276. சதுரத்தரை
Learn The Song
Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S G3 M1 P N3 D2 N3 S Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 SParaphrase
In the first four stanzas, the poet resolves that he will never forget the Lord's feet, which cool the six chakras in the body, starting from the muladhara chakra, and graced him with the blissful vision of the great Cosmic Dance of Shiva; His twelve mountain-like strong shoulders; six faces; and the special glance filled with grace that caused him to sing devotional songs in chaste Tamil.இந்த அருமையான பாடலில் முதல் பாதியில் அறுமுகப் பரமன் தனக்கு பாத தரிசனம் தந்ததையும், நயன தீக்ஷை (பரகதி பெற்றிட நோக்கிய பார்வை) அருளியதையும் மறவாது பாடுகிறார்.
சதுர தரை நோக்கிய பூவொடு (chathurath tharai nOkkiya pUvodu) : Beginning from the Muladhara center with the lotus having four petals and facing the four corners of the ground; நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி ; சதுர (chatura) : four (corner); சதுரத்தரை = மூலா நிலம்;
Compare naalirandithazhaale koliya and Asai naalu
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய (kadhir oththida Akkiya gOLagai thazhaiya) : and cooling the six chakras, made up of the three major effulgences (namely, the Sun, the Moon and the Fire), முச்சுடர்களால் (சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) குளிர்ந்து தழைய
கதிர் (kathir) : rays, generally refers to the three luminaries (முச்சுடர்) : sun, moon and the fire. இரவில் ஒளி தருவதால், கதிரவன், திங்கள், தீ ஆகிய மூன்றும் முச்சுடர் எனப்பட்டன, கோளகை (kOLagai) : the six chakras or the energy channels in the subtle body, மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்);
சிவ பாக்கிய நாடக அநுபூதி சரணக் கழல் காட்டியே (siva bAkkiya nAdaga anubUthi charaNak kazhal katti) : Your lotus feet of refuge which made me witness the great cosmic dance and proffered me the ultimate bliss of SivA; சிவ பாக்கிய நாடக அநுபூதி (siva bAkkiya nAdaga anubUthi) : சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு;
என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய (en ANava malam atrida vAttiya) : and also wiped out totally my two blemishes, namely, arrogance and possessiveness;
ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் (ARiru sayilak kulam eettiya thOLodu mugam ARum) : by Your twelve mountain-like solid shoulders, six holy faces,
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் (kadhir sutruga nOkkiya pAdhamu ) : and the feet spreading light in all directions and glances favorably at the devotees, ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும்,
மயிலின் புறம் நோக்கியனாம் என (mayiliR puRa nOkkiyanAm ena) : mounting the peacock, looking around everywhere as the saviour, மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக
கருணைக் கடல் காட்டிய கோலமும் (karuNaik kadal kAttiya kOlamum) : Your majestic stature like the sea of compassion, கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும்,
அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே (adiyEnai kanakaththinu nOkki inidhAy adiyavar muththamizhAR pugavE ) : Your glance more endearing and precious than gold, making me sing Your glory in chaste Tamil like Your devotees, அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும்,
பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே (para gathi petrida nOkkiya pArvaiyu maRavEnE) : and Your choicest gaze that guided me towards my salvation – I can never foget these! (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன்
சிதறத் தரை நால் திசை பூதர(ம்) நெரிய (sidhaRath tharai nAtRisai bUdhara neriya) : The earth trembled and the mountains in the four directions shuddered and were smashed to pieces; பூதரம் (bootharam) : mountain;
பறை மூர்க்கர்கள் மா முடி சிதற (paRai mUrkkargaL mA mudi sidhaRa) : the large heads of the evil demons who came to the war beating the drums were shattered;
கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே (kadalArp puRavE ayil viduvOnE) : and the seas were stirred up into a roar when You wielded the Spear!
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி (siva paththini kUtrinai mOdhiya padha saththini) : She is the Consort of Lord SivA; She is the powerful Shakthi who kicked away Yama with her feet; இயமனை உதைத்தருளிய திருவடியை உடையவரும் ஆகிய பராசத்தி;சத்தினி (saththini) : powerful, சக்தி வாய்ந்தவள்;
மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா (mUththa vinAyagi jegam ippadi thotriya pArvathi aruL bAlA) : She is Primordial; She removes the obstacles (of Her devotees); She created the universe just like that in a flash; She is PArvathi, and You are Her Son! எல்லாவற்றிற்கும் முந்தியவரும், தனக்குமேல் தலைமை இல்லாதவரும், உலகத்தை இவ்வண்ணமாகத் தோன்ற அருள்செய்த பார்வதியம்மையாரும் பெற்றருளிய திருக்குமாரரே!
விதுரற்கும் அராக் கொடியானையும் விகடத்து உறவு ஆக்கிய மாதவன் (vidhuraRkum arAkkodi yAnaiyum vikatath uRvAkkiya mAdhavan) : He is MAdhavan (Krishna) who created a serious rift between Vidhuran and DuryOdhanan who held the staff of a serpent; விகடம் (vikatam) : dissenting, having difference; அராக் கொடியான் (arA kodiyAn) : One with a serpent on the flag, Duryodhana;
விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே (vijaiyaRkku uyar thErp pari Urbavan marugOnE) : He is also the charioteer of Arjunan, driving his large horses; You are the nephew of that Lord VishNu! விசையன் (visaiyan) : Arjuna;
வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய (veLi eN isai sUra porudhu Adiya) : The demon (SUran), who fought ferociously in the open and in all the eight directions,
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய (kodi kaikkodu keerthi ulAviya) : You carry in Your hand the flag staff and strol about in triumph, Oh Lord!
விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே. (viRalmeyth thiruvEtkaLa mEviya perumALE.) : You have Your abode in ThiruvEtkaLam where victory and truth prevail, Oh Great One!
திருவேட்களம் புராணப் பெருமை மிக்க தலமாகும். திருவேட்களம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் அர்ஜுனன் தவமிருந்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெற்றான். அதனால் இங்கு ஸ்வாமியின் பெயர் பாசுபதேஶ்வரர்; பாசுபதநாதர். அம்பாள் திரு நாமம் சற்குணாம்பாள்.
யோக சாதனைகளின் உச்சம் தொட்டுக் காட்டும் பாடல்.
ReplyDeleteமூலாதாரத்திலிருந்து நாடிகள் வழியே ப்ரமரந்திரம் என்ற சிரசின் உச்சி ஸ்தானத்தை அடைந்து பரணவம் ஒலிக்க சிவஞானம் தழைக்க அநுபூதி கிடைக்கும் அற்புதம். அங்கே மயில ஏறிய மாமணியின் திருநடனம், திருவடித் தாமரைகளின் எழில் கனிந்த கருணா கடாட்சம், என அவன் காட்டும் திருக்கோலக் காட்சி திகட்டாத தேன். போர்க்களக் காட்சிகளில் புயலின் உக்ரம். காலனை உதைத்த கருணாகரரின் இடப்பாகம் கொண்டவள் ஆதலால் அம்பிகையே காலனை எற்றுவதாய் காட்டும் நயம்.
தூயவனான விதுரனை துரியோதனனிடமிருந்து பிரித்துக் குணவானான விதுரன் அதர்மதுக்காகப் போரிடாமல் காத்த கண்ணனின் சாகசம் என அழகுகள் அடுக்கடுக்காய் விரியும் பாடல்
நன்றி.