180. பத்தர் கணப்ரிய


ராகம் : பீம்ப்ளாஸ்தாளம்: ஆதி
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்தியகுகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புதமெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரகமறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறிதினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தபனிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிடமறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் பெருமாளே.

Learn The Song



Learn The Song




Raga Bhimplas / Abheri (Janyam of 22nd mela Karaharapriya) -

Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Paraphrase

பத்தர் கணப்ரிய (baththar gaNapriya) : You love the company of multitudes of Your seekers! அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவரே!

நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக ( nirththa nadiththidu pakshi nadaththiya guha) : You mount and drive the dancing peacock as Your vehicle, Oh GuhA! நிர்த்த நடித்திடு பட்சி(nirththa nadiththidu pakshi) : the dancing bird, peacock;

பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள பத்தர்கள் (pUrva pacchima dakshiNa uththara dhikkuLa baththargaL) : Your devotees in all four directions, namely, East, West, South and North,

அற்புதம் எனவோதும் (aRbudha menavOdhum) : exclaim as excellent,

சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழைச் (chithraka viththuva saththa miguththa thiruppugazhai) : the Thiruppugazh that is beautiful, poetic and rich in chandam (rhythm), சித்ரம்-அழகு. கவியில், சொல்லழகு, பொருளழகு, நடையழகு, தொடையழகு முதலிய பல அழகுகள் அமைந்திருக்க வேண்டும்.

சிறிது அடியேனும் செப்பென வைத்து உலகிற் பரவ (chiRidhu adiyEnum seppena vaiththu ulagil parava) : You made me sing these songs to a certain extent and helped me to spread them in this world,

தெரிசித்த அநுக்ரகம் மறவேனே (dherisiththa anugraham maRavEnE) : I can never forget Your grace You showered on me.

கத்திய தத்தை களைத்து விழ திரி கற்கவண் இட்டெறி தினை காவல் கற்ற குறத்தி (kaththiya thaththai kaLaiththu vizha thiri kaRkavaN itteRi thinai kAval katra kuRaththi) : Making the squeaking parrots tired and driving them away, VaLLi was flinging stones from a catapult in the millet-field guarded by her; தத்தை (thaththai) : parrot; கற்(ல்) கவண்(kal kavaN) : stone slung from a catapult; சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற, தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்றுக் கொண்ட வள்ளிபிராட்டி

நிறத்த கழுத்தடி கட்டி அணைத்த பனிரு தோளா (niRaththa kazhuththadi katti aNaiththa paniru thOLA) : You embraced that dame's beautiful neck with all Your twelve shoulders!

சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பனு மெச்சிட (sakthiyai okka idaththinil vaiththa thagappanu mecchida) : SivA, Your father, who placed ParAsakthi fittingly on His left side, was full of praise,

மறைநூலின் தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய (maRai nUlin thaththuva thaRpara mutrum uNarththiya) : when You preached to Him the essence of VEdAs and their Cosmic principles.

சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே. (sarppa giricchurar perumALE.) : You reside in the serpent mount (ThiruchchengkOdu), Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே