கந்தர் அநுபூதி 21-25

Learn The Song


ராகம் : பாகேஸ்வரி

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.21
arudhA maRavA neRikANa enakku
iruthAL vanasam thara endRu isaivAi
varadhA murugA mayilvAgananE
viradhA sura vibAdaNanE!21

When will you graciously grant Your twin feet so that I can attain the nirvikalpa state that transcends memory and forgetfulness? You liberally grant all the boons Your devotees seek; Your vehicle is the peacock; You slayed the obnoxious demon Soorapanman! (Nirvikalpa refers to a state in which there is no differnce between one's own spirit and the divine essence. It means being totally absorbed in the self without a distinct and separate consciousness of the knower, the known, and the knowing).

நான் நினைப்பும் மறப்புமற்ற யோகநிலையான முக்தியையடைய தங்களின் இரண்டு பாதத் தாமரைகளை ( நான்முகன் எழுதியதை அழித்து நல்ல வாழ்வு தரும் பாதங்கள்) எனக்குத் தந்தருள என்று திருவுள்ளம் கொள்வீர்? கேட்ட வரங்களை வழங்குபவரே! மயிலை வாகனமாகக்கொண்ட முருகப் பெருமானே! தன்னுடைய பக்தர்களைப் பாதுகாக்கும் விரதம் பூண்ட தேவனே! சூரபத்மனை வேலால் பிளந்தவனே! (கருதுதலும் மறத்தலும் ஆகிய நெறி பிறப்பை குறிக்கிறது. கருதா மறவா நெறி மோட்சமாகும்.)

விரதாசுர இரண்டு வகையாக பிரிக்கலாம். விரத + அசுர அல்லது விரதா+ அசுர.
முதலாவது வகையில் பிரித்தால், விரத அசுர சூரன் : அருவருப்புக்குரிய அசுரனாகிய சூரபத்மன். (விரதம் = அருவருப்பு)

  • முதலாவது வகையில் பிரித்தால், விரத அசுர சூரன் : அருவருப்புக்குரிய அசுரனாகிய சூரபத்மன். (விரதம் = அருவருப்பு)
    விரதம் (viratham) : repulsive;
  • இரண்டாவது வகையில் பிரித்தால், விரதா+ சுர + சூர = வரதா (அடியார்களுக்கு வேண்டும்) வரங்களை தருபவனே, தேவர்களை காத்த வீரனே!
    விரதா(virathaa) : means one who observes penances/vows; Oh Deva! You have taken the vow to protect Your devotees;
இதே போல், விபாடணனே என்ற பதத்தை மூன்று வகையாக பொருள் கொள்ளலாம்.
  • விபாடணன் - பிளந்தவன்; விபாடணனே --(இரு பிளவாய் வேல் கொண்டு) பிளந்தவனே!
    விபாடம் (vibaadam) : to split; சுர சூர விபாடணனே.(viratha asura soora vibaadananE) : You split the ugly demon Soorapadman; விபாடணன் (vibaadaNan) : one who splits;
  • விபாடணன் /அ விபாஷணன். பாஷணம் என்றால் பேச்சு. விபாஷ்ணம் என்றால் விரோதத்துடன் பேசுதல்
    பாஷணம் (baashaNam) : speech; You speak unfriendly words to Soorapadma, Your enemy;
  • சூர் அவி பாஷணன்( soor avi bashaNan) : means one who speaks such that it destroys Sooran's masculinity;
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.22
kALaik kumarEsan enak karudhi
thALaip paNiya thavam eidhiyavA
pALaik kuzhal vaLLi padham paNiyum
vELai sura bUbadhi mEruvaiyE!22

What a wonder that I received the cherished gift of meditating on Your feet, thinking of You as a young and adolescent Kumara! You are the Supreme Ruler of the celestials who pays obeisance to the Sacred Feet of Valli, having long tresses of hair like the flower sheath of the palm tree, You are great like the Mahaameru mountain!

இளமையானவரென்றும், பெரும்சக்தி படைத்தவரென்றும் (குமரன் மற்றும் காளை எனக்) கருதி, உந்தன் தாளைப் பணியும் தவநிலை நான் அடைந்தது பெரும் பேறு அல்லவா! கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலை உடைய வள்ளிப் பிராட்டியின் பாதங்களைத் தொழுகின்ற முருக வேளே, தேவர்களின் அரசனே, மேரு மலையன்ன பெருமை உடையவனே!
உள்ளர்த்தம்: 'முருகா, உன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று விருப்பம் கொண்டு வள்ளி நாச்சியார் அரும் பெரும் தவம் செய்து, அதன் பலனாக உன்னையே அடைந்தார். அழகான கூந்தல் அலங்காரம் கொண்ட வள்ளியின் திருவடிகளை அடையும், மேருமலையையை ஒத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், வேளையில் வந்து காப்பவருமான முருகா! எங்களையும் காத்து அருள்வாயாக!

“காளைக் குமரன் ஈசன்” --- இச்சொற்கள் பரம இரகசியமான உட்பொருளை கொண்டுள்ளன. ‘காளை’ என்றால் ‘என்றும்/நித்திய இளமை’ எனப் பொருள், அதாவது ‘நித்தியமாக இருப்பது’ அல்லது ‘ஸத்’. 'கு' என்றால் அசுத்தம். மாரன் என்றால் அழிப்பவன். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழிப்பவன். இந்த மூன்று மலங்களின் மறு உருவங்களே சூரன், தாரகன், கிரவுஞ்சம். இவைகளை அழித்ததன் மூலம் அனாதி காலமாக ஆன்மாவைப் பற்றி இருக்கும் மும்மலங்களான மாயையை அழிக்கும் ‘ஞானம்’ அல்லது ‘சித்’ தான் குமரன். ‘ஈசன்’ என்றால் ‘அனைத்தையும் கட்டி ஆள்பவர்’, (அ) ‘உயரிய/ மகா (ஈஸ்வர) சக்தி’ எனப் பொருள். ஆக, காளைக் குமரேசனஎன்ற சொற்தொடரில் அடங்கியுள்ள இரகசியப் பொருள் ‘பரமானந்தம்’ எனும் ‘ஆனந்த நிலை’ அல்லது ‘ஸத்–சித்-ஆனந்தம் — இருப்பு – ஞானம்- ஆனந்தம்' என்பதேயாகும். ‘பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு’ (ஸச்சிதானந்தம்) ஒரு மேனியாகி ‘முருகப் பெருமானாக’ அவதாரமெடுத்தது “. முருகப் பெருமானின் முன்னர் வணங்கும்பொழுது, இப்படியாக அவரை எல்லையற்ற ஸச்சிதானந்தமாக நினைத்து, உணருதல் வேண்டும். இந்த அடைவதற்கரிய பெரும் சாதனையை செய்ய முடிந்தது குறித்து அருணகிரியார் ‘இது குருவருளாலும் இறைவனின் அருளாலும்தான் நடந்தேறியது’ என்று பெருமிதம் அடைகிறார்.

ஞானத்திலோ பக்தியிலோ பக்குவம் அடைந்த ஆன்மாக்களை இறைவனே வலிய வந்து ஆட்கொள்வான் என்று தன்னையே சாட்சியாக வைத்து அருணகிரியார் கூறுகிறார். முருகனே மணவாளனாக வரவேண்டும் என்று வள்ளி தவம் இருந்தார். அதைத்தான் "தாளைப் பணியத் தவம் எய்தியவா" என்கிறார் அருணகிரி. வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. இச்சா சக்தி ஆன்மாவின் ஆதாரம். அந்த ஆன்மாக்கள் அடைவது இறைவன் திருவடியை. அதுவும் ஆன்மாக்கள் தேடிச்செல்ல வேண்டாம். பெருங்கருணையோடு இறைவனே ஆன்மாக்களை அணைத்துக் கொள்வான்.

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.23

Should I entirely perish without meditating upon Your Sacred Feet because of (my) ignorance? Is it right? O, Supreme King (of the world), who holds the weapon of lance possessing sharpness and prowess, and who is united with the creeper-like hunter-maiden Valli.

அறியாமையின் விளைவாக தங்கள் திருவடிகளைச் சிந்திக்காமல் நான் முற்றிலும் அழிந்திடத்தான் வேண்டுமோ! இது நியாயமோ, ஓ பெருமானே, இது நீதியோ? கூர்மையும் வீரமும் கொண்ட வேலாயுதத்தை ஏந்திய அரசே! மின்னல் கொடிபோன்ற குறமகளைத் (வள்ளியைத்) தழுவும் குணமலையே!

நமக்கு 2 சரீரம் உண்டு : ஸூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம். எலும்பு, மஜ்ஜை, நரம்பு, சதை, இரத்தம், தோல் ஆகியனவற்றால் ஆன நம் பௌதீக உடல் - ஸ்தூல சரீரம். சூட்சும சரீரம் பதினேழு அங்கங்களைக் கொண்டது. அவை பஞ்ச ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள் அல்லது ஐந்து உணரும் கரணங்கள்), பஞ்சக் கர்மேந்திரியங்கள் (ஐந்து செயற்கரணங்கள்), பஞ்சப் பிராணன்கள் (ஐந்து பிராணன்கள்), மனம் (மனது), புத்தி (அறிவு) ஆகும். இவை அனைத்தும் சேர்ந்ததுதான் சூட்சுமச் சரீரம். .

ஸூக்ஷ்ம சரீரத்தின் உதவியாலேயே இந்த ஸ்தூல சரீரம் இயங்குகிறது.

இதைத் தவிர காரண சரீரம் என்று ஒன்று உண்டு. எந்த சரீரத்தைப் பற்றி விளக்க முடியாதோ, எதற்கு ஆரம்பம் இல்லையோ, எதில் அறியாமை குடி கொண்டிருக்கிறதோ, எது மற்ற இரண்டு சரீரங்களுக்கும் காரணமாக இருக்கிறதோ, எது தனது உண்மைத் தன்மையைப் பற்றி அறியாமலிருக்கிறதோ, எது மாறுபடாத உருவில் இருக்கிறதோ - அதுதான் காரண சரீரம்.

ஸ்தூல, சூட்சும சரீரங்களுக்குக் காரணமாக இருப்பது காரணச் சரீரம். காரண சரீரத்தில், ஸ்தூல- சூட்சும சரீரங்கள் விதைபோல் மாற்றத்துக்கு முந்தைய நிலையில் இருக்கின்றன. ஸ்தூல சரீரத்துடன் கூடிய விழிப்பு நிலையிலும், சூட்சும சரீரத்துடன் இருக்கும் கனவு நிலையிலும் நம்மைப் பற்றி நாம் அறிவதில்லை. ஆழ்ந்த உறக்க நிலையில் காரணச் சரீரத்துடன் கூடி இருக்கையில் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் நமக்கு எதுவும் தெரிவதில்லை. ஸ்தூல சரீரத்தைப் பற்றிக்கொண்டிருக்கும்போது நாம் கனவு காண்பதோ, உறங்குவதோ இல்லை. ஸ்தூல சரீரத்தின் துணையால் விழிப்பு நிலையில் நுகர்பொருள் நிறைந்த இவ்வுலகை அனுபவிக்கிறோம். சூட்சும சரீரத்தின் உதவியால் கனவை அரங்கேற்றி அதை அனுபவிக்கிறோம். காரண சரீரத்துடன் இருக்கையில் அங்கு எதையும் காண்பதோ, தோற்றுவிப்பதோ இல்லை. அங்கு ‘ஆனந்தம்’ மட்டுமே அனுபவமாகிறது.

காரண-சரீரத்தில்தான் அநேக ஜன்மங்களாகச் செய்யப்பட்ட கர்மங்களின் பலன்கள் ‘சம்ஸ்காரங்கள்’ என அழைக்கப்படும் பதிவுகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளன. ஆழ்ந்த தியானத்தினால், அறியாமை எழுப்பப்படும்பொழுது, இந்த ‘சம்ஸ்காரங்கள்’ தூண்டப்பட்டு பாம்புபோல் சீறி, காரண நிலையிலிருந்து சூட்சும மற்றும் ஸ்தூல நிலைகளுக்கு வெளிவந்து, பக்தனுக்கு மனதை ஒருமுகப்படுத்த முடியாத நிலை, முன்பு அனுபவித்த இந்திரிய போகங்களைத் திரும்பத் திரும்ப அனுபவப்பதில் தீவிர ஆசை, போன்ற பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் உண்டுபண்ணுகின்றன. முருகனுடைய கூர்மையான ஞானவேலால் மட்டுமே கிரௌஞ்ச மலையைத் துளைத்து, சூரபத்மன் மற்றும் அவன் சகோதரர்களையும் அழித்தது போல் நம் அஞ்ஞானத்தை அழிக்க இயலும்.

adiyaik kuRiyAdhu aRiyAmaiyinAn
midiyak kedavO muRaiyO muRaiyO
vadi vikrama vElmagibA kuRamin
kodiyaip puNarum guNa bUdharanE!23
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.24
kUrvEl vizhi mangkaiyar kongkaiyilE
sErvEn aruL sEravum eNNum adhO
sUr vErodu kundRu thoLaiththa nedum
pOrvEl purandhara bUbadhiyE!24

Will my mind being inclined to hug the breasts of women, who have eyes as sharp as the lance, have the good fortune of thinking of obtaining Your Sacred Grace? O, The Supreme Ruler of the world, You have the long and great warring lance, which pierced through the roots and destroyed the mango tree and the Krauncha hill, into which the demon Soorapanman had transformed himself!

கூரிய வேல் போன்ற கண் பார்வையை உடைய மங்கையர் கொங்கைகளில் சேர்ந்து தழுவி வாழ்ந்தவனாகிய எனக்கு, உனது கிருபையைத் தந்தருள நீ நினைக்க மாட்டாயோ? சூரபத்மன், அவனது குலம், கிரௌஞ்ச மலை ஆகிய அனைத்தையும் துளைத்தழித்த போரில் வெல்லவல்ல நீண்ட வேலாயுதத்தைத் தாங்கிய முருகப் பெருமானே! இந்திர லோகத்தின் தலைவனே!

ஓ கந்தப் பெருமானே! நீங்கள் தங்கள் வேலை சூரபத்மன் மீது எறிந்து, அவனை அழிப்பதன் மூலம், இந்திரனைக் காப்பாற்றினீர்கள். அதுபோல், என் மீது தாங்கள் இரக்கம் கொண்டு தங்கள் கிருபையின் மூலம், எனது இழிவான காம இயல்புகளை அழித்து, நான் தங்கள் அருள்பெற நினைக்கும் பாக்கியத்தை அருள்வீர்களாக.

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.25
meiyE ena vevvinai vAzhvai ugandhu
aiyO adiyEn alaiyath thagumO
kaiyO ayilO kazhalO muzhudhum
seiyOi mayilERiya sEvaganE!25

Is it right that I should wander, by regarding this life of unrelenting karmas as the real life, and take delight in it? O, Lord, not only Your Sacred Hands, but also the weapon of lance, held by Your hand, and the Sacred Feet, adorned with heroic anklets, are all red, and You are the Great warrior riding on Your vehicle of peacock!

கொடிய கர்மவினைகளால் ஆளப்படும் இவ்வாழ்வை உண்மையெனக்கருதி அதில் மகிழ்ந்து அடியேன் உழலுதல் நீதியோ? திருக்கரங்கள், கையில் விளங்கும் வேலாயுதம், திருவடிகள் இவை மட்டுமல்லாமல் திருமேனி முழுவதும் செம்மை நிறம் கொண்டவனே, மயில் ஏறிய மாவீரனே!

பக்தர்களுக்கு பாதுகாப்பும் வரங்களும் தரும் முருகப் பெருமானின் அபய கரங்கள் செம்மை நிறம். கந்தப் பெருமானின் ஞான வேல், அசுரன் சூரபத்மனை துளைத்துச் சென்றதால் அதில் இரத்தம் தோய்ந்து சிவப்பாக ஆனது. தேவர்களும் பக்தர்களும் கந்தப் பெருமானின் முக்தியை அளிக்கும் பாதங்களைத் தொழுதுகொண்டிருப்பதால், அவை சிவப்பாகிவிட்டன. கரங்கள், வேல், பாதங்கள் ஆகியவைகள் மட்டுமன்றி, முருகப் பெருமானின் முழு சரீரமுமே செம்மை நிறம். செம்மை என்பது நேர்மை, பெருமை, அழகு, ஆகியவைகளைக் குறிக்கிறது, அதாவது, பூரணத்துவம், அனைத்திலும் முழுமைபெற்ற நிலை. எனவே, இந்த செய்யுளில் முன்வைக்கும் பிரார்த்தனை இதுவே: “ஓ பெருமானே! நீங்கள் பரிபூரணமானவர். என்னை இந்த அபூரணத்துவ உலகிலிருந்து விடுவிப்பாயாக. நானும் பூரணத்துவத்தை அடைந்திடும் சரியான வழியை, உண்மை வாழ்வைக் காட்டுவாயாக. கர்மவிதியின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட உன்னுடைய தஞ்சம் புகும் எனக்கு அக்கர்மவிதிகளிலிருந்து முழுவதுமாக விடுவிப்பாயாக.”

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே