கந்தர் அநுபூதி 46-51

Learn The Song


ராகம் : சுருட்டி

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலமானவை தீர்த்து எனை ஆள்
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறைநாயகனே!46
enthAyum enakku aruL thandhaiyum nee!
sindhAkulamAnavai theerththu enai AL
kandhA! kadhirvElavanE! umaiyAL
maindhA! kumarA! maRainAyaganE!46

You are my mother and my merciful father. Wipe out all my turmoils and take possession of me. O Lord Skanda! O Lord with the luminous Vel! O Son of Uma Devi! O Kumara! O Lord of the Vedas!

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.47
ARARaiyum neeththu adhanmEl nilaiyaip
pERa adiyEn peRumARu uLadhO
seeRa varisUr sidhaiviththu imaiyOr
kURA ulagam kuLirviththavanE!47

Am I lucky to attain (through Your gracious conferment) the stage that transcends the thirty-six levels of spiritual philosophical systems (namely, 24 systems concerning soul, seven systems concerning knowledge, and five systems concerning Sivam)? O, Lord! You destroyed Soorapanman who came hissing in anger, and made the celestials' golden world a cooler habitat for them! சீறாவரு (seeRavaru) : charging angrily; ஆறு ஆறையும் நீத்து அதன்மேல் நிலையை (ARu ARaiyum neeththu adhan mEl nilaiyai) : The transcendental and blissful state that lies beyond the thirty-six tattvas; travelling above the six lotus-like chakras called mooladhara, swadishthana, manipooraka, anagata, visuddhi, Agna and reaching up the Sahasrara where Shiva and Shakti merge their forms; கூறா இமையோர் உலகம் (kURA imaiyOr ulagam) : the land of celestials who spoke, complaining of their troubles;

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.48
aRivu ondRu aRa nindRu aRivAr aRivil
piRivu ondRu aRa nindRa pirAn alaiyO
seRivu ondRu aRa vandhu iruLE sidhaiya
veRi vendRavarOdu uRum vElavanE!48

Those who relinquish their identity with the body and the materialistic world and immerse themselves in the Siva-experince, Lord merges Himself in their consciousness, not for a moment separating from it.

Those who cast away completely the ego-sense (identifying with the limited self or 'I') and realize You by spiritual wisdom, You merge, without the least separation, into those Yogi's consciousness. Lord, You hold the lance, and You abide with the sages who have conquered the mental illusion, destroying the dark ignorance and the close worldly relationships come to an end! வெறி வென்றவர் (veRi vendRavar) : those who have conquered the mental delusion caused by avidya;
aṛivu is consciousness about one’s Self (tannai ariyum arivu). The form of the soul is aṛivu. Aṛivu occurs due to Divine grace (arul). Such an aṛivu is neither created nor destroyed and has only itself as its substratum. It is aware of its own nature (aṛive aṛivai aṛikinṛathu). It does not need any external agent to facilitate its own identification. It is the expansive effulgence (akanda oḷi). Aṛivu realizes its nature as the eternal light within.

தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.49
thannam thani nindRadhuthAn aRiya
innam oruvarkku isaivippadhuvO
minnum kadhirvEl vigirthA ninaivAr
kinnam kaLaiyum krubaisUzh sudarE!49

The Supreme Reality which is Alone by Itself and Independent has to be experienced by oneself (by being It); Could it ever possible for me teo tell others the nature of the unique Supreme Being? Oh, Lord! You hold the lustrous lance, and You are indeed unique, with varied forms! You are the Great Effulgence of compassion, which removes the sorrows of those who meditate upon You! விகிர்தன் (vigirthan) : one who can take several forms; One of strange deeds - different from that of the souls. வேறுபட்டவன்; விசித்திரமானவன்; ஒப்பு நோக்குக: 'விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர்தர்' (உடையவர்கள் திருப்புகழ்)

மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.50
madhi kettu aRa vAdi mayangki aRak
gathi kettu avamE kedavO kadavEn?
nadhi puththira njAna sugadhiba ath
thidhi puththirar veeRu adu sEvaganE!50

Am I destined to be dim witted, distressed (in mind) and deluded, losing the path to salvation which accrues from a virtuous or righteous life? (No; it cannot happen.) O, Lord! You are the Beloved Son of the river Ganges! You are the eternal abode of the bliss of divine wisdom! You are the Supreme Hero, who ruined and destroyed the pride of demons, who were the sons of a woman named Thithi!

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.51
uruvAi aruvAi uLadhAi iladhAi
maruvAi malarAi maNiyAi oLiyAy
karuvAi uyirAik gadhiyAi vidhiyAi
guruvAi varuvAi aruLvAi guganE!51

You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower, having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the embryo, where the soul abides, and You are also the body and soul! You are the abode of mukthi (liberation) and You are also the destiny, which drives the soul to the abode of mukthi! May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow me grace!

ஆறுமுகமும் பன்னிரு விழியும் கொண்ட சகள வடிவாகவும், குணம் குறி நாமம் அற்ற அகளமாயும், உண்டு என்பார்க்கு உள்பொருளாயும், இல்லை என்பார்க்கு இல் பொருளாயும், மலராயும், அம் மலரின் மணமாகவும், மாணிக்கமாகவும், அதன் ஒளியாயும், சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்துத் தாங்குபவனும், சிருஷ்டிக்கும் சமயம் சகல உயிர்களுக்கும் உயிராய், ஆன்மாவாய் திகழ்பவனும், அவ்வுயிர்களின் வினைப்பயனாய் உள்ளவனும், முத்தி நிலையில் அவ்வுயிர்கள் சென்றடையும் நிலையாக உள்ளவனும் திகழும் கந்தக் கடவுளே, நீயே குருவாக வந்து என்னை ஆட்கொண்டவன்.('திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் உரை)
அருவம் = ஆகாயம் போல் எங்கும் பரந்து ஒன்றாயிருக்கும் தன்மை. இது நிர்குணப்ரம்மம் எனப்படுகிறது. அருவுருவம் = சிவலிங்கம், சாலக்ராமம் போன்று தெளிவான உருவமின்றி அதேசமயம் கண்ணுக்குப் புலப்படும்படி இருக்கும் நிலை. உருவம் = சிவ, விஷ்ணுவாதி வடிவமாக எழுந்தருளும் நிலை.இது ஸகுணப்ரம்மம் எனப்படுகிறது.
மேலும் படிக்க : உருவாய் அருவாய்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே