கந்தர் அநுபூதி 16-20

Learn From Guruji



ராகம் : கேதாரம்

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.16
pEraasai enum piNiyil piNipattu
Oraa vinaiyEn uzhala thagumO
veeraa muthusoor padavEl eRiyum
sooraa sura lOka thutanDaranE16

Should I get muddled in inappropriate acts because of greed, which makes me unable to discriminate between what is good and what is bad? You are gallant; You are the protector of the celestial world who hurled the lance at the ancient demon Soorapanman! ஓரா வினையேன் (Oraa vinaiyEn) : incapable of discerning between right and wrong acts;

பேராசை எனும் (ஆழ்ந்து கிடக்கும் ஆசைகளின்) பிணியில் கட்டுண்டு, அதனால் நல்லது கெட்டதென்று ஆய்ந்தறியும் கூரறிவில்லாத தீவினையேனாகிய நான், பிறப்பு இறப்பு எனும் சுழற்சியில் சிக்கி உழலுவது (உமது பெருமைக்குத்) தகுதியாகுமோ? "ஓ, வீரனே! நெடிது காலம் வாழ்ந்த அசுரன் சூரபத்மன் அழியும்படி வேலாயுதத்தை எறிந்த சூரனே! தேவலோகத்தைக் காப்பாற்றியவனே!

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.17
yaam Othiya kalviyum em aRivum
thaamE peRa vElavar thanDathanaal
poomEl mayal pOy aRam mey puNarveer
naamE nadaveer nadaveer iniyE17

The learning we acquired and the wisdom we possess were given by Muruga -- for His own service. (Because of the infinite grace of Lord Velayudha, we have received education and acquired knowledge and we have to use this knowledge to know Him better.) So, you should get rid of the illusion arising from desire, carry out righteous deeds and practice truthfulness. Moreover, with the tongue, bestowed upon you by the Lord, keep on reciting the glory of the Supreme Being. பூ(மி)(boo(mi)) : the earth;

நாம் கற்ற கல்வியும், நமது அறிவும் வேலாயுதப் பெருமான் தாமே நமக்கு அருளியது. எனவே, இனிமேல் உலகத்தின்மேலுள்ள மயக்கத்தை ஒழித்து, பரம்பொருளுடன் முழுதும் ஒன்றுபட்டு இரு; அவன் மகிமைகளை என்றும் எப்பொழுதும் நாவினால் பாடிக் கொண்டே இரு
அற மெய்ப் புணர்வீர் = பெயர் மற்றும் உருவத்தால் மட்டும் வேறுபடும் இவ்வனைத்து உலகியல் பொருள்களின் பின்புலத்தில், அவைகளுக்கு ஆதாரமாயிருக்கும் மெய்ப்பொருளான அப்பரம்பொருளுடன் நிரந்தரமாக ஐக்கியமடைந்து உய்வாயாக. தர்மத்தையும் ஒழுக்கத்தையும் உண்மையையும் கடைபிடித்து வாழ்வாயாக.

உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.18
uthiyaa mariyaa uNaraa maRavaa
vithimaal aRiyaa vimalan puthalvaa
adhikaa anakaa abhayaa amaraa-,
pathi kaavala soora bhayankaranE18

Lord, You are the Divine Son of the pure being Lord Siva who neither takes birth nor dies, neither remembers nor forgets, and whom neither Brahmaa nor Vishnu knows. You are the ultimate Supreme Being, who is sinless, who grants refuge to all devotees, protects the celestial world, and causes fear to the demon Soorapanman! அதிகா (athigaa) : supreme; அநகா (anagaa ) : sinless; பிறப்பு இறப்பு இல்லாத, நினைப்பும் மறப்பும் இல்லாத, பிரமனும் திருமாலும் தேடிக் காண முடியாத, இயற்கையாகவே மலங்களில் நின்று நீங்கிய சிவபெருமானின் குமாரனே, ஒப்புயர்வற்ற மேன்மை, ஏற்றம், பொலிவு இவைகளை உடையவனே, பாபமற்றவனே, எல்லா உலகங்களும் சரண் அடையும்படியான மேன்மை உடையவனே, தேவலோக ரட்சகனே, அசுரர்களுக்கு அச்சத்தை விளைவித்தவனே.

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.19
vadivum Dhanamum manamum guNamum
kudiyum kulamum kudi pOgiyavaa
adi anDam ilaa ayil vEl arasE
midi enRu oru paavi veLi padinE19

When the miserable poverty appears, how strange is it that beauty as well as wealth, good mind and character, and the greatness of family and lineage also desert a person, oh Lord Supreme Ruler of the Universe who holds a sharp lance and who has no begining or end!

கூரிய வேலாயுதத்தை ஏந்தியவாறு பிரபஞ்சத்தை ஆளும் ஆதியும் அந்தமும் இல்லாத அரசரே! 'வறுமை' என்னும் ஒரு பாவி தோன்றியவுடனே அழகும் செல்வமும் நல்ல மனமும் குணமும் குடும்பத்தின் பெருமையும் குலத்தின் பெருமையும் ஒருவரை விட்டுப் போய்விடுகின்றனவே!
குடி போகிய ஆ (ஆச்சரிய குறிப்பு) --(அவனை விட்டு) வேறிடம் சென்று விடுகிறதே, என்ன ஆச்சரியம்!

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.20
arithaakiya mey poruLukku adiyEn
urithaa upaDEsam uNartthiyavaa
viri thaaraNa vikrama vEL imaiyOr
puri thaaraka naaga puranDaranE20

O, Lord, (It is, indeed, a matter of wonder that) You have graciously considered me as a suitable person to receive the elusive, Real Truth, and have graciously imparted Your teaching to me! O, Lord! You are the Supreme Pranava Being, strong and valourous, revered by the celestials and saviour of the celestial world!

"அடைவதற்கு மிகவும் அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேன் (அதை அடைவதற்கு) உரியதாகும்படி எனக்கு நீவிர் உபதேசம் உணர்த்தியருளியது வியக்கத்தக்கதே! ஓ பெருமானே! எங்கும் விரிந்து எதையும் தாங்கும் வலிமை பெற்றவனே, பராக்கிரமத்தை உடையவரே! அனைவராலும் விரும்பப்படுபவரே! இமைத்தல் எனும் தொழில் இல்லா தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, விண்ணுலகத்தைக் காப்பவனே!”

இமையோர் புரி தாரக (imaiyOr puri thaaraka ) : interpreted in two ways:
1. the taraka/pranava mantra that celestials like புரி (puri) : like/recite; தேவர்கள் விருப்பத்துடன் தியானிக்கும் பிரணவப் பொருளே (ஓங்கார மந்திரமே)!
2. the commander who protects the land of the celestials; தேவலோகத்தைத் தாங்கிக் காப்பாற்றுபவரே!

தாரகம் - பிரணவப் பொருள்; தாரகன் - பிரணவப் பொருளில் விளங்குபவன், முருகன்;

நாக புரந்தரன் (naaga puantharan) : one who supports/protects the land of the celestials; purantharan means one who protects or commander, and is usually used to refer Indra. நாக(ம்)(naaga(m)) : heaven, விண்ணுலகம்;.
Since இமையோர் புரி தாரக and நாக புரந்தரன் can both mean protector of the heaven or the land of the celestials, நாக புரந்தரன் can be interpreted as commander of the devas/தேவ சேனாதிபதி.

விரி தாரண (viri dhaaraNa) : holding firmly the expansive; strong and steady; எங்கும் விரிந்து எதையும் தாங்குபவன்;

விக்ரம (vikrama) : strong; வேள்(vEL) : loved by all;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே