283. காணொணாதது


ராகம்: மாண்டுஅங்கதாளம் (7½)
1½ + 2 + 2 + 2
காணொ ணாதது உருவோ டருவது
பேசொ ணாதது உரையே தருவது
காணு நான்மறை முடிவாய் நிறைவதுபஞ்சபூதக்
காய பாசம தனிலே யுறைவது
மாய மாயுட லறியா வகையது
காய மானவ ரெதிரே யவரென வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
மாய னாரய னறியா வகையது
பேத பேதமொ டுலகாய் வளர்வதுவிந்துநாதப்
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாயருள் நிறைவாய் விளைவதுஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
நூறி யேயுயிர் நமனீ கொளுவென
வேல்க டாவிய கரனே யுமைமுலையுண்டகோவே
வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யேகுடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர்குறிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
சேர நாடிய திருடா வருடருகந்தவேளே
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
ஞான யோகிக ளுளமே யுறைதரு
தேவ னூர்வரு குமரா வமரர்கள்தம்பிரானே.

Learn The Song




Raga Maand (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 D2 N3 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

காணொணாதது (kANoNAdhadhu) : It cannot be seen by senses of perception; புலன்களால் அறிய முடியாதது; ஒப்பிடுக வாசித்துக் காணொணாதது;

உருவோடு அருவது (uruvOdu aruvadhu) : It has a form and is formless; உருவமில்லாதவராக வேத மந்திரம் மற்றும் பஞ்சாக்ஷர சொருபமானவர்; உலகியக்கும் ஆண்டவன் ஆறு திருமுகங்கள், பன்னிரண்டு கரங்கள், பதினெட்டுக் கண்கள் கொண்ட அருள் உருவம் தாங்குபவன்; சோதிப்பிழம்பதோர் மேனி;('அருவமுமுருவமாகி' — கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் 1:11:92 ), ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் ('ஆங்காரமும் அடங்கார்' — அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்);

பேசொணாதது ( pEsoNAdhadhu) : it cannot be described in words, வாக்கினால் இந்த தன்மை உடையது எனப் பேசமுடியாதது; வாய் விட்டுப் பேசொணாதது;

உரையே தருவது (uraiyE tharuvadhu) : but can be interpreted in several ways; பலவித உரை விளக்கங்களுக்கும் இடம் தருவது; வேதம் முதலானவற்றால்) உரைக்கப்படுவது;

காணு நான்மறை முடிவாய் நிறைவது (kANu nAnmaRai mudivAy niRaivadhu ) : it resides at the zenith of all the four visible VEdAs (scriptures);

பஞ்சபூதக் காய பாசம் அதனிலே உறைவது (pancha bUtha kAya pAsam adhanilE uRaivadhu) : it is ensconced in this body composed of the five elements; பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடலின் மேல் வைத்திருக்கும் நேசத்தினிலுள்ளும் உறைந்திருப்பதும்;

மாயமாய் உடல் அறியா வகையது (mAyamAy udal aRiyA vagai adhu) : it is mystical and ethereal and cannot be perceived by the body; மாயமே வடிவாக அமைந்துள்ள இந்த உடலால் அறிய ஒண்ணாத வகையில் நிற்பது;

காயமானவர் எதிரே அவரென வந்து பேசிப் பேணொணாதது (kAyam Anavar edhirE avarena vandhu pEsi pENa oNAdhadhu) : even when it assumes a human form and talks, it is still beyond any human comprehension; (காயமானவர்) காயசித்தியை அடைந்தவர் எதிரே அவர்களைப் போலவே மனித உருக் கொண்டு வந்து உபதேச மொழிகளைப் பேசிடினும், மனிதருள் ஒருவராக மதிக்க முடியாதது;
மணிவாசகருக்கு திருப்பெருந்துறையில், குருந்தடியில் இறைவன் குருமூர்த்தமாக வந்து அருள் புரிந்ததும், அருணையில் அருணகிரியார்க்கு இறைவன் குரு வடிவமாக வந்து மௌன மறையை உபதேசித்தது பற்றி சிந்திக்கவும்.

வெளியே ஒளியது (veLiyE oLiyadhu) : it is a bright flame in the cosmos; ஆகாய வெளியில் ஒளியாய் நிற்பது;

மாயனார் அயன் அறியா வகையது (mAyanAr ayan aRiyA vagai adhu) : it is beyond the grasp of Vishnu and BrahmA;

பேத அபேதமொடு உலகாய் வளர்வது (bEdha abEdhmodu ulagAy vaLarvadhu ) : it conforms to all worldly aspects of unity and diversity; உலக உயிர்களோடு கலந்தும் கலவாமலும் இருந்து பிரபஞ்சமாய் காட்சி அளிப்பது, "இறைவன் உயிர்களோடு கலந்து ஒன்றாய் நிற்பான் (அபேதம்); பொருள் தன்மையினால் அவற்றின் வேறாகி நிற்பான் (பேதம்); அவையும் தானுமாய் உடனாகி நிற்பான் (பேதாபேதம்)" என்கிறது சைவ சித்தாந்தம்..

விந்து நாதப் பேருமாய் (vindhunAdha pErumAy ) : it is known as the Cosmic Union of Shakthi (bindhu) and SivA (nAdham); நாதம் என்பது ஒலி; விந்து என்பது ஒளி. பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருள் இயக்கமற்று உயிருள்ளதான இயக்கமற்ற வெட்டவெளியாகிய சிவம்; இயக்கத்திற்கு வரும்போது சிவசக்தி.

கலை அறிவாய் (kalai aRivAy) : it is the essence of all scriptures and arts; நூல்களின் சாரமாய்;

துரிய அதீதமானது (thuriya atheethamAnadhu) : it transcends the most sublime level of Yogis; துரியம் என்பது தூங்காமல் தூங்குவது போன்ற நனவுத் துயில். விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்தது (அதீதமாக இருப்பது). அந்த நிலையில் அகந்தையும் தோன்றாது, அதன் விளைவான பிரபஞ்சமும் தோன்றாது. அது சதா விழிப்பு நிலை.

வினையேன் முடி தவ பேறுமாய் (vinaiyEn mudi thava pERumAy) : it is the beneficial culmination of my good deeds and penance;

அருள் நிறைவாய் விளைவது (aruL niRaivAy viLaivadhu) : it blossoms as the fullness of Divine Grace;

ஒன்று நீயே (ondru neeyE) : All the qualities described above is about You and You alone!

வீணொணாது என அமையாத அசுரரை (veeNoNAdhu ena amaiyAdha asurarai ) : Those demons (asuras) would not refrain from forbidden deeds; போர் புரிதல் வீணான காரியம் என்பதால் அது கூடாதென விலக்கி, மனத்தை அடக்கி வைக்காத அசுரர்களைப் ;

நூறியே உயிர் நமனீ கொளுவென (nURiyE uyir namanee koLuvena) : so You decimated them and handed them over to Yaman (Death-God) asking him to take over their lives,

வேல் கடாவிய கரனே (vEl kadAviya karanE) : by throwing the spear from Your hallowed hand!

உமை முலை உண்ட கோவே (umai mulai uNda kOvE) : You are the princely son of PArvathi who gave You the milk of wisdom.

வேத நான்முக மறையோனொடும் விளையாடியே (vEdha nAnmuga maRaiyOn odum viLaiyAdiyE) : You played with BrahmA, who knows four VEdAs and has four faces,

குடுமியிலே கரமொடு வீற மோதின மறவா (kudumiyilE karamOdu veeRa mOdhina maRavA) : and punished him by hitting him hard on his head with Your knuckles (when he failed to interpret OM), Oh Great Warrior!

குறவர் குறிஞ்சி ஊடே (kuRavar kuRinjiyUdE) : At VaLLimalai, the mount of KuRavas, குறிஞ்சி (kurinji) : hilly tracts;

சேணொணாயிடும் இதண் மேல் அரிவையை மேவியே (sENoNAyidum idhaNmEl arivaiyai mEviyE) : You approached VaLLi, the maiden on the raised platform, சேண் (sEN) : high, உயரமான; இதண் (ithaN) : raised platform, loft, பரண்;

மயல் கொள லீலைகள் செய்து சேர நாடிய திருடா (mayal koLa leelaigaL seydhu sEra nAdiya thirudA ) : and played a lot of tricks on her and enticed her with Your love desirous of hugging her, You Stealer of her heart!

அருள் தரு கந்தவேளே (aruLtharu kandhavELE) : You are Kanda Swamy, Giver of Divine Grace!

சேரொணா வகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகள் ( sEroNA vagai veLiyE thiriyu meynyAna yOgigal) : Those Yogis, who are never accessible to anyone or any evil force, and who are spiritually emancipated, யாரும் தம்மிடத்திலே நெருங்க முடியாதபடி ஏகாந்த வெளியிடங்களிலே திரிபவர்களும் பாச பந்தங்களின் வாசனை தம்மிடம் வந்து மீண்டும் நெருங்க முடியாதபடி அருள் வெளியிலே திளைத்து கொண்டிருக்கும் உண்மை அறிஞராகிய சிவயோகிகளது

உளமே உறைதரு (uLamEy uRaitharu) : find You residing in their hearts.

தேவனூர் வரு குமரா (dhevanUr varu kumarA) : You appear in the town of DhEvanUr, Oh KumarA,

அமரர்கள் தம்பிரானே.(amarargaL thambirAnE.) : You are the Lord of all DEvAs!

முருகன் பிரமனை குட்டியது ஏன்?

சைவசித்தாந்தின் அடிப்படை கோட்பாடாகிய சத்காரிய வாதத்தின்படி 'உள்ளதுதான் தோன்றும்; இல்லது தோன்றாது. உள்ளது போகாது; இல்லது வாராது’. சத்காரியவாதத்தில் உள்ளபொருள் முற்றாக அழிந்து விடுவதில்லை. காரியமான பொருள் அழியும்போது அதன் முதற்காரணத்தில் அடங்கும். மண்குடம் அழியும்போது அதன் முதற்காரணமான மண்ணுடன் கலந்து விடும். பொன்னால் ஆன நகை அழியும்போது அதன் முதற்காரணமான பொன்னாக காணப்படும்.

மாயா காரியமான பிரபஞ்சம் யுக முடிவில் அதன் முதற்காரணமான (material cause) மாயையில் ஒடுங்கும். மீளத் தோன்றும்போது எதில் ஒடுங்கியதோ அதிலிருந்துதான் தோன்றும். பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவன்தான் அதனை ஒடுங்கியதிலிருந்து அதனை மீளத்தோற்றுவிப்பான். எனவே சங்கார காரணன் அதாவது பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவனே மீளத் தோற்றுவிக்கும் கருத்தாவுமாவன். முத்தொழிலுக்கும் கருத்தாவாகிய முதல்வன் சங்கார கருத்தா ஆகிய சிவனே ஆவன். அவனே பிரபஞ்சத்தைப் பிரணவமாகிய முதற்காரணத்தில் ஒடுக்குபவன். ஒடுங்கிய அந்தக் காரணத்திலிருந்து சங்கார கருத்தாவாகிய அவனே மீளத் தோற்றுவிப்பவன். அதனால் பிரணவத்தின் உண்மைப் பொருள் பிரமப் பெரும்பொருளாகிய சிவமே என்று அறியாமல், படைத்தல் தொழிலைச் செய்கின்ற தானே பிரணவப் பொருள் என்று அகந்தையில் கூறினான். அதனால் முருகனால் தண்டிக்கப்பட்டான் என்பது புராணக் கதை.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே