176. வாசித்துக் காணொணாதது



ராகம் : பூர்வி கல்யாணிதாளம்: அங்க தாளம் (3+ 1½ +2)
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாததுநெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாததுவிந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானதுகண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதுமயங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணிகந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதெனநின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர்>தம்பிரானே.

Learn The Song



Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 P D2 P S    Avarohanam: S N3 D2 P M2 G3 R1 S

Paraphrase

பரம்பொருளின் இலக்கணத்தை விளக்கும் பாட்டு இது. மாறுதலே இல்லாத மெய்ப் பொருள் தான் 'பரப்பிரம்மம்'. அங்கிங்கெனாதபடி எங்கும் விளங்கியதாய் இருக்கும் இப்பரம்பொருளைப் பற்றி ‘இருக்கிறது’ என்பதைத்தவிர வேறு ஒன்றும் பேசிவிடமுடியாது. வெறுமனே இருக்கும், அவ்வளவுதான். அது பேசாது, பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்க ஒண்ணாதது; காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது. முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருளுடைத்த ‘ஸத்’ என்று வேதங்கள் சொல்லுகின்றன. ‘ஸத்’ என்றால் நிலை பெயராத உண்மை.

வாசித்துக் காணொணாதது (vAsiththu kANoNAdhadhu ) : It cannot be perceived through literary studies; நூல்களைக் கற்று கலையறிவால் காணமுடியாதது அது; நூல் அறிவால் பாச ஞானமாகிய அபரஞானம் மட்டும் வளரும்.

பூசித்துக் கூடொணாதது (pUsiththuk kUdoNAdhadhu ) : It cannot be attained through through worship;பூஜை செய்து கிரியாமார்க்கத்தால் அடைதற்கு அரியது அது;

வாய்விட்டுப் பேசொணாதது (vAyvittup pEso Adhadhu ) : It cannot be described in words; வாக்கினால் இந்த தன்மை உடையது எனப் பேசி புரியவைக்க முடியாதது அது;

நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொணாதது (nenjinAlE mAsarkkuth thONoNAdhadhu ) : It cannot be conceived in impure hearts; உள்ளத்தில் குற்றமுடையோருக்குத் தோன்றி விளங்காதது அது;

நேசர்க்குப் பேரொணாதது (nEsarkku pEroNAdhadhu ) : It cannot be uprooted from His devotees' hearts; அன்பு செய்தார் நெஞ்சினின்றும் நீங்காது நிற்பது அது;

மாயைக்குச் சூழொணாதது (mAyaikku sUzhoNAdhadhu ) : It cannot be surrounded by illusion; மாயையினால் சூழ முடியாதது அது;

விந்துநாத ஓசைக்குத் தூரமானது (vindhu nAdha Osaikku dhUramAnadhu) : That is beyond the reach of the Sound (nAtham) created by the churning of Energy (vindhu); விந்து (சக்தி) சுழல அதனின்று எழும் நாதம் (சிவம்) என்னும் ஓசைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பது அது;(explanation in the next section);

மாகத்துக்கு ஈறு அதானது(mAgaththukku eeRathAnadhu ) : It is at the boundary of the skies; ஆகாயத்திற்கு முடிவிலே இருப்பது அது; மாகம் (maagam) : sky;

லோகத்துக்கு ஆதியானது (lOkaththukku AdhiyAnadhu) : That is the origin of the entire Universe;

கண்டு நாயேன் யோகத்தை சேருமாறு மெய் ஞானத்தை போதியாய் (kaNdu nAyEn yOgaththai sErumARu mey nyAnaththai bOdhiyAy) : in order that I realize the true nature of the Absolute (as described above), teach me the True Knowledge so that I can attain the Union (yOgA) with SivA; உள்ளக் கண்களால் இந்த நாயேன் கண்டு, சிவயோகத்தை அடையுமாறு உண்மை அறிவை நீ உபதேசித்து அருள்வாய்.

இனியும் ஊனத்தை போடிடாது மயங்கலாமோ (ini yUnaththaip pOdi dAdhu mayangalAmO ) : Henceforth, should I not rescind my mortal body without any illusions about it இனி யான் இந்த மாயைக்கு வசமாகாமல் உடம்பை வெறுத்து ஒதுக்க அருள்வாய். ஊன் = உடல்; போடிடாது = வெறுத்து விடாது;

ஆசைப்பட்டு ஏனல் காவல் செய் வேடிச்சிக்காக மா மயல் ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே (Asaip pattu Enal kAvalsey vEdicchikkAga mA mayalAgi poR pAdhamE paNi kandhavELE) : with great desire You went to the millet-field guarded by the hunter-girl (VaLLi) and fell madly in love with her and knelt down at her golden feet, Oh Kandaswamy! ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு இறைவன் தனது உயர்நிலையினின்றும் கீழிறங்கி வந்து எளிதில் ஆட்கொள்ளும் கருணைப் பெருக்கை இது உணர்த்துகின்றது.

ஆலித்து சேல்கள் பாய் வயலூரத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா (Aliththu sElgaL pAyvaya lUraththil kALamOdu adar Araththaip pUN mayUra thuranga veerA) : At VayalUr where the fish swim about roaring in the fertile fields, You ride the horse-like peacock, which wears the poisonous serpent as garland, Oh Warrior! ஆரவாரம் செய்து மீன்கள் பாய்கின்ற வயலூர்லே விஷம் நிறந்த பாம்பை ஆபரணமாக கொண்ட மயிலை வாகனமாகக் கொண்ட முருகனே! ஆலித்தல் (aaliththal) : making sound; காளம் (kALam) : poison, venom; serpent;

நாசிக்குள் பிராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடி உற்று காண ஒணாது என நின்ற நாதா (nAsikkuL prANa vAyuvai rEsiththet tAdha yOgigaL nAdi utruk kANoNAdhu ena nindra nAthA:) : The yogis inhale and exhale life-giving air through the nostrils ( by practising Pranayamam); despite keenly desiring to attain You, You stand beyond their reach. ரேசகம் = மூச்சை வெளிவிடுதல்

நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே ( nAgaththu sAgai pOy uyar mEgaththai sEr sirAmalai nAtharkku sAmiyE ) : The peak of the Mount ThirichirAmalai rises so high as to touch the lofty clouds, and that Mount's Lord SivA worships You as Guru, நாக மரத்துக் கிளைகள் உயர வளர்ந்து மேகத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்த சிராமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானின் குமாரனே! நாகம் (naagam) has several meanings. Here it means a mountain. சாகை (saakai) : branches;

சுரர் தம்பிரானே.(surar thambirAnE.) : oh, the leader of the celestials!

What is Vindhu-Natham?

PraNava is the primal sound (Om/Aum) that existed before the creation and the sound that stays after the praLaya. This is the nAtharUpa - the Form of sound - of the Supreme Luminance. The great yogis meditate on Om/Aum mantra as the path to Eternal Bliss called God. The praNava has five parts. They are akara, ukara, makara, bindhu, and nAtham. Bindu and natham denote the place or point from where the universe emerges and evolves.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே