Posts

Showing posts from June, 2015

149. ஆதிமகமாயி

ராகம் : ஹம்சானந்தி அங்க தாளம் (2 + 2 + 1½) ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து போகமுற வேவி ரும்பு மடியேனை

148. பத்தியால் யான்

ராகம் : ஆனந்த பைரவி தாளம் : ஆதி (எடுப்பு 3/4 இடம்) பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே

147. சுற்றகபடோடு

ராகம் : மோகனம் சதுஸ்ர த்ருவம் கண்ட நடை சுற்றகப டோடுபல சூதுவினை யானபல கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு துயர்மேவித் துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல் சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில் தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர் சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை விளையாடித் தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல் தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத மருள்வாயே

146. ஈனமிகுத்துள பிறவி

ராகம் : நாட்டகுறிஞ்சி அங்க தாளம் (8½) 3 + 2½ + 3 ஈனமிகுத் துளபிறவி யணுகாதே யானுமுனக் கடிமையென வகையாக ஞானஅருட் டனையருளி வினைதீர நாணமகற் றியகருணை புரிவாயே தானதவத் தினின்மிகுதி பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ முருகோனே ஆனதிருப் பதிகமரு ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.

145. வெற்றி செயவுற்ற

Image
ராகம் : ஹம்சத்வனி தாளம் : கண்டத்ருவம்( /5/5 0 /5 ) வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன் விட்டகணை பட்ட விசையாலே வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி ரித்தொளிப ரப்பு மதியாலே பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை பட்டதிகி ரிக்கு மழியாதே பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர் பச்சைமயி லுற்று வரவேணும்

144. வினைக்கினமாகும்

ராகம் : ஆரபி தாளம் : 1½ + 1 + 1½ வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம் பினுக்கெதி ராகும் விழிமாதர் மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ் சமத்திடை போய்வெந் துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங் கருக்குழி தோறுங் கவிழாதே கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங் கழற்புக ழோதுங் கலைதாராய்

143. வரிக்கலையின்

ராகம் : காபி அங்க தாளம் 2 + 2 + 1½ வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை மயக்கியிடு மடவார்கள் மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி வயிற்றிலெரி மிகமூள அதனாலே ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிகநாடி யவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே

142. வட்டவாட்டன

ராகம் : ரஞ்சனி தாளம் : மிஸ்ரசாபு வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை மக்கள்தாய்க் கிழவி பதிநாடு வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள் மற்றகூட் டமறி வயலாக முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை முட்டர்பூட் டியெனை யழையாமுன் முத்திவீட் டணுக முத்தராக் கசுரு திக்குராக் கொளிரு கழல்தாராய்

The Laws of Karma and The End Days of Lord Krishna

In the Thiruppugazh Eluppunaadi , we have the lines that refer to an important event in the life of Krishna: உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் மருகோனே (ulakkai raavi nadukkadal vittavan marugonE). The Krishnaavatara shows the essence of Karma yoga as a path to attain salvation, and Krishna exemplifies this by living His life as a Karma Yogi. He accepts the consequences of Karma with equanimity and dies at the hands of a hunter. Yes, the laws of Karma are universal and applies to gods as well. According to Mahabharata, the Kurukshetra war resulted in the death of all the hundred sons of Gandhari. On the night before Duryodhana's death, Lord Krishna visits Gandhari to offer his condolences. Gandhari feels that Krishna knowingly did not put an end to the war, and in a fit of rage and sorrow, she curses that Krishna, along with everyone else from the Yadu dynasty, would perish after 36 years. Krishna himself knew and wanted this to happen as he felt that the Yadavas had become very haugh...

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே