்க தனி வீடு வேணும் அப்படி இல்லறத்தனாக வாழ தனிமை தேவை. எனவே ஒரு எனக்கென்று தனியான, தொந்தர...

விடுங்கை பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vidungai விடும் கைக்கு ஒத்த உயிர்களைச் சற்றும் இரக்கம் இன்றி விட்டுப் பறிக்கின்ற (அல்லது தன்னைச் செலுத்துகின்ற) கையைப் போன்ற வலிமையானதும் கருத்ததும் ஆன) கடா உடையோனிடம் அடங்கி  எருமைக் கடாவைத் தன் வாகனமாக உடைய எமனிடத்து அகப்பட்டு, கைச்சிறையான அநேகமும்     கை வசப்பட்ட பலவித செல்வங்களும்  விழுங்கப்பட்டு அறவே முற்றிலுமாக உணவு முதலியவற்றில் செலவழிந்து/ அல்லது பொது மகளிரால் கவரப்பட்டு அறல் ஓதியர் விழியாலே ஆற்றுப் படுகையில் காணப்படும் கரிய நெளிந்த கோடுகள் போல உள்ள கூந்தலை உடைய பெண்களின் கண்களால் (ஈர்க்கப்பட்டு) விரும்பத்தக்கன போகமும் மோகமும் விரும்பியவாறு அனுபவித்த இந்திரிய சுகங்களும்    விளம்பத்தக்கன பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஞானமும் மானமும் கல்வி, கேள்வியினால் அடைந்த அறிவும் குடிப்பிறப்பு முதலான பல பெருமைகளும், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமிதமும் எல்லாம்

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

55. விறல் மாரன்