151. எதிரிலாத பத்தி


ராகம் : சக்ரவாஹம் தாளம்: திஸ்ரரூபகம் (7½)
எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தாள்நி னைப்பையிருபோதும்
இதய வாரி திக்குளுறவாகி
எனது ளேசி றக்கஅருள்வாயே
கதிர காம வெற்பிலுறைவோனே
கனக மேரு வொத்தபுயவீரா
மதுர வாணி யுற்றகழலோனே
வழுதி கூனி மிர்த்தபெருமாளே

Learn The Song



Learn the Ragam Chakravaham (16th mela)

Arohanam: S R1 G3 M1 P D2 N2 S     Avarohanam: S N2 D2 P M1 G3 R1 S

Paraphrase

எதிர் இலாத பத்தி தனை மேவி (edhirilAdha baththi thanai mEvi) : Filled with incomparable devotion to You,

இனிய தாள் நினைப்பை இருபோதும் (iniya thAL ninaippai iru pOdhum) : and meditating only on Your two lotus feet day and night,

இதய வாரிதிக்குள் உறவாகி (idhaya vAridhikkuL uRavAgi) : so that this thought merges in the ocean of my heart, and இருதயமாகிய கடலின் உள் கருத்தை பதிய வைத்து; வாரிதி - கடல். ஆழமான இதயமாகிய கடலுள் இறைவன் திருவடியாகிய மந்திரகிரி சேர்ந்தால் திருவருளமுதம் தோன்றும்.

எனது உளே சிறக்க அருள்வாயே (enadhuLE siRakka aruLvAyE) : and thrives within myself by Your grace!

கதிர காம வெற்பில் உறைவோனே (kadhira kAma veRpil uRaivOnE) : You reside at the mount of KadhirgAmam!

கனக மேரு ஒத்த புய வீரா (kanaka mEru oththa buyaveerA) : Your valorous shoulders are like the golden peaks of Mount MEru!

மதுர வாணி உற்ற கழலோனே (madhura vANi utra kazhalOnE) : Your anklets have melodious sounds! / Your feet are worshipped by Saraswathi whose speech is very sweet. சரஸ்வதி தேவியின் சொற்களின் இனிய நாதத்தை உடைய கழலை அணிந்த வீரரே! / இனிய மொழியையுடைய கலைமகள் வந்து போற்றும் திருவடியை உடையவரே! (இனிய நாத சிலம்பு புலம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி (கமல மாதுடன்); வாணி (vANi) : Saraswathi; வாணி உற்ற (vANi utra) : with musical sounds; இனிய நாதத்தை உடைய;

வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.( vazhudhi kUn nimirththa perumALE.) : You (as ThirugnAna Sambandhar) straightened the hunch-back of PANdiyan Vazhuthi, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே