Posts

Showing posts from February, 2012

கந்த புராணம் : பகுதி 15

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்தபுராணம் : பகுதி 11 கந்தபுராணம் : பகுதி 12 கந்த புராணம்: பகுதி 13 கந்த புராணம் : பகுதி 14 நாராயண அஸ்திரம் பலனின்மை : அதிர்ச்சியில் சிங்கமுகன் ஏழு கடலும் திரண்டு வந்தது போன்ற ஆரவாரத்துடன் போர்களத்துக்கு வந்தான் சிங்கமுகன். தன் மகன் அதிசூரனையும், அண்ணன் தாராசுரனையும், பானுகோபன் உள்பட சூரனின் எல்லா மகன்களையும் கொன்றது வீரபாகு என கடும் கோபத்தில் அவனோடு மோதினான். கடும் மோதலுக்கு பிறகு சிங்கமுகன் நாராயண அஸ்திரத்தை எடுத்து வீசினான். அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நாராயண அஸ்திரம் ஆயுதங்கள் ஏந்திய வீரபாகுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் வீழ்ந்தது. சாதாரணமாக அதை ஏவினால் களத்தில் ஆயுதத்தோடு நிற்பவர்களை அழித்து, ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு பரம்பொருளை தியானிப்பவர்களை அப்படியே விட்டு சென்று விடும். சிவனுக்கும் முருகனுக்கும் முன்னால் எந்த அஸ்திரமும் வேலை செய்யாது என சிங்கமுகனுக்கு தெரிவித்தார் பிரம்மன். கடைசியாக, வீரபாகுவை தன் அண்ணனிடம் சேர்க்கும் எண்ணத்துடன் தன் மாய அஸ்திரத்தை வீசினான், ஆம் பானுகோபன் தொடுத்த அ...

கந்தபுராணம் : பகுதி 14

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்தபுராணம் : பகுதி 11 கந்தபுராணம் : பகுதி 12 கந்த புராணம்: பகுதி 13 வீரபாகு பானுகோபன் யுத்தம் எல்லாம் அறிந்த முருகப்பெருமான் வீரபாகுவிடம் பானுகோபன் அவனை மயக்கிப் பிடிக்கும் மோகனாஸ்திரம் மூலம் தாக்க வருவதாக கூறினார். இருப்பினும் தன்னிடம் அதையும் விட சக்தி வாய்ந்த வேலாயுதம் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் எனக்கூறி வாழ்த்தி வழியனுப்பினார். சேனைகள் அணிவகுத்துச் சென்றன. பானுகோபனும், வீரபாகுவும் பல்வேறு அஸ்திரங்களுடன் போராடினர். வீரபாகு சாதாரணப்பட்டவன் அல்ல என்பது பானுகோபனுக்கு தெரியும். எனவே பாசுபதாஸ்திரத்தை எய்தான். அதற்கு எதிராக வீரபாகு எய்த அஸ்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது ஏற்பட்ட வெப்பத்தின் உக்கிரத்தில் கடல் வற்றியது; சப்தம் அகில உலகத்தையும் நடுங்கச் செய்தது. அந்த அஸ்திரங்கள் ஒன்றையொன்று அழிக்க முடியாத காரணத்தால் எய்தவர்களிடமே வந்து விட்டன. வீரபாகுவை எந்த வகையிலும் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பானுகோபன், வேறு வழியே இல்லாமல் வான்வெளியில் தன்னை மறைத்து நின்றான். அங்கிருந்து பாட்டி கொடுத்த மோகனாஸ்திரத்தை ...

கந்த புராணம் : பகுதி 13

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்தபுராணம் : பகுதி 11 கந்த புராணம் : பகுதி 12 போர்க்களத்தில் சூரபத்மன் வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவனது வரவால் புது உற்சாகத்துடன் அசுரர்கள் முருகனின் படையினர் மீது பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கி அவர்களை மயக்கமடைய செய்தன. நவவீரர்களான வீரமார்த்தாண்டன், வீரராட்சஷன், வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர். கலங்காத உள்ளம் படைத்த வீரபாகு சூரபத்மன் முன்னால் வந்து நின்றான். பத்மாசுரன் வீரபாகுவை எள்ளி நகையாடி, முருகனை தன்னிடம் சரணடைய கூறச் சொன்னான். வீரபாகு 'முடிந்தால் தோற்கடித்துப் பார்,' என்று சூரனுக்கு சவால் விட்டு யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்ற பல சக்தி மிக்க அஸ்திரங்களை எய்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான்.

கந்த புராணம் : பகுதி 12

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்த புராணம் : பகுதி 11 பானுகோபன் யுத்தத்திலிருந்து பின்வாங்கலும் சபதமும் பானுகோபன் மாயயால வித்தைகள் செய்து போர் செய்யும் வல்லமை படைத்தவன். வீரபாகுவும் அவனுக்கு சற்றும் சளைத்தவன் அல்ல. இருவரும் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று மீளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி எய்தாலும், அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே வீரபாகுவும், பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர். மயங்கிக் கிடந்த அவர்கள் மீது பாணங்களை எய்தான் பானுகோபன். ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். கருணைக்கடலான முருகப்பெருமான் தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை பானுகோபன் மீது எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த பூதப்படைகள் எழுந்து ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். வீரபாகு தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்து பானுகோபன் மீது எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை பான...

கந்தபுராணம் : 11

கந்தபுராணம் : பகுதி 7 A கந்தபுராணம் : பகுதி 7 B கந்தபுராணம் : பகுதி 8 A கந்தபுராணம் : பகுதி 8 B கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 சிங்கமுகன் சமாதானத்தை அறிவுறுத்துதல் பிரம்மா திருசெந்தூரில் முருகன் அருகிலேயே அமர்ந்ததை கேள்விப்பட்ட சூரபத்மன் வீரபாகுவால் சிதைக்கப்பட்ட வீரமகேந்திரபுரியை நகரத்தை மற்றொரு அண்டத்தின் பிரம்மாவின் உதவியோடு மீண்டும் கட்டினான். இதன் பிறகு யாரை போருக்கு அனுப்புவதென்ற ஆலோசனை நடந்தது. சூரனின் புதல்வர்களான இரண்யன், பானுகோபன் போருக்கு ஆர்வமாக முன்வந்தார்கள். அப்போது சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் அண்ணனை எச்சரித்தான். சிங்கமுகன் அண்ணன் சூரபத்மனிடம் மிகுந்த பாசம் கொண்டவன். முன்னொரு சமயம், சூரபத்மன் சிவ பெருமான் அருளைக் கோரி செய்த கடும் தவம் பயனின்றி போனதால் யாகத் தீயில் விழுந்து உயிர் விட்ட பொழுது, கதறிக் கொண்டே தன் உயிரையும் தீயில் விழுந்து விட துணிந்தவன். இந்த சகோதர பாசத்தை கண்ட ஈஸ்வரன் முதியவர் வடிவில் வந்து சிங்கமுகனை தடுத்தது மட்டும் இல்லாமல் சூரபத்மனையும் உயிர்ப்பித்து அவர்கள் கேட்ட வரத்தையும் அளித்தார். அதே சகோதரன் - சூரபத்மன் முற...

கந்தபுராணம் : 10

கந்தபுராணம் : பகுதி 7 A கந்தபுராணம் : பகுதி 7B கந்தபுராணம் : பகுதி 8 A கந்தபுராணம் : பகுதி 8 B வீரமகேந்திரபட்டணத்திற்கு வீரபாகு புறப்பாடு ராமாயணத்தின் அனுமானைப் போல், கந்தபுராணத்தின் வீரபாகு பறக்கும் தன்மை கொண்டவன். முருகனின் உத்தரவை கேட்ட மாத்திரத்தில், அவரை மனதார வணங்கி, விஸ்வரூபம் எடுத்தான். விண்ணில் பறந்தான். கந்தமாதன மலையில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கிய வேகத்தில் அந்த மலை பூமிக்குள் புதைந்து விட்டது. அந்த மலையில் தான் இறந்து போன தாரகாசுரனின் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் பூமியில் அழுந்தி இறந்து விட்டனர். மீண்டும் அவன் பறந்து போய் இலங்கை பட்டணத்தை அடைந்தான். அங்கே யாளிமுகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அந்த அசுரனின் படைத்தளபதி வீரசிங்கன் பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். 'டேய்! நீ யார் ? எங்கே போகிறாய்?' என்று பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு, முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்...

கந்த புராணம் : 9

கந்தபுராணம் : பகுதி 7 A கந்தபுராணம் : பகுதி 7 B கந்தபுராணம் : பகுதி 8 A கந்தபுராணம் : பகுதி 8 B அசுரேந்திரன் ஓலமும் சூரபத்மன் கொந்தளிப்பும் அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்து விக்கி விக்கி அழுதான். விசும்பலுக்கு நடுவே ஒரு சிறுவன் தந்தையை கொன்றதையும் தன் தாய் கணவனோடு உடன்கட்டை ஏறினதையும் கூறினான். சிறிது நேரம் கழித்து தான் நிலைமையை ஓரளவு புரிந்து கொண்ட சூரபத்மன் அதிர்ச்சியும் சோகமும் ஒன்று சேர புலம்ப தொடங்கினான். 'யாராலும் நம் வம்சத்தை அழிக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தேனே! ஐயோ! அசுரகுலத்தின் ஒளி விளக்கே! அந்த முருகன் யாருடைய மகனாயிருந்தாலும் அவனைக் கொன்று கூறு போடுகிறேன்,' என ஆர்ப்பரித்தான். சேதியறிந்து சூரபத்மனின் மனைவியர் ஓடிவந்தனர். அசுரேந்திரனுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் வடித்தனர். சூரபத்மனின் இன்னொரு தம்பி சிங்கமுகன் தகவலறிந்து வந்தான். சோகத்தில் சுருண்டு உணர்வற்று கிடந்தான். தாரகன் மீது அன்பு கொண்ட அசுர உள்ளங்கள் ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பி சோகமும் ஆத்திரமும் கொப்பளிக்க படையெடுப்புக்குத் தயாராயினர். அமோகன...

கந்த புராணம் : பகுதி 8 B

கந்தபுராணம் : பகுதி 6 A கந்தபுராணம் : பகுதி 6 B கந்த புராணம் : பகுதி 7 A கந்த புராணம் 7B கந்த புராணம் பகுதி 8 A முருகன் கிரவுஞ்ச மலைக்கு வருகை சிதறி ஓடிய படையைக் கண்ட நாரதர் உடனடியாக முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தார். 'முருகா, நீ இருந்தும் இப்படி நடக்கலாமா தாரகன் உன் தம்பி வீரபாகு வீரகேசரி ஆகியோரை கிரவுஞ்சனிடம் ஒப்படைத்து விட்டான். இப்போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. உன்னையே எந்நாளும் வணங்கும் உன் தொண்டர்களைக் கைவிடலாமா?' என்றார். முருகன் ஆவேசத்துடன் வாயுவை தேரோட்ட அழைத்து கிரவுஞ்ச மலைக்கு சென்றார். கிரவுஞ்சமலை அடிவாரத்தில் அசுரப்படைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன. ஒளிந்திருந்த தேவர் படை முருகனின் தேரைக் கண்டதும் ஆரவாரம் செய்து வெளிப்பட்டனர். தாரகன் ஒழிந்தான் என கூச்சலிட்டனர். தேவர் திடீரென வெளிப்பட்டதையும் சூரியனையும் மிஞ்சும் ஒளியையும் இதுவரை கண்டிராத சுந்தர வதனமும் கொண்ட இளைஞன் ஒருவன் தேரில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை தாரகனும் கவனித்தான். முருகனை கண்டு மெய்மறந்த தாரகன் அந்த இளைஞனைப் பார்த்ததும் அவன் மனதில் தானாகவே ஒரு ம...

கந்த புராணம் : பகுதி 8 A

கந்தபுராணம் : பகுதி 6 A கந்தபுராணம் : பகுதி 6 B கந்த புராணம் : பகுதி 7 A கந்த புராணம் 7B தேவியிடம் முருகன் பெற்ற வேல் சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான். தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் முருகனை அழைத்து, சூரர்களை வென்று தேவர்களை காப்பாய் என்று ஆணையிட்டார். அதன் பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். முன்னர் பார்வதி தேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்களிலிருந்து வந்த நவசக்திகளின் வயிற்றில் தோன்றிய வீரவாகுதேவர் முதலான லக்ஷத்து ஒன்பது வீரர்கள் முருகனின் படைவீரர்களாயினர். பிறகு பார்வதியும் தன் மகனுக்கு பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தை அளித்தாள். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை சிக்கலில் இன்றைக்கும் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். கிரௌஞ்சகிரி மீது படையெடுப்பு அம்மையப்பனிடம் வேல் வாங்கிய மு...

கந்த புராணம் : பகுதி 7B

கந்தபுராணம் : பகுதி 6 A கந்தபுராணம் : பகுதி 6 B கந்த புராணம் : பகுதி 7 A முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தது ஒரு சமயம் தேவர்களுடன் சிவனைக் காண வந்த பிரம்மன், அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க, தான் மட்டும் இவன் சிறுபிள்ளை தானே என்ற மிதப்பில் குமரனை வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். தாமும் சிவமும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் ஒன்றே என்பதை உலகிற்கும் பிரம்மனுக்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து ‘நீவிர் செய்யும் தொழில் யாது?’ என்றார். 'படைக்கும் தொழில்,' என்றவரிடம் 'வேதங்கள் தெரியுமா உங்களுக்கு?' என்று கேட்க, பிரம்மன் ரிக் வேதம் பற்றி விளக்கும் பொருட்டு ஓம் என்று கூற ஆரம்பித்தார். 'ஓம் என்பதன் பொருள் என்ன?' என்றான் குழந்தை வேலன். பிரமன் தடுமாறுவதைக் கண்டு, 'இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது' எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார். திருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்...

கந்த புராணம் : பகுதி 7 A

கந்தபுராணம் : பகுதி 5A கந்த புராணம் : பகுதி 5B கந்தபுராணம் : பகுதி 6 A கந்தபுராணம் : பகுதி 6 B பாலமுருகனின் குறும்புகள் கயிலையில் சிவன் பார்வதி தம்பதியினருக்கு தங்கள் இரு குழந்தைகளுடன் இனிதே பொழுது கழிகிறது. அண்ணனை போல தம்பி முருகனும் படு சுட்டி. ஆறு தலைகளிலும் அணிந்திருந்த கிரீடங்களின் ஒளியை தேவர்களின் கண்கள் கூசும்படி அங்குமிங்கும் திருப்புவது என்ன; தாயின் மடியிலிருந்து தந்தையின் மடிக்கு தாவி அவருடைய உடுக்கையை எடுத்து ஓசை முழங்க ஒலிப்பதென்ன; அவர் கையில் ஏந்தியுள்ள கனலை அவர் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கொண்டே அணைப்பது என்ன! தலையில் அணிந்துள்ள இளம்பிறையைக் கையாலெடுத்து அவருடைய கழுத்தில் நெளிகின்ற பாம்பின் வாயிலிட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று ஒரு பரிசோதனை. பின் அவர் கையில் ஏந்தியுள்ள மானுக்கு, சடையினின்று அறுகம்புல்லை எடுத்து உண்ணக் கொடுக்கலாமே என்று ஒரு குறும்புத்தனமான எண்ணம். பிறகு அதை செயல் படுத்துவதுமாய் சரியான துறுதுறுப்பு. ஆமாம், தாயை மட்டும் இத்தகைய சேஷ்டை செய்யாமல் விடலாமா? அவளுடைய கொண்டையிலிருக்கும் பிறைச்சந்திரன் போன்ற அணிகலனை எடுத்து தந்தையின் சடையி...

கந்த புராணம் : பகுதி 6 B

கந்த புராணம் : பகுதி 2 A கந்த புராணம் : பகுதி 2 B கந்த புராணம் பகுதி 3 கந்தபுராணம் : பகுதி 4 கந்தபுராணம் : பகுதி 5 கந்த புராணம் : பகுதி 6 A நவவீரர்கள் தோற்றம் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினாள். அவள் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியராக நவகாளிகள் தோன்றினர். அவர்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வரும்படி சிவன் அவர்களை பணித்தார். அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்க்க. அவர்கள் வயிற்றில் கர்ப்பம் தரித்தது. கோபத்துடன் பார்வதி 'பெண்களே ! நீங்கள் என் மணாளனை மயக்கும் விழிகளால் பார்த்து அவரது மனதைக் கெடுத்து கர்பமானீர்கள். இந்த கர்ப்பம் உங்கள் வயிற்றை விட்டு வெளியேற நீண்டகாலம் ஆகும். இதை சுமந்த படியே வாழ்ந்து வாருங்கள்', என சாபம் கொடுத்தாள். பத்து மாதம் கடந்தும் நவகாளிகளுக்கு பிரசவிக்கவில்லை. கர்பத்தின் பாரம் தாங்காமல் அவர்களுக்கு வியர்வை கொட்ட...

கந்த புராணம் : பகுதி 6 A

கந்த புராணம் : பகுதி 2 A கந்த புராணம் : பகுதி 2 B கந்த புராணம் பகுதி 3 கந்தபுராணம் : பகுதி 4 கந்தபுராணம் : பகுதி 5A கந்த புராணம் : பகுதி 5 B தேவர்கள் வேண்டுகோள் சிவன் பார்வதி மணம் நடந்தேறிய பின்னும் வாக்களித்தபடி சிவன் மைந்தன் தோன்றவில்லை. கவலையுற்ற தேவர்கள் ஒன்று சேர்ந்து பரமனை மீண்டும் அணுகினர். "வேதங்களையும் கடந்து நின்ற விமலனே! நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்! நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும்," என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்ந்தது திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும் ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி வேதமும் கடந்து நின்ற விமல ஓர் குமரன் தன்னை நீ தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்.

கந்த புராணம் : பகுதி 5B

கந்த புராணம் : பகுதி 1 B கந்த புராணம் : பகுதி 2 A கந்த புராணம் : பகுதி 2 B கந்த புராணம் பகுதி 3 கந்தபுராணம் : பகுதி 4 பார்வதி திருமண ஏற்பாடு கைலையை அடைந்த ஈசன் சப்த ரிஷிகளை நினைத்தார். அவர்கள் ஈசனின் எதிரில் வந்து தமக்குரிய ஆணை என்ன என்று வினவ பரமேசுவரன், 'பர்வதராஜன் மகள் பார்வதியை மணக்க விரும்புகிறேன். ஆதிபராசக்தியான அவளே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியாவாள். அவள் என்னையே கணவனாக அடைய தவம் செய்து வருகிறாள். நீங்கள் உங்கள் பத்தினிகளுடன் சென்று திருமணம் பேசி முடித்து வரவேண்டும். மற்றும் அவளுடைய தாய் மேனையையும் மனப்பூர்வமாக சம்மதிக்கச் செய்வீராக' என்று கட்டளை இட்டார். சப்தரிஷிகளும் ஈசனை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு இமயத்தை அடைந்தனர். இமவான் இச்செய்தி அறிந்து வெளிப்போந்து அவர்களை வரவேற்று உபசரித்தான். அவர்கள் பர்வதராஜனிடம் உன் மகள் பார்வதியை எம்பெருமானுக்கு மணம் பேச வந்துள்ளோம். என்று தமது விசயத்தின் காரணத்தைக் கூறினார். உடனே இமவான் தனது சம்மதத்தைத் தெரிவித்திட, இமவானின் மனைவி மேனை ஓர் ஐயப்பாட்டை எழுப்பினாள். 'ஈசன் தாக்ஷாயணியை மணந்து, பின்னர் மாமனாராக...

கந்த புராணம் : பகுதி 5 A

கந்த புராணம் : பகுதி 1 A கந்த புராணம் : பகுதி 1 B கந்த புராணம் : பகுதி 2 A கந்த புராணம் : பகுதி 2 B கந்த புராணம் பகுதி 3 கந்தபுராணம் : பகுதி 4 சிவனின் மௌன உபதேசமும் தவமும் திருக்கைலாயத்தில் சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் மோன நிலையில் இருந்து சனகாதி முனிவர்களுக்குச் சின் முத்திரையால் சிவஞானம் அருளினார். சனகாதி முனிவர்கள் நால்வரும் பிரம்மாவின் மானச புத்திரர்கள். பிரம்மாவால் பிரஜா உற்பத்திக்காக படைக்கப்பட்டாலும், அவர்களுக்கு நித்தியமான பரம்பொருளை அடைவதிலேயே நாட்டம் கொண்டதனால் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய வாழ்க்கையிலேயே ஈடுபடுவதாக தீர்மானித்தனர். தியானத்தில் ஈடுபடுவதற்கு முன், முற்றும் உணர்ந்த சிவ பெருமான் முனிவர்களுக்கு அஷ்டாங்க யோகத்தையும், தியானத்தையும், பரமாத்மாவோடு சேரும் மோட்ச நிலையை போதிக்கும் வேளையில் கயிலாயத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் மேற்கு நுழைவாயில் வழியே மன்மதனை மட்டும் அனுமதிக்கவும் கட்டளை இட்டார்.

கந்த புராணம் : பகுதி 4

கந்த புராணம் பகுதி 2 B கந்த புராணம் பகுதி 3 தேவர்கள் முறையீடு அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், மகாவிஷ்ணுவின் தலைமையில் கூடி, சூரர்கள் இந்தளவுக்கு வளரக் காரணமாக இருந்த சிவபெருமானால் தான் அவர்களை அழிக்கவும் முடியும். என்று நிச்சயித்து எல்லாருமாக கைலாயம் சென்றனர். நந்திதேவரின் அனுமதி பெற்று, சிவபெருமானைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை வைத்தனர். அசுரர்களிடம் தங்கள் பொருட்களை இழந்ததோடு, இந்திரனும் அவன் மனைவியான இந்திராணியும் பயந்து தலைமறைவாக இருப்பதையும், இந்திரன் மகன் ஜெயந்தன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும், அந்தணர்கள் தங்கள் பணி சரிவர செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பதையும் சொன்னார்கள்.

கந்த புராணம் : 3

கந்த புராணம் பகுதி 2A கந்த புராணம் 2 B சூரனின் திக்விஜயம்: தேவர்கள் சேவகம் சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன. தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். தேவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க அசுரர்கள் முதலில் சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை. குபேரன் பொன்னோடும் மணியோடும் சூரபத்மனைச் சரணடைந்தான்.

கந்த புராணம் : பகுதி 2 B

மாயை காரணமாகத் தோன்றிய நான்கு அசுரர்களும் ஆணவ மிகுதியால் இறுமாப்புடன் திரிந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், ‘குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறுங்கள்,’ என்று உபதேசம் செய்தார். அதற்கு மாறாக மாயை, 'இந்த ஜகத்தையே வென்று, தேவலோகமும் மற்ற எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டுமென்ற நோக்கத்துடன் சிவனை நோக்கி தவம் இருங்கள்' என்று கூறி ஆசீர்வதித்தாள். அசுரர்கள் பெற்ற வரம், தேவர்கள் துயரம் இவர்கள் கடும் தவத்தை மெச்சி பரமன் தரிசனம் கொடுத்தார். அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், 'கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும்,...

நால்வர் வரலாறு : 4. திருமாணிக்கவாசகர்

By Mrs.Shyamala, Pune சமயக் குரவர்கள் நால்வரில் நான்காவதாக திருமாணிக்கவாசகர். திருவாதவூரில் பிறந்தவர். இயற் பெயர் திருவாதவூரடியான். தந்தை சம்புபாத சரிதர், தாய் சிவஞானபதி. பாண்டிய ராஜன் வரகுண பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார். சிவபக்தர். தமிழ் புலமை மிக்கவர். இவர் பாடிய பாடல்களுக்கு திருவாசகம் எனப் பெயர். தென்னவன் பிரமராயர் எனவும் அழைக்கப்பட்டார். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசித்துக்கும் உருகார் என்பது அறிஞர்கள் வாக்கு. ஒரு முறை மன்னர் தரமான குதிரைகள் வந்திருப்பதை அறிந்து அவற்றை வாங்க இவரை பொன்னும் பொருளும் கொடுத்து சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தார். வழியில் திருப்பெருந்துறை என்ற சிவஸ்தலம். மரத்தடியில் ஒரு முதியவர். அவர் பாதத்தை தொட்டவுடனேயே அவர் சிவபெருமானே என்பது இவருக்குப் புரிந்தது. கண்ணீர் சிந்த பாடத் தொடங்கினார். இறைவன். "உன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு மாணிக்கம்" என்று சொல்ல, அன்றிலிருந்து இவர் மாணிக்கவாசகர் என அழைக்கப்பட்டார்.

நால்வர் வரலாறு : 3. சுந்தரமூர்த்தி நாயனார்

By Mrs Shyamala, Pune சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர், 63 நாயன்மார்களில் பிரதானமானவர், 8ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தர மூர்த்தி நாயனார். இவரை செல்லமாக தம்பிரான் தோழர் என்று அழைப்பார்கள். சிவ பக்தரான இவர் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் அல்லது திருப்பாட்டு என்பார்கள். இவரது தேவார பாட்டுகள் 7வது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் 38,000. ஆனால் 100 பதிகங்களே கிடைத்துள்ளன. பாடல்களை பண்ணோடு சேர்த்து எழுதியுள்ளார். செந்துருத்தி பண்ணை உபயோகப்படுத்தியவர் இவர் ஒருவரே.

நால்வர் வரலாறு : 2. திருநாவுக்கரசர்

By Mrs Shyamala, Pune திருநாவுக்கரசு நாயனார் 7ம் நூற்றாண்டில் பிறந்தவர். 63 நாயன்மார்களில் ஒருவர், தேவாரம் பாடியவர்களில் இரண்டாமவர். இவர் கடலூர் மாவட்டம் திருவாமூரில் வேளாண் குலத்தில் பிறந்தவர். தந்தை புகழனார், தாய் மாதினி. பெற்றோர் வைத்த பெயர் மருணீக்கியார். இளமையில் சமணத்துக்கு மாறினார். தலைவர் பதவி ஏற்றார். தமக்கை திலகவதியாருக்கு வருத்தம். சிவபெருமானை துதித்து தம்பி சைவத்தை துறந்தது பற்றி முறையிட்டார். சிவனார் தருமசேனருக்கு சூலை நோய் அளித்தார். எந்த சமண வைத்தியராலும் குணப்படுத்த முடியவில்லை. பின் தமக்கையின் வேண்டுகோளின்படி " கூற்றாயினவாறு விலக்கிலீர்" என இறைவன் மீது பதிகம் பாடினார். நோய் நீங்கியது. மீண்டும் சைவத்துக்கு மாறினார்.

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே