175. புவனத்தொரு
Learn The Song
Raga Behag (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S G3 M1 P N3 D2 N3 S Avarohanam: S N3 D2 P M2 G3 M1 G3 R2 SParaphrase
புவனத்து ஒரு பொன் தொடி சிற்று உதர (buvanath thorupotrodi chitru udharak ) : On this earth, in a small womb of a beautiful woman, ஒரு பொன் தொடி =பொன்னாலாகிய வளையலை அணிந்தவள்; ஒரு அழகிய பெண்
கருவில் பவம் உற்று விதி படியில் (karuvil bavamutru vidhippadiyil) : took form as an embryo as per the dictates of karma/fate;
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் (puNar dhukka sugap payil vutru) : enjoyed happiness and sorrow, and when I die,
ஆவி புரியட்டகம் இட்டு (Avi puri attagam ittu ) : life is encompassed in a virtual body (SUkshma Sareeram also known as puriashtagam); உயிரை சூட்சும உடலில் புகுத்தி,
ஸ்தூல உடம்பில் உறைந்த உயிரைச் சூக்ஷ்ம உடம்பில் இட்டு இயம தூதர் கொண்டு போவார்கள். அது புரியட்டக சரீரம் எனப்படும். பஞ்சபூதங்கள் மற்றும் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றின் பினைப்பு என்பதால் எட்டு விதமான பினைப்புகள்–புரியட்டகம் எனலாம். ஐம்பெரும் பூதங்கட்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற தன் மாத்திரைகள் 5. மனம், புத்தி, அகங்காரம் 3 ஆக 8 தத்துவங்களுடன் கூடியது புரியட்டகம். இதை சூக்குமதேகம் என்றும் கூறுவர்.
அது கட்டி இறுக்கு அடி குத்தென அச்சம் விளைத்து (adhu kattiyiRukka adikuththena accham viLaiththu ) : it is then tied tightly, slapped and pummelled (thrashed), causing scare,
அலறப் புரள்வித்து வருத்தி மணற் சொரிவித்து (alaRa puraLviththu varuththi maNaR soriviththu) : the screaming body is rolled over and over and further tortured by splattering hot sand all over it,
அனலூடே தவனப் படவிட்டு (analUdE dhavanap padavittu) : it is thrust into fire and roasted; தவனம் = வெப்பம்;
உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து (uyir sekkil araiththu aNi paRkaL udhirththu) : the life in that body is crushed in a crusher (chekku),and the neat row of teeth knocked out;
எரி செப்புருவைத் தழுவப் பணி முட்களில் கட்டி இசித்திட (eri seppuruvaith thazhuvap paNi mutkaLil katti isiththida) : it is forced to hug a copper statue that is smouldering hot and is bound with thorns and dragged along;
வாய் கண் சலனப் பட எற்றி (vAykaN chalanappada etri) : it is kicked so hard that the mouth and eyes are shaken;
இறைச்சி அறுத்து அயில்வித்து (yiRaichchi aRuththu ayilviththu) : the flesh is sliced out of it and forcibly pushed into the mouth;
முரித்து நெரித்து உளையத் தளையிட்டு (muriththu neriththu uLaiya thaLai ittu) : the feet are crushed and bound painfully with heavy chains.
வருத்தும் யம ப்ரகரத் துயர்தீராய் (varuththum yamapragarath thuyar theerAy) : Please save from such miserable punishments in the land of Yama after my death. ப்ரகரம்/பிரகரம் = அடித்தல்; யம ப்ரகரம் = யமன் அடிப்பதாகிய தண்டனை;
பவனத்தை ஒடுக்கு மனக்கவலைப் ப்ரமையற்று ( pavanaththai odukku manak kavalai bramaiyatru) : Free from the stress and the illusion (felt by Yogis) to control and regulate their breath; பவனம் (pavanam) : air/wind; here, breath; பிராணவாயுவை ஓடாமல் இழுத்து உள்ளுக்குள் நிறுத்தி கடினமாகப் பயில்கின்ற உடம்பை வருத்தும் ஹடயோகமான அந்த மயக்கம் ஆன்மலாபத்தை தராது.
ஐவகைப் புலனிற் கடிதிற் படர் இச்சை ஒழித்த (aivagaip pulanil kadidhiR padar icchai ozhiththa) : and having conquered the five senses (namely, taste, smell, sight, hearing and perception) through which desire spreads fast;
தவச் சரியைக் க்ரியை யோகர் பரிபக்குவர் (thavach chariyaik kriyai yOgar paripakkuvar) : these exalted people who have performed sariyai, kiriyai, and yOgA and are mature, consummate gnAnis,
நிட்டை நிவிர்த்தியினில் பரிசுத்தர் விரத்தர் (nishtai nivirththiyiniR parisudhdhar viraththar ) : and have attained the purest mind through renunciation and deep meditation; they have renounced worldly desires; விரத்தர் (viraththar) : those who renounced attachments; விரத்தர் = பற்றை விட்டவர்கள்;
கருத்ததனிற் பரவப்படு செய்ப்பதியிற் பரமக் குருநாதா (karuththadhanil paravappadu seyppadhiyil parama gurunAthA) : these people have given up all desires and attachments. Oh Supreme Master! You reside at Vayalur, which is worshipped with reverence by the Yogis (described above). செய்ப்பதி(seyppathi) : Vayaloor;
சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக் கணன் (sivan uththaman niththa uruddhiran mukkaNan) : Lord SivA, the most virtuous, the immortal one, Rudra MUrthi, one who has three eyes (the Sun, the Moon and the Fire),
நக்கன் மழுக்கரன் (nakkan mazhukkaran) : the Digambaran (one who wears the directions as His clothing), one who holds in his hand the pickaxe, நக்கன் (nakkan) : naked person,
மழு என்பது சிவபெருமானின் ஆயுதங்களுள் ஒன்றாகும். தாருகாவனத்து ரிஷிகளின் செருக்கினை அகற்ற, சிவபெருமான் சென்ற போது ரிஷிகள் தவவலிமையால் ஏவிய புலியை உரித்து ஆடை அணிந்து, கொல்ல ஏவிய மழுவினை தனது ஆயுதமாக ஏற்றுக்கொண்டார்
உக்ர ரணத் த்ரிபுரத்தை எரித்தருள் (ugraraNath thiripuraththai eriththaruL) : one who burnt down Thiripuram in a fierce battle,
சிற்குணன் நிற்குணன் ஆதி (siRguNa niRguNan Adhi) : one who is Wisdom itself, one who does not have any attributes, one who is primordial, சிற்குணன்= ஞானகுணத்தவன்
செகவித்தன் நிசப் பொருள் சிற்பரன் (jegaviththa nijapporuL chiRparan) : one who is the seed for the entire universe, one who is truth incarnate, one who is beyond the intellect, வித்து : விதை; சிற்பரன் = அறிவுக்கு எட்டாதவன்;
அற்புதன் ஒப்பிலி உற்பவ (aRbuthan oppili yuRbava ) : one who is the most wonderful and is matchless - that SivA delivered You to us!
பத்ம தடத் த்ரிசிரப் புர வெற்புறை சற் குமரப் பெருமாளே (padhmathadath thirisirAppura veRpuRai saR kumarap perumALE.) : You reside in the mountain of Thiruchirapplli, which is full of lotus ponds, Oh Great One! பத்ம தட = தாமரைக் குளங்கள்;
Comments
Post a Comment