185. சரவண பவநிதி



ராகம் : பிருந்தாவன சாரங்காதாளம்: ஆதி
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபரஎனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுறவருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெறவருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவதுமொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவியவடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவருபெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை உமையவ ளருளியமுருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு டனமரு மரகர சிவசிவபெருமாளே.

Learn The Song



Raga Brindavana Saranga (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 P M1 R2 G2 S

Paraphrase

சரம் = தர்ப்பை; வனம் = காடு; பவன் = வெளிப்பட்டவன்; சரவணபவ என்பதற்கு 'நாணல் படுக்கையிலே ஜெனித்தவன்' என்பது பொருள். நாணல் என்பது தர்ப்பை (reed grass) சித்தர்கள் நீண்ட நல்ல தவம் செய்ய தர்ப்பாசனம் பயன்படுத்துவார்கள். வெயில் காலங்களிலும் அழியாத் தன்மை கொண்ட தர்ப்பை மின்சாரம் பாய்வதை தடை செய்யும். ஆதலால் சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த அந்த மின் ஆற்றல் தர்ப்பையில் தங்க, உலகம் உய்ய முருகன் அவதாரம் செய்கிறான்.

அருணகிரிநாதர் வேண்டுகிறார்: 'சரவணபவன் என்னும் என்றும் அழியாத சேமநிதியே! கடல் சூழ்ந்த உலகினில் தோன்றுகின்ற உயிர்கள் படுகின்ற துன்பங்கள் கலக்கம் முதலிய இடர் அகலவும், நிலைபெறவும், நற்கதியும் இறைவனுடைய திருவடி தருவதுமாகிய நாள் ஒன்று அடியேனுக்கு உண்டாகுமோ?

சரவணபவ நிதி அறுமுக குருபர எனவோதித் தமிழினில் உருகிய (aravaNa bavanidhi aRumuga gurupara enavOdhith thamizhinil urugiya) : "Oh SaravanNabhava, Our Treasure, Six-faced Kumara, Great Master", these names thus uttered with loving devotion in Tamil,

அடியவர் இடமுறு சனன மரணம் அதை ஒழிவுற சிவமுற (adiyavar idamuRu janana maraNamadhai ozhivuRa sivamuRa) : by Your devotees would end their cycles of birth and death and take them to SivA's Land,

தருபிணி து(ள்)ள எமதுயிர் சுகமுற வரம் அருள்வாயே (tharupiNi thuLa emadhuyir sukamuRa varam aruLvAyE) : so that the diseases arising from karma leap away. Grant us this boon to make our lives happy! வினைகள் தருகின்ற துன்பமானது துள்ளி ஓடவும், எங்கள் உயிர் இன்பம் அடையவும், வரத்தை வழங்குவீர். சிவம் உற = சிவப்பேறு அடையவும்; தருபிணி துள = வினைகள் தருகின்ற துன்பமானது துள்ளி ஓடவும்; எமது உயிர் சுகம் உற = எங்கள் உயிர் இன்பம் அடையவும்,

கருணைய விழிபொழி ஒருதனி முதலென வரு கரி திருமுகர் துணைகொளும் இளையவ (karuNaiya vizhi pozhi oru thani mudhalvena varu kari thirumugar thuNaikoLum iLaiyava) : Your eyes are full of compassion and grace! You are the younger brother of the unique primary God, elephant-faced VinAyagA, who always accompanies You; கரி (kari) : elephant;

கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா (kavidhai amudha mozhi tharubavar uyirpeRa aruL nEyA) : The souls of the devotees dedicating their sweet poems to You are assured of salvation by Your grace and love!

கடலுலகினில் வரும் உயிர்படும் அவதிகள் கலகம் இனையதுள கழியவும் (kadal ulaginil varum uyir padum avadhigaL kalagam inaiyadhuLa kazhiyavum) : To remove the sufferings that the lives in this world surrounded by seas go through, and the resulting confusion and similar agonies they face,

நிலை பெற கதியும் உனது திருவடி நிழல் தருவது ஒருநாளே ( nilaipeRa gathiyum unadhu thiruvadi nizhal tharuvadhum orunALE) : will You grant me the shadow of Your graceful feet one of these days, so that I can attain eternal bliss?

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர (thiripuram eriseyum iRaiyavar aruLiya kumara) : Oh KumarA, You were gifted to us by Lord SivA who burnt down Thiripuram!

சமரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரியிலும் வட மலையிலும் உலவிய வடிவேலா (samarapuri thaNigaiyu migum uyar sivagiriyilum vada malaiyilum ulaviya vadivElA) : At the sanctums of ThiruppOrUr, ThiruththaNigai, the great Sivagiri and ThiruvEngkadam, You have Your abode, Oh Lord with a sharp spear!

தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் (dhinamum unadhuthudhi paraviya adiyavar manadhu kudiyum) : You reside in the hearts of Your devotees who sing Your praise daily!

இரு பொருளிலும் இலகுவ (iru poruLilum ilaguva) : You also dwell in their two wealths, material and spiritual! அருட்செல்வம் பொருட்செல்வம் என்ற பொருள்களிலும் விளங்குபவரே!இருபொருள் = கல்வியும் செல்வமும்; சட பொருள்களிலும் உயிரும் உணர்வும் கூடிய பொருள்களிலும்;

திமிர மலமொழிய தினகரன் எனவரு பெருவாழ்வே (thimira malamozhiya dhinakaran ena varu peruvAzhvE ) : You come as the Sun of Wisdom to dispell the darkness of our arrogance; இருள் மயமான ஆணவமலம் நீங்க ஞான சூரியனாக வருகின்ற பெருவாழ்வே! திமிர ( thimira) : dark;

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் (aravaNai misaithuyil narahari nediyavar) : Vishnu , the tall one, who sleeps on the bed of AdhisEshan, who is also Narasimhan, நரகரி (நர + அரி)(nara ari ) : human+lion, Narasimha avatara;

மருகனெனவெ வரும் அதிசயம் உடையவ (marugane navevarum adhisayam udaiyava) : You have come as His nephew, and You are full of wonders!

அமலி விமலி பரை (amali vimali parai) : One who removes all slags of the mind, One who is the purest and One who is supreme,

உமையவள் அருளிய முருகோனே (umaiyavaL aruLiya murugOnE) : that UmAdEvi, PArvathi, has delivered You to us, Oh MurugA!

அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென (athala vithalamudhal gidugidu giduvena) : The seven lower worlds, starting from Athala and Vithala, trembled,

வரு மயில் இனிதொளிர் (varumayil inidhoLir) : when Your Peacock flew over, with You, full of light, mounted on it,

ஷடுமையில் நடுவுற (shadumaiyil naduvuRa) : In the middle of the ShaNmugA Hexagonal Wheel (ShadkONam),ஆறு அக்ஷரங்கள் அடங்கிய ஆறு கோணமாகிய யந்திரத்தின் இடையில் முருகன் ஒளிமயமாக விளங்குபவன்.

அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே.(azhaginudan amarum arahara sivasiva perumALE. : You are seated beautifully, Oh Harahara Siva Siva, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே